திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030215_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

பெப்ரவரி 16, 2003 திண்னையில் வெளிவரும் ஜெயமோகனின் புன்னகைக்கும் கதை சொல்லி முத்துலிங்கத்தின் படைப்புலகம் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது. அதனை மறுபிரசுரம் செய்வதற்க்காக திண்னைக்கு நன்றி. வ.ஐ.ச.ஜெயபாலன் திண்ணை ஆசிரியருக்கு, கவிதைகள் நன்றாயில்லை…

இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

ஞாநி லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'கலைத் தமிழ்-கலையாத தமிழ் ' என்ற தலைப்பில் பேசிய கமல் ' இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும். ஆரோக்கிய சினிமா…

நினைத்தேன். சொல்கிறேன்… விபச்சார கைதுகள் பற்றி

PS நரேந்திரன் கீழ் கண்ட செய்திகளை சமிபகாலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். படத்துடன். 'விபச்சாரம் செய்ததாக சினிமா நடிகை கைது! '.. 'ஆபாச படத்தில் நடித்தார். அழகி கைது! '... நான்கு பெண்கள் முகத்தை…

உலக வங்கி சிபாரிசு : சீனாவிற்கு மாட்டுக் கறி

ப்ராட் எட்மண்ட்ஸன் சீனாவின் பாரம்பரிய உணவு உடம்புக்கு நல்லது. அரிசியும், காய்கறியும் கொண்டது. சிறிது மாமிசம் உண்டு. ஆனால் பால்தொடர்பான பொருட்கள் இல்லை. மேநாடுகளில் பரவலாய்க் காணப்படும் இதய நோய்களும் சீனாவில் அரிது. சீனர்களின்…

ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி

மார்வின் ஹாரிஸ் (இது savage male என்ற அத்யாயத்தின் இறுதிப்பகுதி. சென்றவாரம் இதன் முதல் பகுதி வெளியானது) யானோமாமோ மக்களின் 'ஆண் சாவினிஸத்தின் ' வெளிப்பாடாக, இரண்டு ஆண்கள் போடும் சண்டையின் தீவிரத்தை கூறலாம்.…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 11 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் 3. ஆனால் இஸ்லாமியர்கள் கட்டாயமாக மதம்மாற்றியுள்ளனரே ? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கிறோமே ? என்பது மார்க்ஸ் எழுப்பும் கேள்வி. 'மன்னர்கள்…

முடிவின்மையின் விளிம்பில்

ஜெயமோகன் உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே…

இசைக்கலைஞர்களை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி

அஸ்ஃபாக் யூசுப்ஜாய் வடமேற்கு எல்லை மாகாணத்தில் (எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களது பக்தூன் பூமி. இது இன்னும் பாகிஸ்தானில் பிரிட்டிஷார் கொடுத்த North West Frontier Province என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது)…

இந்தவாரம் இப்படி பெப்ரவரி 16 (காதலர் தினம், உலகமயமாகும் அரசியல் )

சின்னக்கருப்பன் காதலர் தின கூத்துக்கள் இந்தியாவில் காதலர் தினம் என்று ஒன்று உண்டால் அது வசந்த உற்சவம் தான் என்று நினைக்கிறேன். மணிமேகலையிலும், நைடதத்திலும் வரும் வசந்த உற்சவ கொண்டாட்டங்களைப் பார்த்தால், இன்று நடக்கும்…

ரஷீத் மாலிக் எழுதிய குவாதீம் ஹிந்துஸ்தான் கி டாரீக் கே சந்த் கோஷே – புத்தக அறிமுகம்

சயீத் மாலிக் மாலிக் தன்னுடைய சமீபத்திய புத்தகம் 'ஹிந்துஸ்தான் கீ தாரீக் : சந்த் கோஷே ' (இந்தியாவின் காலக் கிரமம்: சில குறிப்புகள்) என்ற இந்தியவியல் புத்தகத்துல் இசைவரலாற்றாசிரியர்களையும், எழுத்தாளர்களையும் விழிப்படையச் செய்திருக்கிறார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி

மார்வின் ஹாரிஸ் (இது savage male என்ற அத்யாயத்தின் இறுதிப்பகுதி. சென்றவாரம் இதன் முதல் பகுதி வெளியானது) யானோமாமோ மக்களின் 'ஆண் சாவினிஸத்தின் ' வெளிப்பாடாக, இரண்டு ஆண்கள் போடும் சண்டையின் தீவிரத்தை கூறலாம்.…

அறிவியல் துளிகள்-14

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 53. விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ? விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக…

பசிபிக் கடல் தீவுகளில் செய்த பயங்கர அணு ஆயுதச் சோதனைகள்!

சி. ஜெயபாரதன், கனடா ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது…

இலக்கிய கட்டுரைகள்

புரியாத முரண் ( குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன் – எனக்குப்பிடித்த கதைகள் -48)

பாவண்ணன் நண்பர் ஒருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். விருந்து முடித்துத் திரும்பும் சமயத்தில் ஏஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொள்கிறீர்கள். இந்த ஆசை ஒருநாளும் குறையக் கூடாது. எந்தப் பிரச்சனை வந்தாலும் இந்த ஆசையை…

முடிவின்மையின் விளிம்பில்

ஜெயமோகன் உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே…

ஆங்கிலத்தில் நாம் எதை எழுதவேண்டும் ?

