செயலிழந்த சுதந்திரம்.
பாரதிராமன்.

வாங்கிவிட்டோம் கடன்
திருப்பத்தான் தெரியவில்லை
கொடுத்துவிட்டோம் வாக்கு
காப்பாற்றத்தான் தெரியவில்லை
பெருகிவிட்டோம் கூட்டம்
சுருங்கத்தான் தெரியவில்லை
எண்ணிவிட்டோம் எண்ணற்றவை
எய்தத்தான் தெரியவில்லை
வெறுத்துவிட்டோம் வேண்டாதவை
விலக்கத்தான் தெரியவில்லை
தொலைத்துவிட்டோம் தொன்மங்கள்
தேடத்தான் தெரியவில்லை
தொடங்கிவிட்டோம் தொழில்
தொடரத்தான் தெரியவில்லை
பெற்றுவிட்டோம் சுதந்திரம்
பேணிக்காக்கத்தான் தெரியவில்லை.
bharathiraman@vsnl.com