திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060929_Issue

அரசியலும் சமூகமும்

பேசும் செய்தி

பாஸ்டன் பாலாஜிசில செய்திகளைப் படித்தாலே 'இது நையாண்டியா அல்லது நிஜமான நிகழ்வா' என்று சந்தேகம் எழும். அந்த செய்திகளை அச்சுப் பிசகாமல் அப்படியே கொடுத்து விடுவது உசிதம். சில செய்திகளைப் படித்தால் இரத்தம் கொதித்தாலும்,…

யஸ¤குனி ஆலயம் – பாகம் 1

கே.ஜே.ரமேஷ்சென்ற வாரம் டோக்கியோ சென்ற அமெரிக்க காங்கிரஸ் செயற்குழு ஒன்று ஜப்பானின் அடுத்த பிரதமர் யஸ¤குனி ஆலயத்திற்கு செல்லும் வழக்கத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. யஸ¤குனி ஆலயத்தைப் பற்றிய சர்ச்சை பல மாதங்களாகவே…

இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?

அரவிந்தன் நீலகண்டன் 17-9-2006, நாகர்கோவில்-2. மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு, 24-9-2006 ஆனந்தவிகடன் இதழில் திரு.ஞாநி வந்தேமாதரம் குறித்து எழுதிய கட்டுரையை தங்கள் இதழ் வெளியிட்டது. ஒரு இந்தியன் என்கிற முறையிலும் 'வந்தேமாதரத்தினை' மதரீதியில் சித்தரித்திருந்த…

திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை

மலர் மன்னன் இன்றைக்குத் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில்கூடப் பெண்பிள்ளைகள் வட பாரதத்து உடையான சல்வார் கமீஸை அணிந்துகொண்டு செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. தென் மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில்…

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?

அருணகிரி (Reason என்பது காரண அறிவு என்று இக்கட்டுரையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; நன்றி: ஜெயமோகன்) செப்டம்பர் 12-இல் பதினாறாம் போப் பெனடிக்ட் அறிவியலாளர் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவு* ஒன்று இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய…

மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்

சின்னக்கருப்பன் சமீபத்தில் படிக்க நேர்ந்த செய்திகளிலேயே மிகவும் நகைச்சுவையானது பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரி எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் பற்றிய செய்தி.. கார்கிலில் பாகிஸ்தான் வென்றது, நவாஸ் ஷெரீ·புக்குத் தெரிந்து தான் கார்கில் படையெடுப்பு நிகழ்ந்தது,…

அறிவிப்புகள்

அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்

விஸ்வாமித்திராபி கே சிவகுமார் என்பவர் திண்ணையில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அதில் ஒரு சில கட்டுரைகள் குறித்து எழும் சர்ச்சைகளைத் திண்ணையிலும் பிற இட…

முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை

மலர் மன்னன் வெங்கட் சாமிநாதனை அவரது எழுத்தின் வாயிலாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது எழுத்தின் ஈர்ப்பாலேயே அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவும் அறிவேன். இலக்கிய மதிப்பீடு என்று வருகிறபோது விருப்பு வெறுப்பு,…

நிழல் சண்டை

ஹெச்.ஜி.ரசூல் எனது தெளகீது பிராமணர்களின் கூர்மழுங்கிய வாள்களும் - வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும் கட்டுரை தொடர்பாக (வஹ்) ஹாபியின் பரிதாபத்துக்குரிய கடிதம் வாசித்தேன். முதலில் ஹாபியின் குளறுபடிகள் குறித்து திண்ணை வாசகர்கள் தெளிவு…

கடிதம்

பொள்ளாச்சி நசன்Respected Sir I upload new content In our Tamil web www.thamizham.net View it and write. yours pollachinasan@gmail.com POLLACHI NASAN, Pollachi, Coimbatore Dt.Tamil Nadu. 642006…

ஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு

அறிவிப்பு நாள் 02.10.2006/ நேரம்-மதியம் 2 மணி முதல் இடம்:- ஜீவன ஜோதி அரங்கு (basement hall) ICSA CENTRE மியுசியம் எதிரில் எழும்பூர் நூலை வெளியிடுபவர்- Dr.G.ஜெயராமன், நிறுவனர்-தலைவர்-Welfare Foundation of the…

கடிதம்

G நரேந்திரன்Dear Editor, After some time I was checking 'thinnai' but am seeing the same debates on Islam with arguments/counter-arguments and many letter writers contributing…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டாது, ஒண்டிக் கிடக்கும் ஓய்ந்து போன மூளை உறங்கி உறங்கி ஊறுகாய் ஆகும்! ஓய்வு உடலுக்கு! ஆத்மாவிற் கில்லை! இறைக்காத கிணறு…

இலக்கிய கட்டுரைகள்

பிடெல் காஸ்ட்ரோ 80′!

லதா ராமகிருஷ்ணன்.· போர்களில் இரு வகைகள் உண்டு. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் போர்கள் அவசியமானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். ஆனால், பேராசை காரணமாக மற்ற நாடுகளைக் கவர்ந்து, அந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தும் நோக்கத்துடன்…

கடித இலக்கியம் – 24

வே. சபாநாயகம் கடிதம் - 24 நாகராஜம்பட்டி 12-12-80 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. Slideகள் அனைத்தும் பத்திரமாகக் கிடைத்தன. அவை கிடைத்த அன்றே, 8ஆம் தேதி திங்கள் இரவே…

மறைக்கப்பட்ட உலகம்

வெங்கட் சாமிநாதன் ஊரோடு ஒத்து வாழத்தெரியாது எனக்கு. இந்தத் தமிழ் மண்ணோடு சற்றுப் பிடிப்பில்லாத, இதைச் சுரண்டி வாழும் ஒரு பாமரக் கோமாளி எனக்கு "ஸார்" ஆகிவிடமுடியாது, அவன் எனக்கு எவ்வளவு பணம் கொட்டிக்…

சற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன?

தேவமைந்தன் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, ஒரு தடத்தை மாட்டுக்குப் பழக்கிக் கொடுத்துவிட்டால், அது வட்டமாக இருந்தாலும் குறுக்கு மறுக்காக இருந்தாலும் கோணல்மாணலாக இருந்தாலும், எப்படிப் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டதோ அதே போலப் போகும்…

கதைகள்

அறிமுகம்

புதியமாதவி மாமாவின் நேர்க்காணல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வீட்டில் எல்லோரும் தொலைக்காட்சியின் முன்னால் கூடியிருந்தார்கள். தாத்தாவை தொலைக்காட்சியில் காண்பதில் பேரன் பேத்திகளுக்கெல்லாம் கொண்டாட்டம். தொலைக்காட்சி நிகழ்ச்சியை அப்படியே சின்னவன் விடியோ சூட்டிங் செய்தான்.தொலைக்காட்சியில்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4

நாகரத்தினம் கிருஷ்ணா அடுத்துவந்த நாட்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எதுவென்று சொன்னால், எல்சாவிடத்தில் ஆன் காட்டிய அளவுக்கதிகமான கரிசனம். அர்த்தமற்ற அவளது பேச்சைக் கேட்டபிறகும் எல்சாவை விமர்சித்து வார்த்தைகளேதுமில்லை. எதையும் இரத்தினச் சுருக்கமாக சொல்லியாகவேண்டும்,…

மடியில் நெருப்பு – 5

ஜோதிர்லதா கிரிஜா தன் அப்பாவைப் பற்றிய வியப்பில் அவள் விழிகள் விரிந்திருந்ததை ராஜாதிராஜன் கவனித்தான்: "ஆமா. அவரேதான் சொன்னாரு. அது வரைக்கும் அரசல் புரசலாக்கூட விஷயம் என் காதுக்கு எட்டினதில்லே. எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டு,…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)

