திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040101_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – 01 ஜனவரி,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ்-கா.மெளலாசா- ரோஸாவசந்த் -அரவிந்தன் நீலகண்டன்-கோச்சா -மயிலாடுதுறை சிவா -நரேசு - சந்திரசேகரன் ஆசிரியருக்கு, சில ஆண்டுகள் தமிழில் எழுதாமலிருந்து, 2003ல் திண்ணையில் எழுதியது புதிய அனுபவமாக இருந்தது. இணைய இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த…

கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நாக இளங்கோவன் அன்பின் கலைஞருக்கு, 20-12-03 அன்று நீங்கள் அறிவித்த முடிவு ஓரளவு எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான் என்றாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் அய்யமில்லை. 'பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற்கு இமையாது…

வலுக்கும் எதிர்ப்பு

PS நரேந்திரன் CNN-இல் Lou Dobbs என்பவர் நடத்தும் Money Line என்ற ஒரு மணி நேரச் செய்தி நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. எல்லாச் செய்தி வழங்கும் நிகழ்ச்சிகளைப் போலத் தோற்றமளித்தாலும், அமெரிக்க…

வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு

மத்தளராயன் புத்தனங்காடி. ஆலப்புழைக்குத் தொட்டடுத்த இடங்கழிப் பிரதேசம். தென்னை மரங்கள் அடர்ந்த பரம்பு. நடுவில் ஒரு பதினாலு கெட்டு வீடு. என்றால் பதினாலு கோணம். அதாவது சின்னதும் பெரிசுமாகப் பதினாலு மாடங்கள். தேக்கு மரத்தால்…

முன்னேற்றமா! சீரழிவா!!

அ.முஹம்மது இஸ்மாயில் இஸ்லாமிய மதத்தின் பெயரால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பெண்களை கொடுமைகள் செய்வதாகவும், பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. மேற்கூறிய கருத்தை சில முஸ்லிம்களே எழுப்புகிறார்கள் என்று நினைக்கும்…

‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘

திரு.விஸ்வநாத கக்கன் அவர்களின் பேட்டி டாக்டர்.அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்க நிறுவனரும், பல தலித் அமைப்புகளின் சட்ட ஆலோசகரும், பொது வாழ்வில் தூய்மைக்கு இலக்கணமாக திகழ்பவருமான திரு.விஸ்வநாத கக்கன் அவர்களுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலிலிருந்து சில…

பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்

கலவை வெங்கட் ------------------- நிஜ ரூபத்தில் ஒரு பொய் ஜோஸஃப் கேபல்ஸ் என்பவர் ஹிட்லருடைய பிரச்சார மந்திரியாக இருந்தார். அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்: 'ஒரு பொய்யை பலமுறை பிரச்சாரம் செய்தால், அதையே மக்கள் உண்மை…

டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்

டாக்டர் மொஹம்மது மொஸாடெக் அவர்கள் மே 19, 1882ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையார் 'ஹெதாயத் அஷ்டியாணி ' அவர்கள், அரசர் நாஸர் அல்-தின் குஜார் அவர்களது நிதி அமைச்சராக இருந்தார். அவரது தாயார்…

கடவுள் போருக்குப் போகும்போது

காரென் ஆம்ஸ்ட்ராங் கார்டியன்பத்திரிக்கையிலிருந்து 2004ஆம் வருடத்தைப் பற்றி ஒன்று நிச்சயமாகச் சொல்லமுடியும். கற்பனை செய்யமுடியாத அதிசயம் ஏதேனும் நடந்தாலொழிய, இன்னும் அதிகமான மதவெறி உந்துதலால் நிகழும் பயங்கரவாதத்தையே நாம் பார்க்கலாம். மதங்கள் இல்லையென்றால் நாம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் வெங்கட்ரமணன் கட்டுரையில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.அவை விரிவான பரீசிலனைக்கு உரியவை..தமிழில் அறிவியல்,சமூக அறிவியல் போன்றவற்றில் வெறும் கலைச்சொற்களை உருவாக்குவதால் மட்டும் பெரிதும் பயனில்லை.தொடர்புடைய சிந்தனைகள்,கருத்துக்கள்,கோட்பாடுகள் குறித்தும் எழுதப்பட வேண்டும்.அப்போதுதான் கலைச்சொற்கள்…

கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் வெங்கட்ரமணன் கட்டுரையில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.அவை விரிவான பரீசிலனைக்கு உரியவை..தமிழில் அறிவியல்,சமூக அறிவியல் போன்றவற்றில் வெறும் கலைச்சொற்களை உருவாக்குவதால் மட்டும் பெரிதும் பயனில்லை.தொடர்புடைய சிந்தனைகள்,கருத்துக்கள்,கோட்பாடுகள் குறித்தும் எழுதப்பட வேண்டும்.அப்போதுதான் கலைச்சொற்கள்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘

பாவண்ணன் கிரீஷ் கார்னாட் எழுதிய 'தலெதண்ட ' நாடகத்தைப் பார்த்ததற்கு மறுநாள் நானும் நண்பர்களும் ஓர் உணவு விடுதியொன்றில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் அனைவரையும் அந்நாடகம் மிகவும் கவர்ந்திருந்தது. நாடகம் சார்ந்து எழுந்த பல…

‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்

நா.இரா.குழலினி, அன்புக்குரிய கமல் அவர்களே! இந்தியத் திரைப்பட நிகழ்வுகளிலே நிச்சயமாக ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்துடனும் மாற்றுச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு படைப்பாளியாகவே நான் தங்களை நிறைய நேரங்களில் உணர்ந்திருந்தேன். ஆனால் என்ன செய்வது…

சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்

வைதீஸ்வரன் (28. 12. 2003 சேலம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது.) இன்று ஒரு முக்கியமான மூத்த கவிஞன் அவன் வாழும் காலத்திலேயே, தகுதியுள்ள ஒரு குழுவால் கெளரவிக்கப்பட்டு அவருக்குப்…

மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]

சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…

பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

28.12.2003 ஞாயிறு அன்று மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி இடம்: ருக்மிணி அருண்டேல் அறக்கட்டளை (காசி மடத்துக்குப் பின்புறம்-மேட்லிசாலை சுரங்கப்பாதை முனையில்) 52.குப்பையா தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை-600 033 தொ.பே.2371 6507…

கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் இத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்கியுள்ளன. உலகில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகளில் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற படைப்பாளிகளில் சிறுகதைகள் இத்தொகுதியில் மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றன. ஒன்பது மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு தருணங்களில் இவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்கள். எம்.எஸ். மட்டுமே…

மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்

பாவண்ணன் கிரீஷ் காசரவள்ளி இந்திய அளவில் பெரிதும் பேசப்படக்கூடிய முக்கியமான கன்னடத் திரைப்பட இயக்குநர். கடசிரார்த்தா, மனெ, தபரன கதெ, பன்னத வேஷ என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஏற்கனவே வெளிவந்த கன்னடச்…

கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘

எம் வேதசகாயகுமார் [அ] ஜெயமோகனின் முதல்நாவலான 'ரப்பர் ' உடன் என் வாசக உறவு தமிழகத்தோடு கேரளத்தை இணைக்கும் பாலக்காடு கணவாயில் , இடையறாது மழை பெய்துகொண்டிருக்கும் இரவு ஒன்றில் நிகழ்ந்தது. விடுதியில் என்னைப்போலவே…

மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு

ரெ. பாண்டியன் (சிங்கப்பூர்) மாலதியின் கவிதைகளை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்: 1. கவி அனுபவம் பெற்று எழுதப்பெற்றவை 2. இயற்கை / புற உலகு ஆராதனையை அழகிய வரிகளில் சொல்லமுனைபவை 3. ஒரு…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது

