திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050408_Issue

அரசியலும் சமூகமும்

மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்

இர்ஃபான் ஹுசேன் மார்ச் 16ஆம் தேதி, இஸ்லாமாபாத் மசூதியிலிருந்து ஒரு இமாம் தனது மாணவர்களை அழைத்துக்கொண்டு அருகாமையிலிருந்த சர்ச்சுக்குச் சென்று அங்கிருந்த கிரிஸ்துவ வழிபாட்டாளர்களை தாக்கியது, நாம் எவ்வாறு நமது சிறுபான்மையினரை கொடுமைக்குள்ளாக்குகிறோம் என்பதன்…

டார்ஃபர் – தொடரும் அவலம்

ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்…

ஒரு மொழிபெயர்ப்பின் கதை

குமரி மைந்தன் 'தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி ' என்ற திரு, தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03,07,1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது, அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று…

பாலை நிலத்து ஒட்டகம்

குமரி மைந்தன் ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் 'பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம் ' என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு,சு,கி,…

மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்

அரவிந்தன் நீலகண்டன் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத நிலைபாட்டினை தெளிவாக எடுத்தவர் செல்வி.ஜெயலலிதா. இஸ்லாமிய…

சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்

வாஸந்தி கும்பகோணத்துப் பள்ளியில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறதா ? ஞாபகம் இருக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் மனிதனுக்கு மறந்துவிடும் என்று ஐக்கிய நாடுகளின் சபைக்குத் தெரியும்.நாகரீக மனிதன் யார் யாரை…

பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு

ஸ்ரீமங்கை இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு…

போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்

அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ குரலாக போப் ஒலித்தார். கத்தோலிக்கம் இழந்த…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா

கே ஜே ரமேஷ் நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா. அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ழீன் பால் சாத்ரே குவேராவை 'அவர் வாழ்ந்த காலத்தில் சே…

புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்

தமிழவன் சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி நேரடியாகத்தெரியாவிட்டாலும் பத்திரிகைவாயிலாகத் தெரியும் செய்திகள் மகிழ்ச்சியூட்டத்தக்கனவாக…

அறிவிப்புகள்

கடிதம் ஏப்ரல் 8,2005

அருள்ராஜ் நவமணி திண்ணை அறிவியல் புனைகதைப்போட்டி முடிவுபற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். வெகுஜன பத்திரிகைகளை விட்டு திண்ணையை விரும்பிப் படிக்கும் ஒரு வாசகன் என்ற முறையில் இதை எழுத எனக்கு உரிமை இருப்பதாக…

ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது

அரவிந்தன் நீலகண்டன் திண்ணை ஆசிரியருக்கும் திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது என்பதாக உள்ளது. ஈவெராவின் இரண்டாவது திருமணம்…

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை

ஹமீது ஜாஃபர் இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார்.…

2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்

அறிவிப்பு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி யோர்க் வூட் லைபிறறி தியேட்டர் மண்டபத்தில் மூன்று நாடகங்கள் மேடை ஏற உள்ளன. “சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தைப் பெற்று உற்பத்தியில்…

பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு

அறிவிப்பு பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு விமரிசனக் கூட்டம் வாழுகின்ற வாழ்வை விசாரணைக்குள்ளாக்கும் எழுத்துக்களை விசாரணை செய்ய விரும்புபவர்களும், வாழ்க்கையை கேள்விகளால் வளப்படுத்த விழைபவர்களும் கலந்து கொள்கிறார்கள் உடன்…

விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…

பரிமளம் பெரியார், மணியம்மை திருமணத்தைப் பற்றித் திண்ணையில் முன்பே பல விவாதங்கள் நடந்துள்ளன என்பதால் சுருக்கமாகச் சில குறிப்புகளே மட்டும் முன்வைக்கிறேன். விஸ்வாமித்ராவின் கட்டுரையில் பெரியாரின் கூற்றாக வரும் ஒரே மேற்கோள் இது. (மணமக்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா தூண் போன்ற ஆலமரக் கால்களும், நீண்டு மேல்வளையும் கொம்பும், புடலங்காய்த் தும்பிக்கையும் பூண்டு பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகள் கண்மூடிப் போனாலும், கலியுகத்து வேழங்களாய்…

