திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060623_Issue

அரசியலும் சமூகமும்

டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1

K.ரவி ஸ்ரீநிவாஸ் டாவின்சி கோடு திரைப்படம் மீதான தடையைக் கண்டித்து பலர் எழுதியிருக்கின்றனர். பராசக்திக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இப்படி ஒரு தடை விதித்திருப்பது முறையா என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கலைஞர் இதற்கு முன்பும்…

இந்தி,இந்தியா, இந்தியன்

செல்வன் என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன்.ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான்.எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் "தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?" என்று…

கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா

செல்வன்வடகொரிய கம்யூனிச அதிபர் கிம் ஜாங் 2 ஜப்பானிய பிரதமருடன் பேசும்போது 13 ஜப்பானியர்களை(ஒரு பள்ளி சிறுமி உட்பட) கடத்தியதை ஒத்துக்கொண்டார் என்பதை அம்னஸ்டி இன்டெர்நேஷனலில் இணையதளம் தெரிவிக்கிறது.....மொழி பெயர்ப்பாளராகவும்,உளவு சொல்லவும்,ராணுவ தளபதிகளின் ஆசைநாயகிகளாகவும்…

எடின்பரோ குறிப்புகள் – 19

இரா.முருகன்எடின்பரோ குறிப்புகள் – 19 இங்கிலாந்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஓவர்கோட், கம்பளிக் கோட்டு, ஸ்வெட்டர் இத்யாதிகளுக்கு இப்போதைக்குப் பிரியாவிடை கொடுத்துப் பரணிலே ஏற்றிவிட்டு, டீ ஷர்ட்டோடும், பெர்மூடாவோடும் பிரின்சஸ் தெருவில் சனிக்கிழமை மதியக்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை

குமரிமைந்தன் தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை…

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்

எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... - என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால்…

வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…

எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இக் கல்வெட்டில் உமையண்ண மணியக்காரன் வெடிகுண்டினால்…

புலம் பெயர் வாழ்வு 14

இளைய அப்துல்லாஹ் தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்பு; அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக.... பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டிநேவிய…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து

புதுவை ஞானம் வேர்கள் பட்டுவிட்டால்..... விதையொன்று ஊன்றப்பட்டது -தகுந்த வெப்பமும் வெளிச்சமும் ஈரமும் தர முளையொன்று வெளிவந்தது வேர் கீழாகக் குருத்து மேலாக. ஆழமும் அகலமுமாய்க் கீழே வேர் பிடிக்கப் பிடிக்கத் தழைத்துக் கிளைத்தது…

அறிவிப்புகள்

கூற்றும் கூத்தும்

பத்ரிநாத்கூற்றும் கூத்தும் சகோதரி ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லச் சொல்கிறார். அது சாத்தியமே இல்லை. அவர் எழுதிய கடிதத்தின் கோணத்தை வைத்துத்தான் அவர் புரிதலின் மீதான என் எதிர்வினை கருத்துக்களைச் சொன்னேன்..…

தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை

ஜடாயுஜூன்-15 திண்ணை இதழில் வந்த தாஜ் எழுதிய 'விமரிசனங்களும் எதிர்வினைகளும்' அருமையான கட்டுரை. விமரிசன ஜாம்பவான்களான பல எழுத்தாளர்களின் நடை, அணுகுமுறை, மதிப்பீடுகள், யுக்திகள் பற்றி ஒரே கட்டுரையில் சுருக்கமாகப் படிக்கக் கிடைத்தது பாக்கியம்.…

கடிதம்

தங்கமணிதிண்ணை ஆசிரியருக்கு: ஜடாயு எழுதிய' "ஞான. ராஜசேகரனின் பாரதி - சில திரைப்படத் திரிபுகள்" கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு மேற்கோள் தொடர்பாக இதை எழுதுகிறேன். "என் பொண்ணு ஒரு ஆதி-திராவிட பையனையோ வேற சாதிப்பையனையோ…

எழுத்தில் எளிமை வேண்டும்

நாஞ்சிலன் இந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி திண்ணை இணைய இதழில், " இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை" என்ற, எச் முஜீப் ரஹ்மான் எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். இஸ்லாம் சம்பந்தமான…

பொருள் மயக்கம்

வஹ்ஹாபி ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில்…

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

வஹ்ஹாபி "வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்" என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார் [ சுட்டி-1]. இக்குற்றச் சாட்டு எம்…

கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?

