திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020330_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)

மஞ்சுளா நவநீதன் சங்கரலிங்கபுரத்தின் கலவரம் போலீஸில் தேவையான அளவு தலித்துகள் இல்லாததன் விளைவு, போலீஸ் அத்துமீறல் எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானதாகவே இருப்பதைப் பற்றி காலச்சுவடு கண்ணன், அ மார்க்ஸ் போன்றவர்கள் சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்.…

கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது

சின்னக்கருப்பன் வெகுகாலத்துக்கு முன்னர் திராவிடர் கழகம் ஒரு வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தது. அரசு அலுவலகங்களில் இந்து, கிரிஸ்தவ, முஸ்லீம் மதங்கள் சார்ந்த பிம்பங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு சில அலுவலகங்களில் இருக்கின்றன. அவைகள் நீக்கப்பட வேண்டும்…

சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!

கோமதி நடராஜன் 'குழந்தை வளர்ப்பு 'என்பது அற்புதமான ஒரு கலை.நம்மில் பலர்,அக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.குழந்தை வளர்ப்பில்,உடல் வளர்ச்சி மனவளர்ச்சி என்ற இரு பெரும் பகுதிகளில்,முன்னதைப் புத்தக அறிவில் திட்டமிட்டுச் செயலாற்றிவிடலாம்.மனவளர்ச்சி என்று பார்க்கும்…

சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா

அஸ்கார் அலி எஞ்சினியர் சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் 'அனைத்துடனும் சமாதானம் ' என்பதாகும். பெர்ஷிய மொழியில் குரானென மதிக்கப்படும் மாஸ்னவி என்ற புத்தகத்தை எழுதிய மெளலானா…

ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)

முக்கியமான மேற்கத்திய தத்துவவியலாளர்களிலேயே, மிகவும் புரிந்துகொள்ள முடியாதவர் என்று ஹெகலைத்தான் சொல்வார்கள். அவருக்கு முன்னாள் இருந்த இம்மானுவல் காண்ட் அவர்களை ஆழமாக விமர்சித்த ஹெகல், கார்ல் மார்க்சுக்கு முன்னோடி. மார்க்ஸின் மீதி ஹெகலின் பாதிப்பினால்,…

ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது

பொன் முத்துக்குமார் திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல். தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம்…

தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஒரு நாள் - 'நான் ' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது ' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்

சி. ஜெயபாரதன், கனடா. பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்! மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகக் கனவு கண்டு, காவியங்கள் எழுதி,…

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி

நேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது. நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச்…

இலக்கிய கட்டுரைகள்

‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)

இரா மதுவந்தி அலெஹாண்ட்ரோ கோன்ஸாலஸ் இனாரிட்டு (Alejandro Gonzநூlez Iண்நூrritu) என்ற வாயில் நுழையாத பெயர் கொண்ட இந்த புது இயக்குனரின் முதல் படமே சென்றவருட ஆஸ்காரில் பெரிய அளவில் பேசப்பட்டு விருது கிடைக்காமல்…

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

ஜெயமோகன் [ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீலபத்மநாபனைப்பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப்படுவது இல்லை.அவரது படைப்ப்புக்கள் பேசப்படுவதுமில்லை. அவரைப்பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால்…

நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு

எம் .வி .குமார் பாரதி நேஷனல் ஃபாரம் திருவனந்தபுரம் நீலபத்மநாபனைப்பற்றிய விமரிசனக்குறிப்ப்புகளில் முக்கியமானவை அனைத்தையும் தொகுத்து ஒரு பெருந்தொகைநூலை பிரசுரித்துள்ளது .மூன்று மொழிகளில் வந்த விமர்சனங்கள் இத்தொகை நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரள இலக்கியவரலாற்றாசிரியரான டாக்டர்…

எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்

பாவண்ணன் எங்கள் குடும்பத்தில் நான் மூத்தபிள்ளை. மூத்தவனாக இருப்பதில் முதல் நஷ்டம் அவன் யாருக்கும் தம்பியாக இருக்க முடியாது என்பதுதான். குறிப்பாக எந்த அக்காவுக்கும் தம்பியாக இருக்க முடியாது. எல்லாக் குடும்பங்களிலும் மூத்த குழந்தை…

திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்

திலகபாமா திருவனந்தபுரம், இது எனது இரண்டாவது அநுபவம்.பிப்ரவரி மாதம் 24ம்தேதி ஞாயிறு மாலை 6 மணியளவில் 101வது கவியரங்கமும் ' சூரியனுக்கும் கிழக்கே ' என்கிற தங்களது கவிதைத் தொகுதி மீதான விமரிசனமும். வாருங்கள்…

நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை

கல்பனா சோழன் அரசியல், மத கலவரங்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போடும் கலவரத்தைக் கண்முன் காட்டுவதில் கை தேர்ந்தவர் சுப்ரபாரதிமணியன். அதற்கு 'நகரம் - 90 ' இன்னொரு சான்று. ஹூசேன்…

கதைகள்

கறுப்பு வெளிச்சங்கள்

அலர்மேல் மங்கை முருகேசன் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். பீடிப் புகையை இழுத்துப் பின் வெளியே விட்ட போது பனிப் புகையுடன், பீடிப் புகையும் சேர்ந்து ஒரு குவியலாகப் பறந்தது. கிறுக்குச் சாமி…

ஓட்டப் போட்டி

தானா 'வீரர்கள் இஇவேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள் ' 'இரு மருங்கிலும் தள்ளி நின்று உற்சாகப்படுத்தும்படி பொது மக்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ' முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒலிபெருக்கியில் யாரோ பேசினார்கள். முன்னணியில் ஓடிக்கொண்டிருந்த…

இரக்கம்

விந்தன் முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 'நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது…

கவிதைகள்

நலமுற

வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் 'மாலை '* வலம் வருவோர்கள் மகிழ்ந்…

ப்ரியமுள்ள தொலைபேசிக்கு

வ. நாகராஜன் அதிகாலைப் பனியில் நனையாதே அம்மாவிடம் மீண்டும் சொல்ல வேண்டும் தொலைதூர நண்பனின் பிறந்தநாளுக்கு நள்ளிரவு வாழ்த்த வேண்டும் முடிவில்லா விவாதத்தை பிரிய நண்பியிடம் இன்றும் தொடர வேண்டும் முத்தம் வேண்டி நாளைய…

பனி மழை

புஷ்பா கிறிஸ்ாி வானத்திலிருந்து பனித்துகள்கள் பஞ்சுத் துண்டங்களாய் யாாிந்தப் பனித்துகளகளை அங்கிருந்து இங்கே போடுகிறார்கள் ? எத்தனை பொிய தலையணை ஒன்று அதிலிருந்து பஞ்சுப் பொதி பிய்ந்து துகள்களாகி கீழே விழுகின்றதோ ? என்ன…

நினைவுகள்

எஸ். வைதேஹி. மறந்து மறந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் விட்டுப் போன என் நினைவுகளை! இழையிழையாய் பிரிந்து போனது பற்றியும் சிக்கிச் சுழன்று மகிழ்ச்சியில் திளைத்தது பற்றியும் மொட்டைமாடியில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் அம்மா சொன்ன '…

இன்னொரு ஜனனம்

சேவியர். இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும் பிரசுரமாயின. எல்லைகள் இல்லை எனும் ஓர்…

கடிகாரம்..

ஆனந்தன் கடும் மலையையும், பரந்த உலகத்தையும், அகன்ற வானத்தையும், ஆழ் கடலையும், ஆட் கொண்ட விஞ்ஞானமும், உன் கட்டுப்பட்டில்! நான் துங்கும் போது நூறுக் கால்கள் மூளைக்கும் - உனக்கு என் காதலிக்காக காத்திருக்கும்…

உன்னுள் நான்

கல்பனா சோழன் எனக்குத் தெரிந்த உனக்கும் உன்னுள்ளான உனக்கும் உள்ள இருதுருவ வித்தியாசத்தின் வியப்பு மறுபடியும். சவால் கூடிய உன்னுள் ரகசியத்தால் எனக்குத் தெரிந்த உன்னை எனக்கு வேண்டாம் போலிருக்கிறது. ***

முந்தைப் பெருநகர்

பா அகிலன் (பதுங்குகுழி நாட்கள் : பா அகிலன் : குருத்து வெளியீடு , தாய்த் தமிழ் பள்ளி வளாகம், கோபி செட்டிப் பாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம் 638476. விலை ரூ 45…

சொன்னால் விரோதம்

பசுபதி மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன் மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1) ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2) அயலாரை, அன்னியத்தைக் கண்டாலே அஞ்சிடுவோர் பயமென்னும்…

இன்னும் கொஞ்சம் வெண்பா

மத்தளராயன் பகல் நகரம் படுத்து நகர எடுத்துச் சுமப்போர் விடுத்துச் சிதறும் மலரே - அடுத்து நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்; கடக்கும் மெதுவே தெரு. இரவு நகரம் அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்…