திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031030_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை 'தாண்டவன் ' படித்தேன். மனதைத் தொட்டது. 'நினைவு அம்பலம் ', 'மற்றுமொரு மானசரோவர் ' போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.…

ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்

சொ.சங்கரபாண்டி திராவிட அரசியல் இயக்கங்களின் அடித்தளமானவரும், தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் கண்மூடித்தனமாக போற்றிய தலைவருமான அறிஞர் அண்ணா மறைந்த பொழுது அவரைப் பற்றிய மிகத்துணிச்சலான விமர்சனத்தை முன்வைத்த நவீன இலக்கிய உலகின் புரட்சியாளர் திரு.ஜெயகாந்தனை…

வேண்டாமா இந்தியா ?

காஞ்சனா தாமோதரன் Say 'No ' to Unemployment Say 'No ' to India வடமேற்குப் பஸிஃபிக் பகுதியின் ஸியாட்டில் நகருக்குச் சமீபத்தில் தொழில் நிமித்தமாய்ப் போயிருந்தேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில்…

இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை

ஆசாரகீனன் 'ஒரு மலையாளியின் மனநோயாளியின் உளறல்கள் ' என்று இளையபாரதி பிதற்றிய - மனிதத்தன்மையற்ற, பிறர்மேல் சேறு பூசுகிற - வார்த்தைகளை திண்ணை வெளியிட்டிருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, நபும்சகன், திருடன் என்றெல்லாம் ஜெயமோகன் மேல்…

‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்

அரவிந்தன் நீலகண்டன் தன்னை 'தேசிய நாளிதழாக ' தானே அழைத்துக்கொள்ளும் சீன அடிவருடி மார்க்சிய பிரச்சார நாளிதழ் 'தி ஹிண்டு ' மீண்டும் தன் ஐரோப்பிய விசுவாசத்தை நிரூபித்திருக்கிறது. (மார்க்சிஸ்ட்கள் ஐரோப்பிய மேன்மையை புகழ…

தண்டனை போதும்!

- அடியார் பிராமணர்களைப் பொறுத்தவரை நமக்கு மறுபரிசீலனை தேவை! பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து... 'பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ' - என்று…

மொழிவன சில

பரிமளம் தமிழ் விரைவில் அழிந்துவிடும் என்பது உண்மையல்ல. தமிழ் ஏற்கனவே செத்துவிட்டது. ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால்தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ் போன்ற ஒரு மொழியில் பேசுகிறார்கள். ஆங்கிலப் புழக்கம் ஓரளவு கூடிய பிறகு…

கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்

நம்பி. --------------- வேதியல் ஆய்வகம்னா சாராயம் காய்ச்சலாம், இயற்பியல் ஆய்வகம்னா close-up வைக்கலாம் ஆங்கிலத்துக்கு ஆய்வகம் வச்சா என்ன செய்ய முடியும். அதுவும் அரைக்கை காக்கிசட்டை பேண்ட் போட்டுகிட்டு வரனுமாம். ஆங்கில ஆய்வகம் கூத்து…

பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.

PS நரேந்திரன் சிறிய வயதில் உங்கள் பெற்றோர் ஒரு சாதாரண கழுதையைக் காட்டி 'இதுதான் பஞ்ச கல்யாணி ' என திரும்பத் திரும்ப சொன்னால், வளர வளர நீங்களூம் அதுதான் உண்மை என்று நினைப்பீர்கள்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'கற்றது கடுகளவு! அனுபவத்தில் பெற்றது கையளவு! கற்க வேண்டியதோ கடலளவு! ' சூழ்மண்டலவாதிகள் நாட்டுக்குத் தேவை! நீர்வளம், நிலவளம், காற்றைக் காவல் புரியும் சூழ்மண்டலச் சுத்தவாதிகள்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘

பாவண்ணன் நெருக்கமான உறவுக்காரர் ஒருவருடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா. அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அவசியமாக வரவேண்டுமென்று தொலைபேசியிலும் அழைத்துச் சொன்னார். பயணத்துக்குத் தேவையான சீட்டுகளையும் முன்பதிவு செய்துவிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக பயணத்துக்கு முந்தைய தினம்…

