திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081204_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…

பி.கே. சிவகுமார் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.) சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள், எதிர்வினை அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅப்படி எழுதப் பட்டுள்ளது ! ஓராயிரம் பாதைகளில் ஏதோ ஒரு வழியில் வாய்ப்புள்ள தென்றால் உயிரின உதயம் எப்படி ஆயினும் எழுந்திடும் ! உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற…

இலக்கிய கட்டுரைகள்

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)

நாகரத்தினம் கிருஷ்ணா தேடிச் சந்தித்து மகிழ்ந்ததும், விலைகொடுத்தேனும் உரிமை பெற்று சந்தோஷித்ததுமான கணங்கள் கடந்த காலத்திற்கானவை. பிறமனிதர்கள் அல்லது நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதற்ற நொடிகளுடன் வாழ்க்கை என்றாகிவிட்டது. படைப்பாளிகளுக்கோ தங்களிடமிருந்தே தாங்கள்…

கதைகள்

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"ஒருபோதும் அதற்கு முரண்பாடாக நான் எதுவும் கூறவில்லை. "சுதந்திரப் பேருரையில்" (Declaration of Independence) விளக்கியபடி, வாழும் தகுதி, விடுதலை உணர்ச்சி, இன்பத்தை நாடும் வேட்கை போன்ற எல்லா வித…

காயம்பட்ட நியாயங்கள்.

தமிழில்: மு.குருமூர்த்தி அலுவலகத்தில் வேலை தலைக்குமேல் இருந்து. கோட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டினேன். சட்டையின் கைகளை சுருட்டிவிட்டுக்கொண்டு பேனாவைப்பிடித்தேன். வேலையில் கவனமாக இருந்தபோதுதான் ஃபோன் அடித்தது. ரிசப்ஷனில் இருந்த பெண்தான் பேசினாள். "உங்களைப்பார்க்க ஒருவர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு

இரா.முருகன் புகை ரூபத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு ஒடிசலான தேகவாகு உள்ள ஒரு பெண். அவள் புடவைத் தலைப்பைப் பற்றியபடி ஒரு சின்னப் பெண் குழந்தை. குழந்தைக்கு முகம் மட்டும் இருபது வயசுக்காரி…

கலைகள்

கவிதைகள்

வனத்தின் தனிமரம்

குட்டி செல்வன்அட‌ர்ந்து பொழிகின்ற‌து சில‌ தின‌ங்க‌ளாய் பருவம் தப்பிய இம்மழை வ‌லுவான‌ காற்றுட‌ன் வ‌ரும் அத‌ன் நோக்க‌ம் அறிய‌யிய‌லாத‌து வரவேற்க விரும்பாதது ம‌ழையாலும் காற்றாலும் பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைக‌ள் ஒடிந்துவிழாமல் இருக்க தொடர்ந்து…

கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 மரமில்லாமல் வெள்ளைத் தேன்கூடு வீதிவிளக்கு 2 பகலுமில்லை இரவுமில்லை பருவமும் இல்லை பட்டணம் 3 நீண்ட குளிரான ரஸ்தா தளர்ந்து நடையிடும் மாடுகள் ஒளிரும் பீடிக்கங்கு 4 பௌர்ணமி இரவில்…

நீ வரப்போவதில்லையென..

கோகுலன் இலையுதிர்க்கால முற்றத்தில் குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக வசந்தத்தின் பழைய பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம் உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதின்றில் நினைவுகள் இறைந்து கிடக்கும்…

உருவமற்ற நிழல் பொழுது/ மனம்

நிலாரசிகன்1.உருவமற்ற நிழல் பொழுது நான் தனித்திருக்கும் உலகில் என்னுடன் பயணிக்கிறது நிழலொன்று. எங்கிருந்து வந்ததென்றும் யாருடையதென்றும் புரியவில்லை. நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து தப்பித்துவிட இயலாமல் தளர்ந்து அமர்கிறேன். மெதுவாய் என் நிழலிடம் பேச ஆரம்பித்தது…

வாழ்வும் வலியும்

செம்மதி 1 என்னவளே! நானும் நீயும் காதலித்த பள்ளிக்கூடம் வசந்தங்களைத் தொலைத்து வதைபட்டோர் ஒதுங்குமிடமாச்சுகடி காலநேரம் தெரியாமல் கைகோர்த்து கதையளந்த ஆலமரத்தடியில அடிபாடு நடக்குதெண்டு சனம் கதைக்குதடி உன் அண்ணன் ஊர்திரட்டி துரத்திவந்த வயல்…

வேத வனம் விருட்சம் 13

எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது இளைப்பார இடமளிப்பது ஆன்மாவுக்கு ஆனந்தமாவது உடலா…

தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒளிமய ரூபனே ! நீயிங்கு வந்திருக்கிறாய் ! கதவினை உடைத்து வந்த உனக்கு வெற்றி ! இருள் குவிந்த இந்தக் குவலயத்தை ஊடுருவும் உன் உன்னதக் காட்சி பெற்றிடுவாய்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுயல் ஒரு குதிரை ! ஓங்கி அது வீசுவதைக் கேள் கடல் வழியே வான் வீதியில் ! என்னைத் தூக்கிச் செல்ல விழைகிறது ! எப்படிப் புவிதனைச் சுற்றுது…

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார் போக்கால் பாரில் சிக்கலே தோன்று மாயின்…

தீவிரவாதம்

ரஜித் நீ அழிக்க நினைப்பவன் ஆயிரம் பேர் நடுவிலா ஆயிரமும் கொல் பானை சோற்றையும் பாசானமாக்கு மனிதனுக்கு ஓது மதயானை போதம் கொல்லப்படும்வரை கொன்று கொண்டே யிரு ஈக்களைக் கொன்று தேன் குடி இரத்த்த்தை…