திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081211_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…

பி.கே. சிவகுமார் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.) சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள், எதிர்வினை அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)…

தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை!

ஆல்பர்ட் தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை! எங்கு? இந்தியாவில் நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில்! அதனால்தான் நுகர்வோர் ஒரு "அரசன்"போல இங்கு பவனி வருகிற சூழல் உள்ளது. சில‌மாத‌ங்க‌ளுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவ‌னின்…

திபேத்தியப் பழமொழிகள்

தேவமைந்தன் இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப் பாலைவனமான மலைப்பகுதிதான் ‘லே’[Leh] எனப்படும் லடாக்கின் தலைநகர். இந்த ‘லே’நகரில் எப்பொழுதும் மிகுதியான குளிரும் மிகுதியான வெப்பமும் மாறி…

அறிவிப்புகள்

திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்

அறிவிப்பு:சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம் நினைவுகளைப் பகிர்வோர்: விடுதலை இராசேந்திரன் இரா.அதியமான் அ.மார்க்ஸ் ஞாநி ஆதவன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? [கட்டுரை: 46 பாகம்-1]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்ச விண்வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தது ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத்…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "நாமெல்லாம் சுதந்திரம் வேண்டும் என்று முழக்கி வருகிறோம். அந்தச் சொல்லை நாமெல்லாம் பயன்படுத்தும் போது ஒரே பொருளை மனதில் எண்ணுவது இல்லை. விடுதலை என்றால் தாம் விரும்பியபடி தமக்கும்…

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

காமெடி சிறுகதைப் போட்டி

கே.பாலமுருகன் ஆர்பாட்டம் சங்கம் முதன் முதலாக சிறுகதைப் போட்டி நடத்தவிருப்பதாக உறுப்பினர்களுக்குள் கலந்துபேசி முடிவெடுக்கப்பட்டது. ஆர்பாட்டம் சங்கமும் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட எடுத்துக் கொண்ட தீர்மானத்தின் முதல் கட்ட நடவடிக்கைதான் இது. சங்கத்தின் தலைவர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு

இரா.முருகன் எட்டு மணிக்கு வருவீர்னு பார்த்தா உச்சி கழிஞ்சு வந்திருக்கீர். டோக்குமெண்ட் மிச்சத்தை யாராக்கும் பிரதி பண்றது? நான் பாட்டுக்கு அலைபாஞ்சுண்டு கிடக்கேன். நீர் பரப்பிரம்மமா நிக்கறீரே நடேசன். சுக நித்திரையா? பகல் வெளிச்சமேறினது…

சுய அபிமானம்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் என் கணவரை குணக்குன்று என்றும், என்னை மனைவி போல் அல்லாமல் சிநேகிதியாக பார்த்துக் கொள்வார் என்றும், எல்லா விதத்திலேயும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்றும், எனக்காகவே கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த…

வாழைஇலை

வே பிச்சுமணி நகரின் 2வது தெருவில், வாடகை வீட்டில் வசிக்கும் சங்கர் தனது வீட்டினை நோக்கி விரைவாக வருவதை தூரத்திலே பார்த்துவிட்ட பாஸ்கர், வாசலிருந்து இறங்கி, கேட் அருகே வரவும், சங்கரும் கேட் அருகே…

இரத்த பாசம்

ராமலக்ஷ்மி, பெங்களூர்."ஏலே மாரி!” என்ற குரலுடன் தொடர்ச்சியான சைக்கிள் மணியோசையும் கேட்க ‘யாரோ கூப்புடுதாக்ல இருக்கு. என்னான்னு பாருமய்யா” தாயி கணவனை உலுக்கினாள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தான் மாரி. “அடடே! டீக்கடை…

கவிதைகள்

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு

தீபச்செல்வன் -------------------------------------------------------------------------- தீபச்செல்வன் சவப்பெட்டியின் முகத்தோடிருக்கிற சுவர் முட்டிய அறைகளின் மூலையில் எங்கோ இருப்பவர்களுக்காய் தூவிய பூக்கள் காய்ந்து குவிந்து கிடக்கின்றன. நாளுக்கு ஒரு மாதிரியாய் போர் வகுக்கிற வியூகங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது நீ…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தக் கரங்களைப் பார்த்தாயா ? உலகளந்த கைகள் இவை ! தாதுப் பொருளையும் தானியங் களையும் பிரித்தவை இவை ! போரையும் சமா தானத்தையும் உண்டாக் கியவை…

தாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெய்யாக உன்னை உணர்வது என்றால் என்ன வென்று எனக்குத் தெரிய வில்லை ! ஆயினும் உனது வீட்டு வாசல் அருகே வந்து தூசியில் விளையாடினேன் மாசின்றி மகிழ்வோடு…

பள்ளிப்படை கோவில்

ஆதவாமேற்கூரை சுமையினைத் தாங்கமுடியாத மண்டபத்தூணருகே தூங்கி வழியும் கோட்டான்களின் நிழலசைவை ரசித்தபடி வடிந்து கிடந்தது நிலவு மேற்புறச் சுவர்முட்டும் காட்டுமரத்தின் கிளையொன்று சிதிலமடைந்த ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது கல்லிடுக்குகள் சிதைந்து தூணிட்ட…

கடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 மீன்கவ்விய உற்சாகம் ஜிவ்வென எழும்பி காற்றில் நீச்சல் 2 கிழக்கே சிவப்பு கிரணம் தொட்டு பனியின் நாணம் 3 கிழக்கே உருண்ட இடி மேற்கு நோக்கிப் புரள நடுங்கும் யானைக்…

“வைஷ்ணவ ஜனதோ”

பாஸ்கர் காந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது உண்மையான வைணவன் ஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில் அடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும் அவன் சேவை செய்ய எப்போதும் தயாராக…

வேதவனம் விருட்சம் 14 கவிதை

எஸ்ஸார்சி தியானத்துக்கு தடைகள் உன்னலிருந்து அப்புறம் பாத்துக்கலாம் இப்ப அதுக்கென்ன அவசரம் என்பதுவாக. தியானத்தின் போதே எங்கும் இருளாய் உணர்தல் வியர்வை யொடு வாயில் எச்சில் ஊருதல் பேரும் உருவும் ஒழித்தும் பிரம்மம் தென்படவில்லை…

இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.

ஹெச்.ஜி.ரசூல் கடல்முழுவதையும் விழுங்கிய பிரபஞ்சத்தின் வாய்க்குள் அகால பேரண்டம் மண்ணின் இருளறையில் விந்தை தெறித்தபோது தன் இருப்பைப் பிளந்து துளிர்த்தது செடி. இந்த கிண்ணம் நிறைய சந்தோசம். உயிரமுதை கடைந்தெடுக்கும் பிறப்பொன்றும் எளிதல்ல தொட்டுத்…

அண்ணா நூற்றாண்டுவிழா திருவிழாக்கள்

புதியமாதவி, மும்பை. திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன். தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்து போன உறவுகளை அல்ல தொலைக்கப்பட்ட அண்ணாவை. அண்ணாவின் எழுத்தும்…

சக்திக்குள்ளே சிவம்…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நாடெதுவென்றபோதும் நாணம்கொள்ளும் பெண்கள் அழகு என்றெல்லாம் எழுதி வந்தவன் ஹரிகதா காலாட்சேபம் சீதாக் கல்யாணம் என்று தம்பதி சமேதராய் தரிசனம் தருவதும் ஒன்பது மணி நேரமும் அலுவலகத்தில் ஓயாமல் பேசும்…