மாயக்கவிதை

விக்ரமாதித்யன் கவிதை என்பது மாயம். மொழியில் கட்டப்படுகிற மாயம். கவிஞன் என்பவன் மாயக்காரன். நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன். தமிழின் நல்ல கவிஞர்களாக விளங்குகிற எல்லோருடைய கவிதைகளிலும் இந்த மாயத்தன்மையைக் காணலாம். இவர்களின் நல்லகவிதைகளெல்லாம்…

பிதாமகனும் .. தமிழ் மக்களும்

வரதன் அன்புள்ள பாலாவிற்கு, மூச்சு திணறும் அளவிற்க்கு மாலையும் பாரட்டிலும் திளைத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு சினிமா ரசிகன் எனும் முறையில் நான் சற்று உங்களுடன் அளவளாவ விரும்புகிறேன். உங்களின் சேது, நந்தா,…

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)

நாகரத்தினம் கிருஷ்ணா 'எழுத்தாளனின் பணி சத்தியத்தைப் போதிப்பதல்ல, சத்தியத்தை அறிவது ' - மிலன் குந்தெரா. ' குந்தெரா ' எனவழைக்கப்டும் ' மிலன் குந்தெரா ' அனிச்சமலர் ஜாதி. மிதமிஞ்சிய உணர்வாளி. இன்றைய…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது

இரா முருகன் குரிச்சி போட்டு உட்கார்ந்திருக்கிறான் துரை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு தொப்பியை எடுத்து மடியில் வைத்தபடி இருக்கிறான் அவன். வாயில் புகைக் குழாய். நல்ல கருப்பாகவும் பழுப்பாகவும் அதிலிருந்து புகை…

விடியும்! (நாவல்) – (20)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “ஆரது ?” தந்திக்காரன் வாசலில் மணியடித்துக் கேட்டது மாதிரி திகிலோடு ஆரது என்று மீண்டும் கேட்டார் பொன்னுத்துரையார். தந்தி நல்லதுக்கும் வரும். கெட்டதுக்கும் வரும். வாழ்த்துத் தந்தியாகவுமிருக்கும். வருத்துகிற தந்தியாகவுமிருக்கும்.…

வெளிச்சம்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். காலையிலிருந்து தொலைபேசி அடித்தபடியிருந்தது. நல்லதோ கெட்டதோ மக்களுக்கு நாளிதழ்களில் ஏதும் செய்தியாக வந்தால் ஒரு ஈடுபாடுதான். அழைத்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள் மற்றும் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எனக்குத் தெரிந்தவர்கள். வருடக்கணக்காய்…

நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)

ஜார்ஜ் சம்னர் ஆல்பீ (George Sumner Albee) தமிழில் : நாகூர் ரூமி ----------------------------- மார்ச் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று சரியாக இரவு மணி 9.38க்கு அந்த வினோதமான கம்பீரமான குரல் முதல் முதலாகக்…

மொரீஷியஸ் கண்ணகி

நாகரத்தினம் கிருஷ்ணா அவளுக்கு வயது 28. பிறந்தது போர்ட்லூயிஸ், மொரீஷியஸ். வளர்ந்தது, படித்தது, செக்ஸை அறிய நேர்ந்தது சர்சல், பாரீஸ். அதிநவீனமும் சம்பிரதாயமும் ஐம்பது ஐம்பது விகிதத்திற் கலந்த சராசரி மொரீஷியஸ் மத்மசல். ஆண்களோடு…

கலர்க் கண்ணாடி

இளங்குழலி அவள் ஹாலை ஒட்டிய அந்த அறையின் மூலையில் நின்றிருந்தாள். அவன் அவளுக்கு எதிரே, ஜன்னலோரமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தான். ' 'சுஜாதா ' தானே உங்க பேரு ? அழகா இருக்கு. ' ஒருக்களித்திருந்த…

