இராம.கி. முரணின் இருகூறு முதுபிறப்பே! முரணென்றால் என்ன வென்றேன்; முடங்காத போராட்டப் பார்வை என்றார்; எதிரோடி இடம்பிறழ இயல்பும் கோடி, எக்களித்து முகிழ்ப்பதுவே முரணென் றாகும்; குதிர்கின்ற முரணெல்லாம் குலைப்ப தில்லை; கொள்ளுவதும் தள்ளுவதும்…
காளிதாஸ் அழவேண்டும் அழவேண்டும் அழுகைக்குள் இருக்கிறது படுக்கை அதில் கிடந்தால்தான் கிடைக்கிறது உறக்கம் அழுகைக்குள் அழுகையாய் அழுகைக்குள் அழுகையாய் அடுக்கடுக்காய் நானின்று அழவேண்டும் மன அமைதியும் அதில்தானே வரவேண்டும் தழுவவோர் கரமில்லை கேட்கவோர் செவியில்லை…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ---- குஜராத் பெரு நெருப்பின் வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது ஒரிஸ்ஸாவில் பாதிரியும் பிள்ளைகளும் ஜீப்போடு எரிக்கப்பட்ட வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது இராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட கன்னிகாஸ்திரிகளின் கண்ணீரின் பிரதிபலிப்பில் இந்தியா ஒளிர்கிறது மதவெறியை…
பா.தேவேந்திர பூபதி சூரியனும் ,சந்திரனும் தனது வட்டக் காசுகளை விட்டெறியும் வரை நீ ஏழையென்று பெயர் சுமந்து சரிந்து கிடக்காதே ! சிகரங்களைத் தாண்டி சிந்திக்கின்ற நீ பாதாளங்களுக்கிடையில் உந்தன் எதார்த்தத்தை மட்டும் ஏன்…
- புகாரி உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா பெண்கள் உயிரும் பழரசம்…
இராம.கி. (உரைவீச்சு.) இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க; நாங்க மதம் மாறக் கூடாது; அவ்வளவு தானே ? சரி, அப்பக் கோயிலெத் திறந்துவிடு; நாங்க மதம் மாறலை. சேரிப் பக்கம் சாமி புறப்பாட்டைக் கொண்டா; நாங்க…
பவளமணி பிரகாசம் இனங்கள் இங்கு பலவுண்டு ஏமாளி கோமாளியென நாடகமேடையிதுவென்பர் ஏற்ற வேடத்திற்கொப்ப குரைத்தோ கூவியோ நடித்து முடிக்க வேண்டுமே காத்திருந்து கலைப்போம் நாம் பூசிய அரிதாரத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சேவியர் 0 யுத்தங்களே வாழ்க்கை. விதை, மண்ணோடு செய்யும் யுத்தம் தன் முளைக்கு இடம் கேட்கும் முதல் யுத்தம். முட்டையோட்டுக் கவசங்களோடு குஞ்சு செய்யும் முதல் யுத்தம் தடையுடைக்கும் முதல் யுத்தம். தொப்புள் கொடி…
இராம.கி. நான்யார் என்குவீ ராயின் நானோ, கோடியில் பிறந்தே மாடமா ளிகையில் தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்; கோடியில் பிறந்தே கூவக் கரையினில் வாடி வறண்டே மாள்வனும் அல்லன்; மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;…
யாழன் ஆதி ==== 0 பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை. 0 உன் நினைவுகள் ஒவ்வொன்றும் பறவைகளாகி உயரப் பறக்கின்றன என்னிலிருந்து முற்றும் அற்றுப் போய்விடுமோ என் கூடென்று ஓடுடைத்து வெளி வருகின்றன இன்னும்…