இரா முருகன் எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ? பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள். ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு…

ஸ்தலபுரம்

பத்ரிநாத் மணி சரியாக ஐந்து.. சாயரட்சை பூஜைக்காக கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார்.. எந்த கிருஷ்ணனா.. ? சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான்.. தன் பரம பக்தன் குண்டுராமனுக்காக.. குண்டுராமனுக்கு ஏன் அந்தப் பெயர் என்ற ரிஷிமூலம்…

விடியும்!(நாவல் – 29))

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்திற்கு பார்க்கப் பயம் - பார்க்கவும் வேண்டும் - பார்க்க விரும்பாதது கண்ணில் பட்டுவிடுமோவென்ற தயக்கம். ஜீப்பை விட்டு இறங்காமல் வளவிற்குள் பார்த்தான். மற்றவர்கள் இறங்கிப் போய், பார்ப்பதற்கு முட்டிக்கொண்டு…

பிச்சிப்பூ

புதியமாதவி அவள் எழுதிக்கொண்டே இருந்தாள். பக்கம் பக்கமாக. எல்லாவற்றையும் எழுதுவாள். சிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது பத்துக் கேள்விகள் அவள் கடிதத்தில் இருக்கும். அவளுக்கென்ன வேலை வெட்டி இல்லாதவள். நினைத்த நேரத்தில் உட்கார்ந்து…

ஆசாரப் பூசைப் பெட்டி

ஜோதிர்லதா கிரிஜா அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர் ? 'ஆசாரப் பூசைப் பெட்டி! ' அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள் தனக்கு வைத்திருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)

எஸ். ஷங்கரநாராயணன் இரண்டாம் பகுதி - தொடர்ச்சி ---- பின்னாட்களில் சுடர் விவேகமாய் பஜார்ப்பக்கம் பெஞ்சுபோட்டு பூக்கடை போட்டாள். மலர்களை விலையெடுத்து சுடர் வீட்டுக்கு வாங்கி வருவாள். வீட்டில் வைத்து அவளும் அம்மாவுமாய், நனைத்த…

எமன் – அக்காள்- கழுதை

நாகரத்தினம் கிருஷ்ணா எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் அரைத் தூக்கத்தில், பின்னே ஒரு கழுதை தொடரக் கிராமத்துக்குள் நுழைந்தாயிற்று.. இனி அக்காளின் வீட்டைக் கண்டுபிடித்தாக வேண்டும். 'உயிரை '…

நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை

நாகரத்தினம் கிருஷ்ணா கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. -கவிஞர் வைரமுத்து…

‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)

செங்காளி 'கத்தேரிக்கா, வெண்டக்கா, தாக்கோளி, வாங்கலயா.... அம்மா காய்கறி வேணுங்களா ?... ' வாசலில் காய்கறிக்காரியின் கூவல் கேட்டது. சமையலறையிலிருந்த அம்மா, 'இதா வர்றேன் ' என்று சொல்லிக்கொண்டே காய்களைப் போடுவதற்கு ஒரு தட்டை…

உத்தரவிடு பணிகிறேன்

ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில் : நாகூர் ரூமி) ==================== (Command, I will Obey You by Alberto Moravia) ======================================= நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது…

கவிதைகள்

புத்தாண்டே வருகவே

பவளமணி பிரகாசம் அரும்பாய் இருக்கும் கொடியிலே அந்தியில் அவிழும் நொடியிலே அதிசயம் இல்லா வாடிக்கை அதிலேயென்ன வேடிக்கை நேராய் அந்த வாசம் பரப்பும் நெஞ்சில் ஒரு வித பரவசம் நிலையாய் அதிலே ஒரு சுகம்…

இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!