இலக்கிய கட்டுரைகள்

சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்

சிவகாசி திலகபாமா 3.03.05 அன்று மாலை 5 மணிக்கு பெண்கள் ஆய்வு மையத்தில் ஏற்பாடாகியிருந்த சந்திப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல் இது. . கீழ் தளத்தில் ஒரு நூலகமும் மேல் தளத்தில் சந்திப்பதற்கான அரங்கமும் இருக்க…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-5

சோதிப் பிரகாசம் ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பது என்ன ? ஐன்ஸ்ட்டானது தேற்றத்தின் பதிப்பமான (impressive) விசயம் அதன் முற் கூற்றில் அடங்கி உள்ள துணிவம்தானாம்! அது முற் கூறுகின்ற விளைவு ஏற்படாமல் இருந்து இருந்தால்,…

தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17

அறிவிப்பு கதா காலம் தேவகாந்தனின் 'கதா காலம் ' மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளியீடு சித்திரை 17 'ஏப்ரல் 17 மாலை 5.30 மணிக்கு ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் கருத்தரங்க அறையில் நிகழவிருக்கிறது. வெளியீட்டுவிழா,…

ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்

பி. ச. குப்புசாமி (திரு. பி.ச. குப்புசாமி மீசை முளைக்காத பருவத்திற்கு முன்பே ஜெயகாந்தன் அவர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்ட நண்பர். இவர் வடாற்காடு மாவட்டம் குக்கிராமம் ஒன்றில் ஆரம்பப் பள்ளி தலைமை…

கதைகள்

சர்தார் சிங்கின் நாய்குட்டி

என் எஸ் நடேசன் வைத்தியசாலையை மூடிவிடும் நேரம் ஆனதால் அவசரம் அவசரமாக இணையத்தளத்தில் ஏதாவது புதிய விடயங்கள் உண்டா என வேமாக பார்த்துக் கொண்டிருந்தேன். இலங்கையில் இருந்து வரும் செய்திகளை மாலையில் அறிந்து கொள்வது…

வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)

நளினி சாஸ்திரி விண்கலம் ஜூலா பரபரப்பானது. திடாரென்று தொடர்ந்து நியூட்ரினே அலை சிக்னல் வர ஆரம்பித்தது. அந்த திசை நோக்கி ஜூலா பயணம் பாதை மாறியது. அருகாமை கிரகம் சமீபத்தது. சிக்னல் அனுப்பும் கிரகம்.…

அம்மா பேசினாள்

ஜெயந்தி சங்கர் ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமையலறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. 'எங்கபாட்டி சொல்லுவா, ஒருதடவ தட்டிப்போச்சுன்னா தொடர்ந்து நாலுவருஷம் தட்டும்னு, சரியாத்தான் இருக்கு. பாரேன், நாலு வருஷமா…

வன்றொடர் குற்றியலுகரம்

பத்ரிநாத் ஏற்கனவே எத்தனையோ முறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், குடும்பம் என்ற ஒரு நிறுவனம் நிலவும் வரை, அது சார்ந்த பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. விசயம் இதுதான். அந்தத் தம்பதியினருக்குள் பலமான கருத்து வேறுபாடுகள். அவர்கள் பெயர்..…

படகு அல்லது ஜெயபால்

அம்ாிதா ஏயெம் வட்டமான அந்த கூத்துக் களாியிலிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பச்சையோலையால் கிடுகு இழைத்து, வட்டமாக ஒன்றரை அடி மண்ணுக்குள் புதைத்து, குருத்த மணல் கொட்டி, அடித்து இறுக்கி போடப்பட்ட மண் மேடை…

வாக்குமூலம்

வாஸந்தி கதவைப் பூட்ட அம்மா வெகு நேரம் எடுத்துக்கொண்டாள்.இத்தனை நேரம் அதற்கு ஆவானேன் என்ற யோசனை எழாமல் ஒரு வித ஜடத்தனத்துடன் அவள் நின்றாள்.கைப்பயைத் திறந்து மீண்டும் ஒரு முறை கையால் துழாவினாள்.பழுப்பு நிறக்காகிதம்…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு

சி. ஜெயபாரதன் முடிவை நோக்கிச் சீதா இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன்,…

து ை ண 9 – (இறுதிப் பகுதி)