ஜடாயு ஜூன்15 திண்ணை இதழில் 'கண்ணகி எதன் அடையாளம்?' கட்டுரையில், ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் போன்று சிலப்பதிகாரத்தைத் தொடராக்கும் கோரிக்கயைக் கண்டுகொள்ளாமல் அரசு விட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். இது தவறு, சிலப்பதிகாரம் மத்திய அரசு பணித்ததன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்!-9

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநெறி மாறிப் போனால், யந்திரம் குறி மாறிப் போகும்! விசை மாறி ஓடித் திசை மாறிச் செல்லும்! கட்டுப்பாடு முறிந்தால், யந்திரம் தட்டுத் தடுமாறி முற்றும் சிதைந்து,…

அபத்தம் அறியும் நுண்கலை – 1

கார்ல் சாகன் எனது பெற்றோர்கள் மறைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நான் அவர்களிடம் மிகவும் பாசமாக நெருக்கமாக இருந்தேன். இன்னமும் கூட அவர்களது பிரிவு என்னை வாட்டுகிறது. எப்போதுமே அது வாட்டிக் கொண்டுதான் இருக்கும்.…

இலக்கிய கட்டுரைகள்

சாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)

சுரேஷ் கண்ணன்(காலச்சுவடு பதிப்பகம் - 232 பக்கங்கள் - ரூ.125/-) Set Top Box தொல்லைகள் இல்லாத காலங்களில் டிஸ்கவரி சானல் மற்றும் அனிமல் பிளானட் சானல்களில் விலங்குகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றின ஆவணப்படங்களை…

திருக்குறள் ‘திருந்திய’ பதிப்பு?

ஹரன்( எனது முகப்புக் கடிதம்) 26.10.92 தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் “பெண்ணை மனித மதிப்புடன் பாருங்கள்” எனும் கட்டுரை பற்றிய எனது எண்ணங்களை உடன் இணைத்துள்ளேன். அதில் ஏதும்…

மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு

எச்.முஜீப் ரஹ்மான் மெட்டாரியலிசம் என்ற உடனே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவில் இயங்கிய நடப்பியல் மரபில் உருவானது என்று பொதுவான விளக்கம் இருந்த போதிலும் எண்பதுகளுக்கு பிறகான மெட்டாரியலிசம் என்பது பின்நவீன கலைஇலக்கிய கோட்பாடாகவே உருவாகி…

மறு நவீனத்துவம்/ரெமொ/ரீமாடனிசம்

எச்.முஜீப் ரஹ்மான் சென்ற நூற்றாண்டின் இறுதி கால் பகுதியில் தோன்றிய பின் நவீனத்துவம் எனும் ஆய்வுமுறைக் கோட்பாடு சமூக,பொருளாதார,அரசியல்,கலையிலக்கிய தளங்களில் வலுவான செல்வாக்கு செலுத்தியது.பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்களில் பெரும்பான்மை சிந்தனைவாதிகள் மார்சியத்துடனும் இடதுசாரிமனோபாவத்துடனும் இருந்ததன்…

காவளூர் அமர்ந்த கந்தப்பெருமான்

கோ. தில்லை கோவிந்தராஜன் அருணகிரிநாதரின் அருள்வாக்கு மானை நேர்விழி யொத்தம டந்தையர்பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்வாச மாமலர் கட்டும ரம்பைய ரிருதோளும்மார்பு மீதினு முத்துவ டம்புரள்காம பூரண பொற்கடகம்பொரவாரி நீலவ ளைக்கைபு லம்பிட அநுராகம்ஆன…

கடித இலக்கியம் – 10

வே.சபாநாயகம் கடிதம் -10 நாகராஜம்பட்டி 15-10-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்களுக்குப் பதில் எழுதுவதற்கு ஓர் 'இன்லண்ட்' கவர் தான் வாங்கி வைத்தேன். வெளியே மூட்டம் போட்டுக் கொண்டு மழை தூறிக்…

சாந்தனின் எழுத்துலகம்

எஸ். ஷங்கரநாராயணன் ஈழம் தந்த மகத்துவம் மிக்க படைப்பாளியாக சாந்தனை அனைவரும் அறிந்திருக்கின்றனர். சிறுகதையாகட்டும், குறுநாவல், நாவல் (ஒட்டுமா - அவரது ஒரே நாவல்!), பயணக்கட்டுரை, கவிதைகள் - எதுவாகட்டும் சாந்தனை முக்கியமாக படைப்பு-பாவனை…

படிக்கப்படுபவை நடிக்கப்படுகையில்…

மலர்மன்னன் ஒரு சிறுகதைக்கு நாடகமாக மாற்றுரு அளித்து அரங்கேற்றாமல் அந்தச் சிறுகதையை அது எழுதப்பட்ட விதமாகவே நடித்துக் காட்டும் முயற்சி இப்போது தமிழிலும் தொடங்கியுள்ளது. சிறுகதைகள் பாவத்துடன் படிக்கப்படும் நிகழ்ச்சி ரேடியோவில் வழக்கம்தான். நடிக்கப்படுவதன்…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)

சி. ஜெயபாரதன், கனடா தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்! மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்! சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில் வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்! வனப்பினில் மயங்கிக் கனவினில் அணைப்போர் மனதினில்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26