சி. ஜெயபாரதன், கனடா"லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது."…

பெண்ணுரிமை

கௌரி கிருபானந்தன் "ரேவதி மேடம்! உங்களை மேனேஜரம்மா உள்ளே வரச் சொன்னாங்க." அடெண்டர் வந்து சொன்னதும் ரேவதி கேபின் பக்கம் பார்த்தாள். மேனேஜர் சுநீதா கண்ணாடித் தடுப்பு வழியாக இந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தாள். எதற்காக…

தெளி

எஸ்ஸார்சி அவன் அச்சக வேலையாய் சிதம்பரம் போகவே கடலூர் புதிய பேருந்து நிலையம் சென்றுகாத்துக்கொண்டிருந்தான் சிதம்பரம் என்று எழுதி உறுமி நிற்கின்ற .பேருந்து ஒன்றையும் காணோம். அவனுக்கு இது வரை கிடைத்த அந்த ஒரே…

ராஜா வீடும்…கன்றுக்குட்டியும்!

சாய் ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு ஒரே ஒரு ராணி. தினசரி காலையில் தூங்கியெழுந்தது முகம் கழுவுவதற்கு முன், முதல் வேலையாக மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தவறாத பதிவிரதை. சாந்த சுபாவம்.…

இரவில் கனவில் வானவில் – (3 & 4)

எஸ். ஷங்கரநாராயணன் 3 சரவணப் பெருமாளுக்கு இரண்டு பையன்கள். ஒருவன் இங்கே உள்ளூரில் வங்கி அதிகாரி. அவன் மூத்தவன். அடுத்தவன் கம்பியூட்டர் பாடம் படித்து தற்போது மலேஷியாவில் இருக்கிறான். இரண்டு பேருக்குமே கல்யாணம்பேசி நிறையப்பேர்…

கவிதைகள்

கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஅந்த நாள் வரப்போகு தென்று அறிபவன் நான், கண் பார்வை யிழந்து மண் பூமி தெரியாத போது! விழித்திரை யிட்டு விடுவித்துக் கொள்ளும் என்னுயிர் நிசப்த நிலையில்! இரவு வானில்…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)

புதுவை ஞானம் xxxi 154 )கடவுள் போல் காட்சி தருவதற்காய் தேடினான் ஒருவனை அந்த ஓவியன் எனக்குப் பிறந்தான் என்பதால் அல்ல என்னுடன் இணையாய்ப் போருக்குச் செல்ல ! 155) அங்கே குவிப்பான் ஆதாயங்களை…

தாஜ் கவிதைகள்

தாஜ் இறந்த காலம் ** தன் பேரழிவின் உயிர்வதை யெண்ணி அடிமரம் அழும். நின்று படர்ந்து நிழல் காத்த காலத்தினை குரலற்றத் துடிப்பில் நோந்து கொள்ளும். சாய்த்துப் பிளந்த கோரக் கரங்களின் ஆராஜகத்தை மங்கும்…

பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2982. “இந்த உலகில் இறந்தவர் எலும்பினை மேலும் நன்னெறியில் பொருந்துவதற்காக நன்மையாகின்ற தன்மையானது அந்த எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும்” என எண்ணிய அருள் நோக்கத்தால் அந்த எலும்பை முன்பு அந்த உடம்பில்…

மரணக் கட்டைகள்!

சி. ஜெயபாரதன், கனடாஅனுமார் வால்போல் ஆயுள் நீண்டாலும், சாவு மணியோசை முன்கேட்கும்! வாலியின் முதுகைப் பிளக்கும், வெடி மின்னல்! நொடிப் பொழுதில் மாறிடும், அவனியிலே அஞ்சி அஞ்சி வாழும், மானிடமும், மரங்களும்! பெட்டி செய்தாலும்,…

அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)

கரு.திருவரசு என்னால் உனக்கெதும் ஆகுவதோ! எதற்கு வந்தனை? எனக்கேட்க "முன்னிரா நேரம் என்வீட்டு முன்றில் நிற்பீர், உணவளிப்பேன்! என்னை நீவிர் மறந்திருப்பீர் என்னால் மறக்க இயலவில்லை! என்னைக் காத்து வாழ்வளிக்க இறைஞ்சு கின்றேன்!" என்றனளே…