பவளமணி பிரகாசம் வலை விரித்து மானை பிடிக்கலாம், வலை வீசி மீனை பிடிக்கலாம், வலை பின்னி சிலந்தி வசிக்கலாம், வலை துணியில் வடிகட்டலாம், வலை கட்டி ஊஞ்சலாடலாம், வலை தாண்டி பந்தடிக்கலாம், வலை திரையால்…
புதியமாதவி, மும்பை. உன் தோள்களின் மாலைகள் எனக்கிில்லை ஏனென்றால் நான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி இல்லை உன் பாடலின் ராகங்கள் நானில்லை ஏனேன்றால் நான் இருட்டில் கரைந்த மீரா இல்லை நான் உன் தாயில்லை தங்கையில்லை…
அருண்பிரசாத். துவங்கியது மாயமான் தேடல் அடர்ந்த காட்டில். பேரழகொளி பரப்பி சுவாலைக் கண்களுடன் இலக்குகள் தொடர்ந்து இடம்பெயர்கின்றன. தொடர் கிளைத் தாவல்களுடன் சிராய்ப்புகளின் சுகங்களுடன் வேட்டை தொடர்கிறது. குருதி தோய்ந்த கூர்மழுங்கிய அம்புகள் வழிநெடுகிலும்,…
அனந்த் எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1) o0o…
எஸ் ரமேஷ் அறைகிறது என்னை உன் வாதை இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே தவித்து அலையும் பட்டாம்பூச்சியை நானறிவேன்... நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே சோகையாய் விரிந்த நாய்குடைப் புன்னகை கூடப்போதும் என் இருட்குகை முழுதும் சுடர்…
கவியோகி வேதம் பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ!-கம்பன் ..பந்தியிலை போட்டாச்சு! பட்டாடைக் கவியுடுத்தும்-நண்பர்களே! ..பருகஒரு விருந்தாச்சு!-நீங்கள் ..பருக ஒரு விருந்தாச்சு! .. வால்மீகி சொத்துதந்தான்!-நம்கம்பன் ..வாரிசாக தனைவரித்தான்! கால்தொட்டு கும்பிட்டான்!-தனிவழி! ..கனஜோராய் விருந்துவைத்தான்!(பட்டாபி..) .. தசரதச்…
இரா முருகன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது ----------------------------------------------------- சிற்றில் அழைப்புமணி ஒலித்துக் கேட்கிறாய் 'என் மகன் எங்கே ? ' தெரியலை எனினும் கேள். இறுகக் கட்டி…
ருத்ரா காலத்தின் பிரம்மாண்டத்தைக்கண்டு மிரண்டு எழுதிய மின்னல் கவிதை இது. ஆனாலும் ஒரு பிரம்மாண்டத்தைக் கண்டு இன்னொரு பிரம்மாண்டம் மிரண்டு போவதா ? நீ காலத்தை சொல்கிறாய் நான் உன் கவிதையைச் சொல்கிறேன். உன்…