திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071213_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

வாஸந்தி பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். "வாழ்க வையகம், வாழ்க வளமுடன்" என்பதே அவரது தாரக மந்திரம். என் நாடு, எனது மொழி, எனது மதம்…

அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் ஒப்பற்ற இலக்கியமாக இன்றும் வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் இருக்கும் மொழி தமிழ் மொழியாகும். இம்மொழியை மறைத்திரு தனிநாயக அடிகளார் “ஆங்கிலம் வணிகத்தின் மொழியென்றும் இலத்தின் சட்டத்தின் மொழியென்றும்…

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்

மலர்மன்னன்மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது…

படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்

விஜயன் பதிமூன்று வாரங்களாக படித்ததும் புரிந்ததில் நான் புரிந்த கொண்ட சமூக, அரசியல் அவலங்களைப் பற்றி மட்டுமே எழுதினேன். தீடீரென்று, எனக்கே எழுதுவது அலுப்புத்தட்ட ஒரு இடைவெளி விடலாமா என்று யோசித்த போது, என்…

குறிப்பேட்டுப் பதிவுகள் -4!

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…

டபுள் இஞ்ஜின்

உஷாதீபன் இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் எண்ணிலடங்காத பிரச்னைகள்! நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதை நிச்சயம் ஊகம் செய்திருப்பீர்கள். கணவன்-மனைவி both employed பிரச்னைதான். �அவருக்கென்னப்பா டபுள் இஞ்ஜின்�� �சம்பளத்தை வாங்கி;க்கொண்டு போய்…

ஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா

சித்ரா சிவகுமார் இரவில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை இரவு வணக்கமாகவும் கொள்ளலாம். ஜப்பானில் இரவு நேரம் என்பது மக்கள் தங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம்.…

அறிவிப்புகள்

2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது

நா கோபால்சாமிக்ருஷாங்கினி, திலீப் குமார், லதா ராமகிருஷ்ணன் அடங்கிய நடுவர் குழு தேவதேவனை "விளக்கு" பரிசுக்குத் தேர்வு செய்துள்ளது 2006-ம் ஆண்டு "விளக்கு விருது" தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது. நா கோபால்சாமி

கோவிந்த் கடிதம் பற்றி

ராம்கிதமிழ், இந்தியா, அமெரிக்கா என பேச ஆரம்பித்து இறுதியில் ஹிந்தி படியுங்கள் என முடித்திருக்கிறார் நண்பர் . பல நாட்களாக இந்த ஹிந்தி பிரச்சாரம் பல வடிவங்களில் வருவதன் காரணம் மட்டும் புரியவில்லை. உலகமயமாக்கலின்…

பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்

கோவிந்தராஜன்கடந்த வார இதழில் கோவிந்த் என்பவர் எழுதியுள்ள "தமிழ்-தமிழர்-தேசப்பற்று: சில எண்ணங்கள்" என்ற அறிவிப்புக் கட்டுரையில் கலிஃபோர்னியா வளைகுடாப்பகுதியில் சமீபத்தில் துவங்கப்பட்ட பாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கூறப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு விளக்கம் தர பாரதி…

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை

lமுனைவர் மு.இளங்கோவன்lபேரன்புடையீர் ஐயா வணக்கம். திண்ணை கண்டேன்.மகிழ்ச்சி. பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை சிறப்பு.ஈழத்தில் வழக்கில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை நன்கு அறிமுகம் செய்துள்ளார். நாட்டுப்புறப்பாடல்கள் என்ற வகையில் மக்களிடம் அறிமுகமாகத்…

பாற்கடலைக் கடைந்த விதம்

மலர்மன்னன் நான் எதிர்பார்த்தது போலவே புதிய மாதவி மும்பை அரசியல் குறித்துச் சிறந்த முறையில் ஆய்வு செய்து திண்ணை வாசகர்களுக்கு விரிவாகத் தகவல்கள் தந்துள்ளார். சிவ சேனை பற்றிய எனது முந்தைய கட்டுரையில் தமிழர்கள்…

லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..

மகேஷ்.ப்ரிய ஷங்கரநாராயணன், உங்கள் கட்டுரையைப் போலவே கடிதமும் நகைச்சுவையாய் இருந்தது. தொடர்ந்து இதுபோல் பெருஞ்சுற்றிதழ்களில் 'பவனி' வந்து எழுத வாழ்த்துகிறேன். உங்கள் வீரதீரபராக்ரமங்களை தனிக்கட்டுரையாய் எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் குழாமும் வாசகர் கூட்டமும் படித்து…

உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா

அறிவிப்புஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா நாள் 15.12.007 மாலை 6 மணி இடம்: புக் பாயிண்ட், 160, அண்ணா சாலை, (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்) சென்னை தலைமை: இந்திரா பார்த்த சாரதி வரவேற்புரை:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ? (கட்டுரை: 7)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"நிலையான விண்மீன்கள் உமிழும் ஒளிக்கதிர்கள் சூரிய ஒளியை ஒத்த இயற்கைத் தன்மை கொண்டவையே." விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை.…