தழும்புகள்

இளந்திரையன் பிரளயம் நடந்து முடிந்தது போன்ற பேரமைதியில் வீடு மூழ்கிப் போயிருந்தது. எங்கும் நிசப்தம் கப்பிக் கவிந்திருந்தது. முகம் வெளிறிப் போயிருந்த அவர் சோர்வாக உணர்ந்தார். இரண்டு நாட்களாக அந்த அறையில் அடைந்து கிடப்பது…

கலைகள்

கவிதைகள்

தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்

எஸ். ஷங்கரநாராயணன் பல் இல்லா வாய்க்குழிபோல் ஊர் நடுவே தெப்பக்குளம் ஊருக்கே அடையாளம் ஆச்சு - தெப்பக்குள பஸ் நிறுத்தம் - அரசியல் பொதுக்கூட்டம்! தெப்பக்குள சந்திப்பில்! தாத்தா காலத்தில் தண்ணீர் ததும்பும் குளிக்கவும்…

கொடி — மரம்

ப. செளந்தர ராஜன் --------------------------- அறுபட்டது தொப்புள்கொடி அந்நாளில்... மற்றொரு பந்தமும் துண்டானது பின் நாளில்... கணக்குப் போட்டு காகிதங்களாய்த் துப்பின கம்ப்யூட்டராய் மாறிய இதயங்கள் வாடிக்கொண்டிருக்கும் வயதான மரமிரண்டும் பச்சையாய் மாறிடுமோ காகித…

கவிதைகளே ஆசான்கள்

புகாரி ....................................... மொழியின் நார்களை உருவி உருவி கவிதைக் கூடுகட்டி நானென் எண்ணச் சிட்டுகளை நாளெல்லாம் குடிவைத்தேன் இன்று அவை எனக்கே சொல்லித்தருவது இனிப்பான பாடம் என் நாட்களில் அனுபவிக்கும் அசைக்க முடியாச் சத்தியம்…

அயர்ன்பாக்ஸ் எறும்புகள்

பா. சத்தியமோகன் அவசரமான பயணத்திற்கு அயர்ன் செய்யும் சூடான பெட்டிக்கு ழே சூடுபடும் பெட்டிக்கு கீழே கருப்பு எறும்புகள் கண்டு அஞ்சுகிறேன் எடுத்துப் போட்டால் ஓடுகிறது மறுபடி தப்பாமல் திரும்பவும் வருகிறது நாலாறு பத்து…

ஊர்க்குருவி

கற்பகம் ------------ உனை விரும்புகிறேன் உயிரே உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன் உரக்க உரைக்காவிடிலும் என் உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது உள ஏட்டில் உன் (ண்) மை…

வைரமுத்துக்களின் வானம்- 7

ருத்ரா ===== 'பாய்ஸ் 'ஸில் பாட்டு எழுதாத ஏக்கத்தை 'கேர்ள்ஸ் ' பற்றி எழுதி அரிக்குது என்று சொல்லிய உன் பேனாவை சொறிந்து கொண்டு கவிதை சொரிந்த ஒரு முப்பரிமாணக்கவிதை, உன் 'பெண்ணின் '…

எழுதாதக் கவிதை

புதியமாதவி ============== என் சின்னக் குயிலே நல்ல காற்றுக்கும் நாயாய் அலையும் நரகர் காட்டில் உறக்கம் மறந்த புழுக்க இரவில் நீ ஏன் உதயமானாய் ? நீ பாடும் முன்பே குரல்வளைப் பறித்த பாவியின்…

கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…

சூரியக்கனல்

பவளமணி பிரகாசம் ஆடவனே! ஆதவன் என்றுன்னை எண்ணி இறுமாந்தவனே! நீ உமிழும் ஒளியிலே வெறும் கண்ணாடி பிம்பமாய், சோகை நிலவாய், பிறையாய் தேய்ந்து தேய்ந்து வளரும் பேதை என்றே பெண்ணை எண்ணி மெய் மறந்தவனே!…

மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்

அவதானி கஜன் ======================================== அகதி நிதியில் அடுக்கு மனையும் உகந்ததாய் உல்லாசக் காரும் - நிகழும் தினத்தில் பெருமையாய் தோன்றுபவர் கள்ளத் தனமாய் தரித்த புறா. பார்க்க : கடத்தப்பட்ட புறாக்கள் , 26…