தீவிரவாதம்
Published December 5, 2008 • By
ரஜித்
ரஜித்

நீ அழிக்க நினைப்பவன்
ஆயிரம் பேர் நடுவிலா
ஆயிரமும் கொல்
பானை சோற்றையும்
பாசானமாக்கு
மனிதனுக்கு ஓது
மதயானை போதம்
கொல்லப்படும்வரை
கொன்று கொண்டே யிரு
ஈக்களைக் கொன்று
தேன் குடி
இரத்த்த்தை இறக்கு
உருக்கிய ஈயத்தை
உடம்பெங்கும் ஓட்டு
லப்டப்பை மற
கொல் கொல்லென்று மட்டுமே
கொக்கரிக்கட்டும் இதயம்
புறாக்களைப் பிடி
பேரம் முறிந்தால் கிழி
கொல்வது மட்டுமே
கொள்கை யாக்கு
எறி குண்டுகள் ஏகே47கள்
இரண்டு பக்கமும் ஏராளமாய்
உயிர்கள் உடன்பாடுகள்
கோடிகள் கோரிக்கைகள்
எதுவுமே நிஜமல்ல
சாவது மட்டுமே நிஜம்
தீவிரவாதம்
தெரிந்தே ருசிக்கும் விடம்
rajid_ahamed@yahoo.com.sg