இலக்கிய கட்டுரைகள்

கானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7

பா வெங்கடேசன்கானல் காடு அக்டோபர் 6, 7 தேதிகளில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது கானல் காடு சந்திப்பும் (முதல் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்) ஒரு வெற்றிகரமான நிகழ்வு என்று இதை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த…

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா

வே.சபாநாயகம் 1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரியவேண்டும்.தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது 'Memory shaped by art' என்று சொல்வார்கள்.…

நினைவுகளின் தடத்தில் – (3)

வெங்கட் சாமிநாதன் எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன்…

லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி

ம.ந.ராமசாமி 1954ம் ஆண்டு முதன்முதலாக லா.ச.ரா. அவர்களை நான் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையை ஒட்டிய ஏதோ ஒரு சந்தில் வீடு எடுத்துக் குடியிருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இரு நண்பர்கள் என்னை அவர் வீட்டுக்கு…

ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு

முனைவர் மு.இளங்கோவன் பள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று.பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புடைய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும்.நாடகவடிவில் எழுதப்படும் தன்மையது இஃது.கலம்பக நூல்களில் பள்ளுப்பாட்டு…

ஆட்டோகிராப்

அப்துல் கையூம் ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த - நமக்கு பிடித்தமான - நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே…

லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்

பா. உதயகண்ணன்இந்த நூற்றாண்டின் மகத்தான சிறுகதைச் சாதனையாளர் லா.ச.ரா.வின் மறைவையொட்டி, காலத்தில்அவருடைய இருப்பைக் கணக்கெடுத்து, மொழிக்கு அவரது கொடையை கவனப்படுத்தி, பல்வேறு கருத்துவளாகங்களில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை ஒரே குடையடியில் போல நூல் ஒன்று…

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)

அசன் மைதீன் "பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை,…

வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு

அன்பாதவன் "ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க வேண்டும். இரவல்…

இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் அறிமுகம்: அம்பாப்பாடல்கள் நாட்டார் பாடல்களின் வகைகளுள் தொழிற்பாடல் வகையைச் சேர்ந்தன தொழிற்பாடல்கள் மக்கள் பாரம் பரியமாகக் கூடித் தொழில் புரியுமிடங்களிலே வழங்கப்படுபவை. இலங்கைத்தமிழ் மக்களிடையே வழங்கிவரும் தொழிற்பாடல்களில் முக்கிய வகைகளில்…

கதைகள்

மாத்தா ஹரி – அத்தியாயம் 40

நாகரத்தினம் கிருஷ்ணா ஒருவருக்கு மூவராக காரில் அமர்ந்திருந்தும், பெண்களுக்கிடையில் பேச்சென்று ஏதுமில்லை. அமைதியாக இருந்தனர், அல்லது எங்கே தொடங்குவது என்ன பேசுவதென்கிற குழப்பம். முன் கண்ணாடியில் விழுந்த மழைத்துளிகளைத் துடைக்க வைப்பர் இருக்கின்றன, ஹரிணியின்…

பொண்ணுங்க மாறிட்டாங்க!

நவநீ ஸ்வேதா! என்னாச்சு ஒனக்கு? ஒம்பின்னாடியே எத்தனை நாள் இப்படி நாய் மாதிரி அலையிறது? ப்ளீஸ்… நீ இந்த மாதிரி சைலன்ட்டா இருந்தா நான் அப்பறம் காலேஜ்-க்கே வரமாட்டேன். என்னோட ஃபியூச்சரே ஸ்பாய்ல் ஆனாலும்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதல் அரங்கில் நுழைவதே தனிச்சுவை ! காதலில் உறுதியைத் தேடினால் தேடல் வீண் போகாது ! அந்தோ ! உள்ளன பந்தமிலாக் கொடூர நெஞ்சங்கள் ! நம்பத் தகும் ஓர்…

தைவான் நாடோடிக் கதைகள் 4

தமிழில் மதுமிதா 4. பான் பின் ஷான் ரயிலில் பயணம் செய்து தெற்கு தைவானின் காவ்ச்யிங் - கில் நுழைந்தால் 'பான் பின் ஷான்' என்னும் மலையைப் பார்க்க இயலும். இந்த மலை இதன்…

வெள்ளிக் கரண்டி

அ.முத்துலிங்கம் நான் பிரச்சினையில் இருந்தேன். பெரும் பிரச்சினை. கடந்த ஒருவாரமாக எதிர்பார்த்ததுதான். அன்று காலை மனைவி நித்திரையில் இருந்து எழும்பியதும் முதல் வேலையாக 'இன்று முழுக்க மழை பெய்யும்' என்று சொல்வதுபோல 'இன்று முழுக்க…

கலைகள்

The Mighty Heart :இது இது தான் சினிமா:

