This entry is in the series 20031030_Issue

கற்பகம்


————

உனை விரும்புகிறேன் உயிரே
உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே
உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன்
உரக்க உரைக்காவிடிலும் என்
உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது
உள ஏட்டில் உன் (ண்) மை வற்றி விட்டால்
உழன்றுத் திரிவேன் மீண்டும், திசையறியாமல்
உருகிக் கூவும் அந்த ஊர்க்குருவியைப் போல…

karpagam610@yahoo.com

Series Navigation