அழவேண்டும்
Published February 26, 2004 • By
காளிதாஸ்
காளிதாஸ்

அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள் இருக்கிறது
படுக்கை
அதில்
கிடந்தால்தான்
கிடைக்கிறது உறக்கம்
அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் நானின்று
அழவேண்டும்
மன
அமைதியும் அதில்தானே
வரவேண்டும்
தழுவவோர் கரமில்லை
கேட்கவோர் செவியில்லை
அணைக்கவோர் முள்கூட
இல்லை இல்லை
எனக்குத்
துணையாகத் தூணாக
அழுகையே அழுகையே
நீ எப்போதும் வரவேண்டுமே
அழுகைதான்
என் கைகளில்
குடை
அதன்
அடியில்தான்
இளைப்பாறும்
வாழ்க்கை நடை
கண்களில்
நீர் முட்டி நின்றால்
நிம்மதி
நெஞ்சத்தின்
கதவுகளைத் தட்டும்
கண்ணீர் ஒரு சொட்டு
உதிர்க்கின்ற போதும்
அமைதி உள்ளுக்குள்
விதை நட்டுப் போகும்
எடுக்கின்ற போது
சுகம் இல்லை
கண்ணீர்
கொடுக்கின்ற போதுதான்
சுகம் சுகம் சுகம்
kaalidas@hotmail.com