பாஷா உன்னிடமிருந்து ப்ரதி எடுக்கப்படுவதே என் கவிதை எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும் எனக்கு கொடுத்துவிட்டு ஏராளமான எழுதப்படாத கவிதைகளை உனது சிரிப்பாய், சிணுங்களாய் கோபமாய்,கொஞ்சலாய் அக்கரையாய்,அழுகையாய் 'வெண்ணெய்.... 'என்றேயெனை அழைக்கும் அழகாய் உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய்!…
ஸ்ரீமங்கை எட்டுவயது மகன் கண்கசக்கியபடி சொன்னான், 'எதிர்வீட்டு பாட்டி இறந்ததாக அழுதவர்களில் ஒருவர் கூட என் பட்டாம்பூச்சியை பல்லி தின்றதற்கு அழக்காணோம் ' நானும் அழுதேன் எனது எட்டுவயது நான் இறந்ததை நினைத்து... (kasturisudhakar@yahoo.com)
ஜீவன் 1. வாழ்க்கை தேவையாயிருக்கிறது அவசரமேதுமில்லாதொரு மாலைப்பொழுது பொன் மஞ்சள் நிறத்தொரு வானம் மெத்தென கிடக்க ஒரு பச்சைப் புல்வெளி மெதுவாய் தாலாட்டிப்போக கொஞ்சக் காற்று வேலையில் தொலைந்து போகிறது பகல் வேலைக்காய் தொலைகிறது…
மாலதி ---- கதிர்ச்சூட்டுக்கு என் தீர்க்க ரேகைகளை மறுத்து ஒரு வெள்ளியும் கடந்ததுவோ எனும்படி பெருஞ்செடியும் குறுமரமும் அல்லவுமாய் போல் ஒன்று பச்சைக்குடை விரித்து எனைக்கவிந்தது. நான் மட்டும் அந்த மர வளைப்பில், நாய்க்குடைக்குள்…
வேதா மஹாலஷ்மி பிறந்த நாள் விழாவில் பிய்த்து பிய்த்து பலகாரம் தின்னும் மாணவர் கூட்டம்... பிழைப்புக்கே பிச்சையெடுக்கும் அவலம் சொல்லி அங்கலாய்க்கும் பேதை மகளிர்... அக்கா, மாமா.. ஆனந்தத்தை கும்மியடிக்கும் அடுத்து அமர்ந்த சக…
நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர் பல லட்சம் செலவில் அரண்மனைப் போல் கட்டிய புதுவீட்டில் கட்டிலில் படுத்தபடி கூரையெங்கும் கூறுகட்டப் பட்டிருக்கிற மரப் பலகைகளைப் பார்க்கிற போது மனதைப் பிசைகிறது.... இந்த ஒற்றை இல்லத்தை உருவாக்குவதற்காக…
அனந்த் வெண்பாவை மேனி வியர்த்திடச் செம்மையுறப் பண்ணுதல் பார்ப்போம் வியந்து! பொருள் 1: (அழகு மிகவேண்டும் என்பதற்காக) வெள்ளைக்கார மங்கை தன் உடம்பை வெயிலில் கிடத்தி வேர்வைசிந்தி, சிவப்புநிறமாக ஆக்குவதைக் கண்டு நாம் அதிசயிப்போம்.…
அருண்பிரசாத் நிச்சயமின்மையின் வெளிகளில் மெல்ல கரைகிறது இலைக்குள் சிறைபட்ட துளியின் துக்கம். விலகிச் சென்று வழிகாட்டுகிறது ஒற்றை ஆடு முழு மந்தைக்கு. அளவிட முடிவதில்லை எங்கும் பரவி நிற்கும் சார்தலின் பரிமாணங்கள். everminnal@yahoo.com
பவளமணி பிரகாசம் சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே சிறு பொறியும் பற்றித்தான் பெருந்தீயும் மூளுமே…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிமிடங்களின் தீர்வை கரைக்காத கண்ணாடிக் குடுவையில் நமக்கான கரைதல்கள் மேலும் கீழும் கொட்டியபடியே... உன் கழித்தலில் என் கூட்டலும் கணக்கிடப்படும் வேளைகளில் நம் தசமம் சரியென்றெண்ணி தலையாட்டுகிறாய்... வார்த்தைகளால் நம் தலைகள் சீவப்படும்…