செங்காளி இறைவா உனக்கு நிறையத்தான் கோபம் வந்தால் சூராவளியாய்ச் சுழல்கின்றாய்.. பேய்மழையாய்ப் பொழிகின்றாய்.. பெருவெள்ளமாய்ப் பாய்கின்றாய்.. அனல்காற்றாய் வீசுகின்றாய்.. கொடும்பனியாய்க் கொட்டுகின்றாய்.. தீப்பிழம்பாய் எரிகின்றாய்.. இப்படித்தான் வரிசையாய் உன் வீச்சத்தைக் காட்டுகின்றாய். கடைசியாக நீ…

நிழல்கள்.

அருண்பிரசாத். என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து செல்கின்றன. கூரிய நகநுனிமேல் மிகவும் பழக்கமான…

நதி

தேவஅபிரா நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது. பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள் வெடித்துப்பீறிடும் உணர்வுகளில் ஆழமும் அகலமும் கொண்டென்நதி அணைகடந்தது. வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது - என்னுள். கைகளிலும் மனங்களிலும் இரத்தமும் வார்த்தைகளில் மாய்மாலமும் கொண்ட…

எனக்கு வேண்டும் வரம்

புகாரி ------------------------ வேண்டும் வேண்டும் வேண்டுமடா - யாவும் வேண்டும் வேண்டும் வேண்டுமடா - உள்ளம் வேண்டும் போதே வேண்டுமடா எல்லைக் கோடுகள் அழிந்திடணும் - அதையென் சின்னக் காலால் அழித்திடணும் -உலகை ஒற்றைப்…

இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.

அருண்பிரசாத். தனிமையழகுடன் வரவேற்கிறது கடைக்கோடி பயணியர் இருக்கை இரயில் நிறுத்தத்தில். பொய்யான உன் நேர்கோட்டு நடையுடன் சிலநொடி தாண்டி பக்கவாட்டில் திரும்பி போலியாய் அதிசயித்து பின் அருகமரும் உன் வேடிக்கைகளைத் தாங்கியபடி. இரயிலுக்கும் இருக்கைக்குமாய்,…

பல சமயம் நம் வீடு

பா.சத்தியமோகன் சதுரமாகி வரும் வீடு சில உணர்தலில் வட்டமாகி விடும் வட்டமென நெகிழ திடுமென விண்டு கோணலாகி விடும் கோணல்தானே என்றிருக்க விரிசலாகி விடும் ஆங்காங்கே விரிசலைச் சரி செய்ய பூதம்தோன்றும் பூதமென ஒதுங்கிப்…

வரம் கொடு தாயே!..

கவிமாமணி புதுவயல் செல்லப்பன் ************* ஒலகம்போற போக்கப்பாத்தா ஒண்ணும் புரியல்லே!-நாம ..உண்மையாக நெனச்சுப்பார்த்தா ஏதும் சரியில்லே! கலகம்தானே நம்மச்சுத்திக் காண முடியுது ?-மனக் ..கவலயோட தானேநித்தம் பொழுது விடியுது ? .. புள்ளகுட்டி பசியப்போக்க…

மரக்கொலைகள்

பிரதாப் ருத்ரன் பாஷை பேசும் மரங்கள் பூிவதில்லை மரம் வெட்டியானுக்கு துயிலெழுந்த காக்கைகளின் பூபாளம் மயக்கும் வண்டை சாலையோர கள்ளிப் பூக்கள் மரங்கள் வெறுமையின் பிரளயம் மனதை உந்த காக்கையின் கூட்டில் விருந்தாளி குயிலின்…

அன்பே மருந்தானால்…

மதுமிதா ========================== ஓடும் நதி நீீரின்றி பாடும் தென்றல் காற்றின்றி ஆடும் பறவைக்கூட்டமின்றி வயல் வரப்பின்றி விரிந்த வானம் காணும் வகையின்றி விசாலமான தோட்டமின்றி பூட்டிக்கிடக்கும் கூண்டுக்குள்ளான குடும்ப வாழ்க்கை. புழுக்கத்துடன் எரிச்சல் நிறைந்த…