வேதா மஹாலஷ்மி பிறந்த நாள் விழாவில் பிய்த்து பிய்த்து பலகாரம் தின்னும் மாணவர் கூட்டம்... பிழைப்புக்கே பிச்சையெடுக்கும் அவலம் சொல்லி அங்கலாய்க்கும் பேதை மகளிர்... அக்கா, மாமா.. ஆனந்தத்தை கும்மியடிக்கும் அடுத்து அமர்ந்த சக…
நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர் பல லட்சம் செலவில் அரண்மனைப் போல் கட்டிய புதுவீட்டில் கட்டிலில் படுத்தபடி கூரையெங்கும் கூறுகட்டப் பட்டிருக்கிற மரப் பலகைகளைப் பார்க்கிற போது மனதைப் பிசைகிறது.... இந்த ஒற்றை இல்லத்தை உருவாக்குவதற்காக…
அனந்த் வெண்பாவை மேனி வியர்த்திடச் செம்மையுறப் பண்ணுதல் பார்ப்போம் வியந்து! பொருள் 1: (அழகு மிகவேண்டும் என்பதற்காக) வெள்ளைக்கார மங்கை தன் உடம்பை வெயிலில் கிடத்தி வேர்வைசிந்தி, சிவப்புநிறமாக ஆக்குவதைக் கண்டு நாம் அதிசயிப்போம்.…
அருண்பிரசாத் நிச்சயமின்மையின் வெளிகளில் மெல்ல கரைகிறது இலைக்குள் சிறைபட்ட துளியின் துக்கம். விலகிச் சென்று வழிகாட்டுகிறது ஒற்றை ஆடு முழு மந்தைக்கு. அளவிட முடிவதில்லை எங்கும் பரவி நிற்கும் சார்தலின் பரிமாணங்கள். everminnal@yahoo.com
பவளமணி பிரகாசம் சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே சிறு பொறியும் பற்றித்தான் பெருந்தீயும் மூளுமே…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிமிடங்களின் தீர்வை கரைக்காத கண்ணாடிக் குடுவையில் நமக்கான கரைதல்கள் மேலும் கீழும் கொட்டியபடியே... உன் கழித்தலில் என் கூட்டலும் கணக்கிடப்படும் வேளைகளில் நம் தசமம் சரியென்றெண்ணி தலையாட்டுகிறாய்... வார்த்தைகளால் நம் தலைகள் சீவப்படும்…
தீபம் கோபி, சிங்கப்பூர் காண்பதனைத்தும் தனதென்று கவலையின்றி இன்புற்று இனித்திருந்த மழலை! வாலிபத்தின் வசந்தத்தில் கனவுகளில் திளைத்து களித்திருந்த இளமை! பொறுப்புகள் சுமந்து கனவுகள் நிறைவேற உழைத்துக் களைத்து துளிர்த்த வியர்வைத்துளி மறையுமுன்... வெள்ளிநரை…
புகாரி . சித்திரையே எழில் முத்திரையே சொல்லிவிடு உன் சூட்சுமத்தை எத்தனையோ தமிழ் மாதங்களும் இன்னமுதத் தேன் அளந்தாலும் முத்தொளிரும் தமிழ்ப் புத்தாண்டில் முரசொலித்தே உன் முகமெடுத்து முத்தமிழர் ஏன் முன்வைத்தார் மொழிவாயே என்…
பனசை நடராஜன்,சிங்கப்பூர் ! கொல்கிறார் மக்களை, கோட்ப்பாட்டைக் காக்கவாம்; கல்மனம் கொண்ட கயவர்கள் - சொல்வார் தெளிவில்லா அத்தகைய தீயோர் அழிந்தால் ஒளிருமே இந்த உலகு! பனசை நடராஜன்,சிங்கப்பூர் (feenix75@yahoo.co.in)
சத்தி சக்திதாசன் இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு இருட்டழிந்து ஓளி வரட்டும் அன்பு எனும் அந்த அகல் விளக்கை சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை மின்சாரம் மறைந்து போனால் விளக்குத்தானே வெளிச்சம் தரும். எங்கே…