Recipe: Fried Rice With Peas and Chicken

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

பட்டாணி கோழி வறுசோறு (Fried Rice With Peas and Chicken)


Published: October 29, 2003

நேரம் 30 நிமிடங்கள்

3 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய். (அல்லது கனோலா அல்லது சோள எண்ணெய்)

1 நடுத்தர வெங்காயம் அரிந்தது

1 குடமிளகாய். காம்பு நறுக்கி உள்ளேயிருக்கும் விதைகள் எடுத்துவிட்டு சிறு துண்டங்களாக அரிந்தது

1 1/2 கோப்பை எலும்பு இல்லாத துண்டாக நறுக்கிய கோழி

1 கோப்பை பட்டாணி

1 மேஜைக்கரண்டி நறுக்கிய பூண்டு

1 மேஜைக்கரண்டி நறுக்கிய இஞ்சி

3 அல்லது 4 கோப்பை வேகவைத்த சாதம்

2 முட்டை, மெல்ல அடித்தது

1/4 கோப்பை ஷாவோ ஷிங் ஒயின், அல்லது ஷெர்ரி அல்லது வெள்ளை ஒயின். அல்லது தண்ணீர்

2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்

உப்பு மிளகு ருசிக்கேற்ப

1/4 கோப்பை கொத்துமல்லி

1) 1 மேஜைக்கரண்டி எண்ணெயை அகண்ட இரும்பு வாணலியில் ஊற்றி அதிக வெப்பம் வைக்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின்னர், வெங்காயம், குடமிளகாய் போட்டு வேகவைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். பழுப்பு நிறம் வரும்போது (5 அல்லது 10 நிமிடத்தில்) அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.

2) கோழித்துண்டங்களை எடுத்து அவற்றை வாணலியில் போட்டு அதிக வெப்பத்தில் வேகவைக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். 5 அல்லது 10 நிமிடத்தில் பழுப்பு நிறமாக ஆனதும், அவற்றை முன்னமே வேகவைத்து வைத்திருந்த காய்களுடன் வைக்கவும். பட்டாணியை நீரில்லாமல் இறுத்து இதனை வாணலியில் போடவும். ஒரு நிமிஷம். சூடானதும், அவற்றை காய்கறி கோழித்துண்டங்களோடு வைக்கவும்.

3 மீதமிருக்கும் எண்ணெயை எடுத்து வாணலியில் ஊற்றி இதில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும். 15 வினாடிகளுக்குப் பின்னர், இத்துடன் சாதத்தை சேர்க்கவும். கட்டியாகாமல் இருக்க பிரித்து விடவும். எல்லா சாதமும் சேர்த்ததும், சாதத்தின் நடுவில் ஒரு கிணறு ஏற்படுத்தி அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அந்த முட்டைகளை சற்று கிளறி தூளாக உடைத்து மீதமான சாதத்துடன் சேர்க்கவும்.

4) கோழி மற்றும் காய்கறிகளை வாணலியில் போடவும். எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதில் ஒயின் (அல்லது தண்ணீர்) சேர்த்து வேகவைத்து கிளறவும் (1 நிமிடம்). இத்துடன் பிறகு சோயா சாஸ், நல்லெண்ணெய் சேர்க்கவும். ருசிக்கேற்ப உப்பு மிளகு சேர்க்கவும். சூட்டை நிறுத்திவிட்டு கொத்துமல்லி போட்டு உடனே பறிமாறவும்.

4 அல்லது 6 பங்கு உணவு

Series Navigation