ம.ந.ராமசாமி ஞாயிற்றுக்கிழமை. சுமார் பத்து மணிக்கு ராமகிருஷ்ணன் வந்தான். அவனிடம் ஒரு பத்திரிகையைத் தந்து விட்டு நான் சாலட்டுக்குக் காய் நறுக்க சமையல் அறைக்குள் புகுந்தேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சண்பகத்துக்கு நான் உதவுவது…

கவிதைகள்

தயிர்

பவளமணி பிரகாசம் மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன் மனம் திரியாமலே தனித்திருந்தேன் என் துணையோடேஇணைந்திருந்தேன் சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன் என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன் முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன் உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே…

கவிதை

வா.மணிகண்டன் சிதறிக்கிடக்கும் உன் உள்ளீடற்ற கண்ணீர்த்துளியொன்றில் புதைந்து கிடக்கிறது. என் பிரக்ஞையற்ற முகம். ---- kvmanikandan1@yahoo.co.in

கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இங்கே உள்ளது நீ பாதங்களை ஓய்வாக வைக்கும் உந்தன் பஞ்சணைப் பீடம்! ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர், கீழே உள்ளவர் அனைவரும் வாழும் குடித்தளம் அது! குனிந்து வணங்கி…

பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா. சத்தியமோகன் 951. இசையில் உள்ள புகல் நான்கிலும் கொடிப்பாலைக்கு அமைந்த திறம் எடுத்து சுரம் எழுப்பும் ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமான செயல்களால் இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்க சிவபெருமானின்…

கவிதை

ஜோஸ்பின் பிரான்சிஸ் நேற்று அண்ணன் பார்த்து விட்டான் அப்பாவுக்கும் தெரிஞ்சு போச்சு அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் ஊரே நம்மைப் பத்தித்தான் பேசுது நட்பெல்லாம் கிண்டல் பண்ணுது பயந்தபடி பேசி நடுங்கியபடி சந்தித்து மகிழ்கிறது நம்மிடையே…

தொடர்வாயா….

ஜோஸ்பின் பிரான்சிஸ் அழகாய் சிரிக்கிறேனாம் அழகாய் உடுக்கிறேனாம் அழகாய் பேசுகிறேனாம் அழகாய் இருக்கிறேனாம் அழகாய் சொல்கிறான் அடிக்கடி வாழ்த்துகள் சொல்கிறாய் நாளெல்லாம் பூக்கள், இனிப்புகள் தருகிறாய் சந்திப்புகளிலெல்லாம் புத்தகங்கள், பொருட்கள் பரிசளிக்கிறாய் விழாக்களிலெல்லாம் துணையாய்…

கவிதைத் தோழி

ஜோஸ்பின் பிரான்சிஸ் கூட்டத்திற்கு வரும் அவளைச் சுற்றியே கூட்டம் அவளது தும்மலுக்கும் ஆமாம் சொல்லி பல் இழிக்கும் ஜிப்பா ஜீன்ஸ்கள் இலக்கியமாய் பேசுவாள் இலக்கியம் அவளது பேச்சுக்கு மறுப்பு எதிர்ப்பு கிடையாது கிடையாது அவளைத்…

நேசி மலரை, மனசை

டான் கபூர் எல்லாமே. எல்லாமே. எழுந்து இடுப்பை உயர்த்திடர் இயலாது போகிறது. எலும்பு முறிந்த நாய் மாதிாி. எல்லாம், எல்லை கடந்த எல்லாக் கந்தல்களும் இதயத்தில் விழுந்து நெருப்பிட விளைகிறது. மணம் பரப்பும் ப+க்களாகவோ.…

எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை

எம்.எச்.ஏ. கரீம் ஒரு குஞ்சுக் கோழியின் தலையைத் திருகி எறிந்தாற்போல நானும் சில மனங்களும். நீங்கள் உங்களினத்திற்காகவும் அவர்கள் அவர்களினத்திற்காகவும் போராடும் தேசத்துள் மனித இனத்திற்காக ? சிங்களவரை தமிழரை முஸ்லீம்களைக் காப்பாற்றச் சிலரும்…

விதி

இளந்திரையன் அம்மி மிதித்து அருந்ததி தேடி அந்தணன் காட்டிய பகலிலும் பார்த்ததாகப் பல்லிளித்து மோதிரம் மாத்தி மொய் எழுதிப் போன உறவுகளும் சாட்சியாக சக வாழ்வுக்காய் கைப் பிடித்ததென்னவோ உண்மைதான் நான் வரும் வரை…