திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020610_Issue

அரசியலும் சமூகமும்

அரிதார புருஷர்களின் அவதார மோகம்

பொன் முத்துக்குமார் சில வாரங்கள் முன்பு ராஜ்ஜியம் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. (முறைக்காதீர்கள் தயவு செய்து) பேரூந்து மற்றும் புகைவண்டி நிலையங்களில் இறங்குபவர்கள் எல்லோருக்கும், அவர்கள் பாதம் தரையில் பாவுமுன்னே தங்கள் நிறுவனத்திலேயே வேலை…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)

ஜெயமோகன் பகுதி : ஒன்று மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள். மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய…

பார்வை – கிராமிய அழகியல் மனநிலை

வெளி ரெங்கராஜன் 'குன்னாங் குன்னாங் குர்ர்....... ' என்கிற சிறுவர் கதையாடல் மற்றும் நாடக நிகழ்வுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொங்கன்குளம் என்ற கிராமத்துக்கு சென்றிருந்த போது நான் முதலில் எதிர்கொண்டது ஆலங்குளத்திலிருந்து கொங்கன்குளம்…

பணக்காரரும் ஏழையும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) அனல் வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப் பொழுது. பெரிய நகரத்தின் இரைச்சல் காற்றை நிறைத்தது. கடற்காற்று வெதுவெதுப்பாக வீசிக் கொண்டிருந்தது. எங்கும் பெட்ரோல் மற்றும் தாரின் வாசம்.…

அடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .

எச். பீர்முஹம்மது 'அடையாளம் ஒன்று இருக்கும் போது நம்பிக்கை ஒன்று பிறந்து வருகிறது நம்பிக்கைகளற்ற அடையாளங்கள், அடையாளங்களற்ற நம்பிக்கைகள் தவிர எஞ்சுவது வேறொன்றுமில்லை நாம் நம்பிக்கையற்ற அடையாளத்துக்குள் இருக்கும் நாளே மகிழ்ச்சியானதாகும். ' வாழ்க்கையின்…

இந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)

மஞ்சுளா நவநீதன் ***** இந்து என்றொரு சீன விசுவாசப் பத்திரிகை இந்து என்றொரு தினசரிப் பத்திரிகை வருகிறது. தமிழ்நாட்டு 'நடுநிலை நாளேடு 'கள் போல, இதுவும் India 's National newspaper என்று போட்டுக்கொள்கிறது…

கல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்

மஞ்சுளா நவநீதன் இந்திய அரசாங்கத்தின் ராணுவச் செலவு மிக அதிகமாக இருக்கிறது அதனைக் குறைக்க வேண்டும் என்று இந்து பத்திரிக்கையில் (வேறெதில் வரும் ?) வந்திருக்கிறது. பாகிஸ்தான் தன் மொத்த ஜிடிபி (GDP) யில்…

ஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை

தாகேஹாரு தெராவோ (Takeharu Terao) இந்த வெறுப்பூட்டும், கசக்கும் நினைவினை என் மூளையிலிருந்து துடைத்தெறியத்தான் நான் விரும்புகிறேன். ஆகஸ்ட் 6-ம் தேதி மீண்டும் வருகிறது. என் அனுபவத்தைப் பதிவு செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம்…

மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை

எம். வேத சகாய குமார். தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி எட்வர்ட் ஜென்னெர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர்; பெரியம்மைத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பினால் உலக்ப்புகழ் பெற்றவர். 1749 ஆம் ஆண்டு மே…

ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்

சி. ஜெயபாரதன், கனடா பண்டைய ஞானிகள் கண்டறிந்த சனிக்கோளின் தோற்றம் விண்வெளியில் தொலை நோக்கி மூலம் பார்ப்போர் நெஞ்சைக் கவர்ந்து கண் கொள்ளாக் காட்சியாய் வெண்ணிற ஒளியுடன் மிளிர்வது, சனிக்கோள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…

இலக்கிய கட்டுரைகள்

காற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை

யமுனா ராஜேந்திரன் I காற்றுக்கென்ன வேலி படத்தில் ரொம்பவும் நேரடியான தெளிவான கதை இருக்கிறது.. ஈழத்திலிருந்து ஆயுத மோதலில் காலில் காயம்பட்ட ஒரு போராளிப் பெண் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கி, சிகிச்சை பெற்று திட்டமிட்டபடி…

மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை

எம். வேத சகாய குமார். தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை.…

வாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )

பாவண்ணன் ரங்கநாதன் ஐயா திருக்குறள் நடத்துவதே தனி அழகு. வகுப்பில் அவர் சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு குறளும் பச்சை மரத்தில் ஆணியடித்த மாதிரி மனத்தில் பதியும்படி நடத்துவார். ஒரு வகுப்புக்கு ஒரு குறள்தான். ஏகப்பட்ட…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)

ஜெயமோகன் பகுதி : ஒன்று மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள். மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய…