ஜோதிர்லதா கிரிஜா பங்கஜத்தின் விழிக் கூர்மையை எதிர்கொள்ள முடியாமல் ராகவன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்: “பங்கஜம்! உங்களை நான் தனியாப் பாக்கணும்னு சொன்னது என்னோட பிரச்னையைப் பத்திப் பேசறதுக்காக மட்டுமில்லேம்மா. அன்னிக்கு நான் பண்ணின பாவத்தோட…

தீபாவளி வெடி

"திசைகள்" அ.வெற்றிவேல் தண்டபாணிற்கு அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது.அம்மா வாசல் கூட்டிப்பெருக்கும் சத்தம் கேட்டது.பக்கத்தில்படுத்திருந்த தம்பி நாகுவைப் பார்த்தான்.அந்த அதிகாலை வேளையிலும் மனது உற்சாகமாக இருந்தது.அம்மாவைப் பார்க்கலாம் என்று படுக்கையை விட்டு எழுந்தான்.தோளில் இருந்து நழுவிய…

வினை விதைத்தவன்

என்.கணேசன் "பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா" என்று மனோகரன் தன் நண்பனிடம் தெரிவித்தான். "உம்" "உங்கப்பாவைப் பார்க்க நம்ம மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும்…

பா த் தி ர ம்

ஐ. சாந்தன் படலைத் திறந்த சத்தம்கேட்டு நிமிர்ந்தான். ஒரு பெண். யாரென்று தெரியவில்லை. திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை. நெருங்கி வர வர, மனுசியின் முகத்தை எங்கேயும் பார்த்ததில்லை…

கவிதைகள்

கவிதைகள்

எச்.முஜீப் ரஹ்மான்ஒன்று : நிச்சயமின்மை வெறுமையில் இருப்பதாக சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை இனியில்லை மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது எந்த நேரத்திலும் சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம் காற்றின் வேகத்தில் செல்லும்…

சிந்திப்பது குறித்து…..

த.அகிலன் நான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன் எதைப்பற்றியும்.. அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் மகிழ்ச்சியின் எதிரியாயும் துயரத்தின் தொடர்ச்சியாயுமே நீள்கிறது. எல்லோருடைய புன்னகைகளின் பின்hனால் உள்ள வேட்டைப்பற்கள் குறித்தும் ஒளிரும் ஓவ்வொரு…

நெஞ்சே பகை என்றாலும்

தேவமைந்தன் தலைகுனிந்தாலும் என் கால்களைப் பரப்பினேன். பாதங்கள் ஊன்றினேன்... நெஞ்சத்தில் வைத்தேன், பெற்ற என் தெய்வங்கள் இணையடி தம்மை. தந்தை சொன்னசொல் - “பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே. தன்னந்தனியனாய் நில். கேள்,உரத்த குரலில்.…

பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2610. இவ்விதமாக வன்மையான அந்நோய் நிகழும்போது அமணர்கள் எல்லோரும் மன்னனின் நிலைமை கேட்டதும் பெருமூச்சுவிட்டு "கடந்துபோன இரவில் புகுந்து செய்த செயலின் விளைவுதானே இது" என ஐயம் கொண்டு அரசனிடம் அதைக் காட்டிக்…

கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மனத்தாபம். தொடைகளுக்குள் நிரந்தரமாய்த் தொலைந்துவிட்டது போல் முடக்கப்பட்ட அவனது முழங்கால்களிரண்டும் தோன்றும். வலதுகைவிரல் மடிப்புகளால் வாரப்படாது கோதிவிடப்பட்ட முடிகளின் ஒருபகுதி - மாதர் முக்காடிட்டதுபோல் தோன்றும். நுளம்புத் தொல்லை…

பறவையின் தூரங்கள்

ஹெச்.ஜி.ரசூல் ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள் மழைச்சாரலின் ரசனையில் ஏதோ ஒன்றின் வருகை குறித்த நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள் மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன. சிறகுகளை பொருத்தி தாவிக்…

விழிகளின் விண்ணப்பம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி சூரிய வெளிச்சம் நட்சத்திரங்களாய் ஒழுகும் அந்த ஓலைக் குடிசையிலிருந்து ஓடி வந்தது நிலவில்லை நீதான் வந்து ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் எந்தன் கிராமத்துப் பெண்ணே உன் பார்வைகளால் ஒரு கிராமத்துக்கவிதையை கிறுக்கிக்…

ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

தமிழாக்கம் : புதுவை ஞானம் புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை. -------------------------------------------------------- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் SIMPLE VERSES BY JOS`E MART`I . THE CUBAN REVOLUTIONARY MARTYR. தமிழாக்கம் : புதுவை…

கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அகிலவெளித் தோற்றம் புதிதாக உதித்த போது, முதலில் மகத்துவப் பேரொளியுடன் மின்னின அனைத்து விண்மீன்களும்! தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக நெய்து கானம் பாடின: "பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்…