சூர்யா [ஜெயமோகனின் சண்டே எக்ஸ்பிரஸ் கட்டுரைகளைப்பற்றி ஒரு விண்ணப்பம்] இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் தமிழ் எழுத்தாளர்கள் அசோக மித்திரன் , ஜெயமோகன் சுந்தர ராமசாமி எழுதும் எழுத்தாளர் குறிப்புகள்[writers notes] பிரசுரமாவது கவனத்துக்குரிய விஷயம். இதில்…

கதைகள்

சின்னச்சாமியைத் தேடி

நாகரத்தினம் கிருஷ்ணா பாண்டிச்சேரியிலிருந்து வந்த அந்தப் பேருந்து என்னோடு வேறு சிலரையும் அந்த நிறுத்தத்தில் உதறி விட்டுச் சென்றபோது அங்கே நல்ல வெய்யில். முன்பு அங்கிருந்த நாவல் மரங்களும் ஆலமரங்களும் கொள்ளை போயிருந்தன. கிழக்குக்…

வாயு (குறுநாவல் ) 1

இரா.முருகன் 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட் அணிந்த கனவான்கள். தலைக்கு பழுப்புச் சாயம் ஏற்றிக் கொண்ட, வயது மதிப்பிட…

கவிதைகள்

பிள்ளைப்பேறு

மதியழகன் சுப்பையா பன்னீரு மவ சரியான வாயாடி வயசுக்கு வந்துட்டாளாம் பாபுவின் இரண்டாவது மகன் பள்ளிக்கூடம் போறானாம் புள்ளய கிண்டல் பண்ணிணதால போலீசு புடிச்சிறுச்சாம் ஐயனார் மவன கூடப்படித்தவர்களின் குடும்பச்செய்திகளை வாசித்தாள் அம்மா பத்துமாதந்தானே…

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!

புகாரி, கனடா நீலாம்பற் பூவே! -------------- நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே நீயெங்கு போனாய் நீலாம்பற் பூவே கோலாட்டம் போடும் கொண்டாட்ட மனசு ஏழெட்டு நாளாய் தூங்காமல் கிடக்கு காலற்ற மேகம் வானேறிப் போகும்…

வறுமையே! வறுமையே!

புஷ்பா கிறிஸ்ரி என்னை நேசிக்கும் வறுமையே என்னை விட்டு நீ போகாதே கண்ணைக் கட்டி கடலில் விட்டாலும் கண்ணுள் தெரிந்திடும் வறுமையே உன்னை நான் விடுவதாயில்லை.. நான் உன்னோடு, உயிரோடு, உடலோடு, ஒன்றாகிறேன்.. என்…

ராமன் தவறிவிட்டான்

பிரகாஷ் நாக்ராஜ் பொன் கேட்டோம் கொடுத்தாய் பொருள் கேட்டோம் கொடுத்தாய் சொல்லியும் கேளாமல் உன்னை கடவுள் ஆக்கினோம் நீ மறுத்தாய் எங்கள் சொல் கேட்டுயிருந்தால் கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா உன்னுடனே இருந்திருக்கும் ஆனால் மனிதனாக…

உன் பார்வைகள்.

சேவியர் 0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும் கூடவே அழைத்துச் செல்லும் சக்கரம். மூடி…

உழவன்

தேன்சிட்டு. காய்ப்படைந்த கைகள், வெயிலால் சுடப்பட்டு கருமை ஏறிய தேகம், மண்ணோடு பழகிப் போன பாதம், குழிந்த வயிறு, கூடு கட்டிய நெஞ்செலும்பு, வானம் பார்த்தே தேய்ந்த இமை, யார் அது ? ஓரமாய்..…

வாயில் விளக்குகள்

ஜடாயு வீட்டின் உள்ளும் வெளியும் ஒன்றிணையும் தளத்தில் ஒளிவட்டம் வரையும் வாயில் விளக்குகள் உன் உள்ளத்தில் உண்மை உண்டென்றால் அதன் ஒளி சுடர் விடும் வாயில் விளக்குகள் உன் வாயில் வார்த்தைகள் நீ வரையும்…

மீட்டாத வீணை

வேதா அலைகடலிலா ? ஆற்று மணலிலா ? அந்தி வானத்திலா ? உன் அக்னிப் பார்வையிலா ? ஒற்றை வார்த்தையிலா ? உயிரின் தீண்டலிலா ? உள்ளக் காதலிலா ? உரிமைத் தேடலிலா ?…

மெளனமே பாடலாய் ….

வசீகர் நாகராஜன் எனக்கான உன் வார்த்தைகளும் உனக்கான என் வார்த்தைகளும் நமக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றன .... எங்கெல்லாமோ அலைபாயும் நம் பேச்சு கவனமாய் தவிர்த்திடும் பல நினைவுகளை ... நிஜங்களை .... தொடர்கிறது நம்…

என்றாவது வருவாள்

ஆ.மணவழகன் தூரத்து மின்மினியாய் துரத்துகின்ற உன் நினைவு! காற்றுக்குள் இசையாக கலந்துவிட்ட உன் உறவு! கடற்கரை மணலெங்கும் பலநூறு கால்தடங்கள்! ஒவ்வொன்றாய் நான் தேட, ஒன்றுகூட உனதில்லை! 'நாம் ' அமர்ந்த இடந்தனிலே, 'நான்…