கோவிந்த் தீவிரவாதத்தின் வாசலாகிப்போன பாகிஸ்தானில், ஒரு அமெரிக்க இதழாளர் கடத்தப்படுகிறார். படத்திலோ, காலின் பவுல், முஸ்ரப் என்று வசனங்கள் வருகின்றன. 9/11 WTC க்கு காரணம் மொஷாத் என்கிறார் ஒரு முகமதிய தீவிரவாளர். காரணம்,…

இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்

பாரதி மகேந்திரன் தேவை: இட்டிலி மாவு - 1 லிட்டர் பச்சை மிளகாய் - 6 - அல்லது தேவைப்படி உப்பு (ஏற்கெனவே மாவில் உப்பு உள்ளது. கவனம்!) - தேவைப்படி கறிவேப்பிலை -…

கவிதைகள்

மனிதர்கள் இல்லாத பொழுதுகள்

துவாரகன் துயர் கவிந்த பொழுதுகளோடு அலைகிறேன். கூட்டத்திலிருந்து தவறிய தனியன் ஆடுபோல். இருப்பது, புசிப்பது, படிப்பது எப்படி முடியும்? மனிதர்கள் தவிர்ந்த நீண்ட பொழுதுகளில், நாய்களும், எலிகளும், குரங்குகளுமே அதிகமும் சந்திக்கின்றன. கூட இருந்த…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்கருணையில்லாத பிணம் கருணையில்லாத பிணம் எல்லோரையும் கதறியழ வைக்கிறது அன்பின்றி சிறு நன்றியுமின்றி சாவின் களை நிரம்பிய முற்றத்தில் துக்கம் பூத்து படர்கிறது வாசமாய் பேரிசை கொண்டெழுகிறாள் ஒப்பாரிப் பெண் உயிரைத் தேடி அசைவைத்…

தாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அனுதின வேலைகளை முடித்த பிறகு விளையாட்டுக் களிப்பிலும் நேரத்தைக் கழித்து இரவில் திரும்ப வேண்டுமெனத் தீர்மானித்து காலைக் கதிரொளியில் ஒரு நாள் கவலை யின்றி நான் வெளியே…

அக்கினிப் பூக்கள் -4

சி. ஜெயபாரதன், கனடா கந்தை யானாலும் கசக்கிக் கட்டு ! காவிரி காயுது கண்ணீர் விட்டு ! குடிநீருக் கில்லை துட்டு ! குடிக்கவா ? குளிக்கவா ? கசக்கவா ? ஞானப் பெண்ணே…

நின்னைத் துதித்தேன்

சக்தி சக்திதாசன் நின்னைத் துதித்தேன் - நின் நினைவில் கலந்தேன் என்னை மறந்தேன் எழுத்தாய்ச் சுரந்தேன் ஆயின நூற்றோடு ஒரு அகவைகள் இருபத்திஜந்து அவனியில் நீ பிறந்து அன்னைத்தமிழின் மைந்தனாய் தமிழைப் போற்றினாய் தமிழாய்…

பாரதி இன்றிருந்தால்..?

கவியோகி வேதம் இங்கேநம் பாரதி இன்றிருந்தால், ..எப்படி ஆநந்தக் கூத்திசைப்பான்! இளைஞர்கள் எல்லாம் கணினியிலே ..ஏற்றங்கள் பெற்றதைக் கண்டிருப்பான்! வளைகுடா நாட்டில்நம் பெண்டிரெல்லாம் ..வசதியாய் வாழ்வதைப் போற்றிசெய்வான்!(இங்கேநம்) .. விஞ்ஞானி ஆனவர் மேல்பதவி ..மேவிய…

பாரதிக்கு அஞ்சலி!

ஆதிராஜ் செஞ்சொற்கவிபாடி சேவிக்கும் வேளையிலே நெஞ்சில் ஏதோ நெருடுவதும் தெரிகிறது! பாரதியார் அஞ்சலிக்குக்குப் பாரெங்கும் கூடுகிறோம் நேரெதிரே கேட்கின்றேன்! நில்லுங்கள்! சொல்லுங்கள்! பாரதத்தின் விடுதலைக்குப் பாடியவர் பாரதியார்! பாரதத்தில் பிரிவினைகள் பேசுவதும் அஞ்சலியா? மழலைமொழிப்…

எனக்கென்று ஒரு கை

கவிதா, நோர்வே மழை துளி தெறித்து உடைந்து விழும் என் ஜன்னல் ஓரம் ஒரு கை மெல்ல என் தலை வருடும் கன்னத்தில் முத்தம் ஒன்று ஈரமாகி உடன் காயும். போர்வைக்குள் சூடாகி திரும்பிப்…

முப்பெருவெளியின் சங்கமம்

த. ஆரோக்கிய சேவியர் என் அலுவலக கண்ணாடிச் சுவர்கள் வழியே பரந்து விரிந்து இருக்கும் சமுத்திரத்தைப் பார்க்கிறேன் பொதி சுமந்த கழுதைகள் போல கப்பல்கள் அணிவகுத்து காத்துக்கிடக்கின்றன சுமை நீக்கி சுமை ஏற்ற நீரில்…