தொடர்வாயா….
ஜோஸ்பின் பிரான்சிஸ்

அழகாய்
சிரிக்கிறேனாம்
அழகாய்
உடுக்கிறேனாம்
அழகாய்
பேசுகிறேனாம்
அழகாய்
இருக்கிறேனாம்
அழகாய்
சொல்கிறான்
அடிக்கடி
வாழ்த்துகள்
சொல்கிறாய் நாளெல்லாம்
பூக்கள், இனிப்புகள்
தருகிறாய் சந்திப்புகளிலெல்லாம்
புத்தகங்கள், பொருட்கள்
பரிசளிக்கிறாய் விழாக்களிலெல்லாம்
துணையாய்
இருக்கிறாய் வாழ்க்கையெல்லாம்
நட்பை
தொடர்வாயா பிறவிகளெல்லாம்
ஜோஸ்பின் பிரான்சிஸ்
மும்பை