பிரியா ஆர்.சி. நீ தீ தீபம் ஏற்றவும், தீப்பந்தம் கொளுத்தவும் உன்னால் முடியும் நீ நீர் உயிர் கொடுக்கவும், உயிரெடுக்கவும் உன்னால் முடியும் நீ காற்று தாலாட்டும் தென்றலாக, தவிக்கவிடும் சூறாவளியாக உன்னால் முடியும்…
விக்ரமாதித்யன் ஏன் எண்ணென்றால் கணக்கு எழுத்தெனில் கவிதை எண்ணுக்குப் பிறகுதான் எழுத்தை வைத்திருக்கின்றார். ** நிச்சயமற்ற இருப்பு நிச்சயமற்ற வாழ்வு நிச்சயமற்ற எழுத்து நிச்சயிக்கப்பெற்ற மரணத்துள். ** படிக்காது கெட்டவர்கள் யாருமில்லை படித்து கெட்டவர்கள்தாம்…
புகாரி, கனடா சொற்களின் கல்லறையோ - நாக்கு சுழல்வதால் சுகமில்லையோ ? பற்களின் கூடுகளில் - சொல்லின் பசியோடு திரிகின்றதோ ? சொல்லுங்கள் மெளனிகளே - செவியுள் சொல்லற்ற ஊமைகளே ! சொல்கின்ற சொல்லென்பதும்…
கரு.திருவரசு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு! கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே அண்டை ஒலிபெருக்கி ஆங்காரம் செய்கிறது பின்வாங்கக்…
இராம.கி. பொதித்த கமலையிற் பொருகும் மசகு; கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப; கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ, எதிர்த்து எழும்ப எண்பது நொடியே! ஊற்றும் பொய்த்தே! உழல்வதும் சேறே! ஏற்ற மாக்கள் என்பொடு நொய்ந்தே!…
ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன் என் மனக்குளத்தின் மத்தியில் கல் எறிந்து நீரலைகள் நிற்கும் முன் காணாமல் போனவளே ! பார்வை நிலைகொளல்களும் வார்த்தை பரிமாற்றங்களுமாய் மேகக்கூட்டத்தின் மத்தியில், வானவில்லின் வண்ணம் கொண்டு எழுதப்பட்டதொரு ஒப்பந்தம், நூலறுந்த…
மலர்வனம் விடியற்காலை பொழுது இளந்தென்றல் காற்று சாளரத்தின் ஓரமாய் உனக்காக காத்திருக்கிறது.......... உன் வீட்டு கொடியில் பூத்த மல்லிகைப் பூ உன் கூந்தலுக்காய் காத்திருக்கிறது........... அழகிய புல்வெளிகள் உன் மலர் பாதங்களுக்காய் காத்திருக்கிறது.............. கிழக்கே…
வேதா உன் மூச்சுக்காற்றிலும் முழம் அளப்பேன், முகவரியேதும் இல்லாமலே!! உன் பார்வைப் பூக்களை பறித்துப் பறித்து பாயாக்கித்தான் , தினமும் என் படுக்கையே!! உன் அசைவின் துளிபோதும் ஆதியும் அந்தமும் அர்த்தம் செய்ய.... உன்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பரிபாஷையே தனி. லண்டன் - நியூயார்க் டைரக்ட் ஃபிளைட் என்று டிக்கட் கிழித்துக் கொடுப்பார்கள். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலோ, கேட்விக் விமான நிலையத்திலோ வண்டி…
புஷ்பா கிறிஸ்ரி தாயே நீ சிரிக்கிறாய். மிதித்து மிதித்து யார் உன்னை அணைத்தார்கள் ? ஒட்டிக் கொண்ட உன்னைத் தட்டிக் கொண்டு எழுகிறேன் மீண்டும் ஒருமுறை உன்னைத் தொட்டுக் கொள்கிறேன் என்றாலும், மிதிக்கிறேன். தாயே…