கதைகள்

கூந்தலழகி

அ முத்துலிங்கம் மாமாவீட்டு பின் வளவில் எங்களுடைய உதை பந்தாட்டம் நடைபெறும். நல்லாக தேய்ந்து, மயிர் எல்லாம் போய், இனி தேய்வதற்கு இடமில்லாமல் வழுவழுவென்று இருக்கும் டென்னிஸ் பந்தில், சூாியன் முற்றாக அஸ்தமித்த பிறகும்…

வடிகால்

துரைசாமி காரணம் தெரியும் முன்பே சிலரை பிடித்து போய்விடுகிறது, அறிவிற்கு எட்டாத ஏதோ ஒன்று. அவர்களுடைய அண்மை, நெருக்கம், மோனம் எல்லாமே இனிமையாய் ஆகிவிடுகிறது. மனதின் ஏதோ ஒரு முலையில் அவர்களுடைய நினைவு விகசித்துக்கொண்டேயிருக்கிறது.…

கவிதைகள்

எந்தையும் தாயும்

கோமதி நடராஜன் ஆடாமல் அசையாமல், அங்குலம் நகராமல், தந்தை ஆதவன், ஓடி ஆடி உழைப்பது போல் பாவனை காட்டுகிறார். நொடி கூட ஓய்வெடுக்காமல், அச்சாணியில் சுழன்று கொண்டு அன்னை பூமி, அமர்ந்தே இருப்பது போல்…

என்னுடல் மின்னுடல்

மு ரெங்கம்மாள் (மின்னுடலை நான் பாடுகிறேன் - வால்ட் விட்மன்) (I sing the body electric - Walt WHitman) நான் அறைக்குள் நுழைந்தவுடன் பேச்சொலிகள் நின்று போகும் கண்கள் என்மீது மேயத்…

மெளன குரு

ராஜி திங்கட்கிழமையில், திருவடி தொழுவேன், பால், பழம், புஷ்பம், தேன்; எல்லாம் உனக்குப் பணிவுடன் தருவேன்! வலை வழியே நீ வருவாய், புலமை, அறிவு, எனக்குத் தருவாய்! இசை, மதம், பாஷையில் கல்வி, படித்து…

என்று கற்பேனோ ?

பசுபதி நண்பர் குழுநடுவே 'நானொருநற் சர்வர்போல் பண்ணுவேன் ', என்றசவால் பார்வையுடன் -- விண்நோக்கிக் கோப்பை சுழற்றிக் குஷியாய் முழநீளம் காப்பியை ஆற்றும் கலை. கற்றால் கவர்ந்திடலாம் கன்னியரைக் காந்தமென; மற்றோரும் மொய்த்திடுவர் வண்டுகளாய்…

வாழும் இறப்பாய்…

சுந்தர் பசுபதி வாழும்போது ஒரு விதமாயும், அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே ஒருவிதமுமாய் மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ என நான் வியந்ததுண்டு ஒரு காலம் ...!! **********…

தமிழர் தொட்டால் சிணுங்கிகளா ?

கரு.திருவரசு தொட்டால் சிணுங்குமொரு செடிதான் - செடியின் தோற்றம் அமைப்புமுறை அதுதான்! பட்டால் சுருங்குமது மெதுவாய் - எழுந்து பழைய நிலைக்குவரும் அதுவாய்! மெல்லிய பூக்கள்தாம் பெண்கள் - அந்த மென்மையில் நல்லுறுதி வேண்டும்!…

உண்மை பொய்யல்ல.

சேவியர். உண்மை பேசுதல் உன்னதமானது. 'பொய்மையும் வாய்மையிடத்து ' எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக் கொடுக்கும் கதைகள் செல்லும் ? பனிக்கட்டிக்குள் புதைத்த தீக் கட்டிகள், வீரியம்…

தேடிய அமுதம்

திலகபாமா எமை தின்ன நினைக்கும் சமூகம் தினம் தினம் தின்றும் தீராது பசியென வயிறுதடவும் எப்போதும் என் பாதைகளைத் திருத்துவதாய் சொல்லியே என் தீர்மானங்களைத் திருடி தன் தீர்மானங்களைத் திணித்திருக்கும் என் பாதையில் நெருஞ்சிகளாய்…

சூரிய அஸ்தமனம்.

ரமேஷ் வார்த்தைகள் தேய்த்த வாழ்த்து அட்டையல்ல பேரண்ட வெளியில் கவிழ்ந்த இசை... புணர்ச்சிக்குப் பின் தூங்கும் துணையினை பார்க்கக் கிடைக்கும் கனிவு... நிலத்தையும் வெளியையும் சேர்த்த நிசப்தக் கோட்டிடை கரைந்து கரைந்து கரைந்தெழில... ஆழமைதியில்…

அவன் சிரித்தான்

புஷ்பா கிறிஸ்ரி அன்று சாலை வழியே என் பயணம் அவன் என்னிடம் கையை நீட்டி அம்மா தாயே என்று கெஞ்சினான் என் கை ஒரு ஐந்து ரூபாயை அவனிடம் நீட்டியது நன்றி சொல்லிய அவன்…