திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070920_Issue

அரசியலும் சமூகமும்

9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்

கே. ஆர். மணி நிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர…

சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

மலர் மன்னன் ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர்.…

ஒரு சுனாமியின் பின்னே…

நரேந்திரன் 2004-ஆம் வருடம் தென்கிழக்கு ஆசியாவை உலுக்கியெடுத்த சுனாமி விட்டுச் சென்ற வடுக்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை. அதற்குள்ளாக கடந்தவாரம் இன்னொரு சுனாமி இந்தோனிஷிய கடற்பரப்பை மிரட்டிச் சென்றிருக்கிறது. நல்லவேளையாக கடந்தமுறையைப் போல…

அறிவிப்புகள்

குடி கலாச்சாரம்?

ஹமீது ஜாஃபர் கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்)…

ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பெரியார் குறித்த என் கட்டுரையைச் சிறப்பாக வெளியிட்டதுடன், அதற்கான படத்தையும் தெரிவு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீனி'யின் 'அந்த நாள் ஞாபகம் - பாட்டுக்கு பாட்டெடுத்து...'-- நகைச்சுவையோடு…

பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்

அறிவிப்புபாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம் புதுவைப் பல்கலைக்கழகமும்,சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி 125 கருத்தரங்கைச் செப்டம்பர் 21,22,23 இல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.இதில் இந்தியா,சிங்கப்பூர்,இலங்கை,இலண்டன்,மலேசியா,அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 200 அறிஞர்கள் பாரதி…

ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு

மன்சூர் ஹல்லாஜ் தக்கலை ஜமாத்தாரும் ஒரு பத்வாவால் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருக்கிறார்கள். ஜமாத்துகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது..? ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்... மனிதனை விடுதலை செய்யும் புதிய கருத்துக்கள்,நடைமுறைகள்,உலகெலாம் எழுந்து வருகின்றன. பழமைவாத…

கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது

நெய்தல் இலக்கிய அமைப்புகண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது நெய்தல் இலக்கிய அமைப்பு செய்தி neythalkrishnan@yahoo.com

மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…

கா.முத்துகிருஷ்ணன் வணக்கம் விநாயகர் சிலைகளை கடலில் போட்டு கரைக்கும் பொழுது கவலைப்படும் மங்களத்தின் நெஞ்சம் அதே விநாயகரை களிமண் சிலை வடிவத்தில் கரைக்கும் பொழுது கலங்கவில்லையா? விநாயகர் ஊர்வலத்தில் இளவட்டங்கள் குடித்துவிட்டு விசிலடித்து கும்மாளமடிக்கிறார்கள்…

கடிதம்

கே.பாலமுருகன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு…

இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்இராமசேது குறித்து அதன் இயற்கைத்தன்மை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னரே திண்ணையில் எழுதியிருக்கிறேன். இன்றைய சூழலில் இராம சேது குறித்தும் இராமர் குறித்தும் இத்தனை சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ள சூழலில் இது குறித்து…

கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா

அறிவிப்புகவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்தநாள் விழாவினைஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது.இந்த ஆண்டிற்குரிய விழாவைச் செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் பத்து விபூதி யோகம் விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்…

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

சுகுமாரன்பள்ளிக்கூடத்தில் நான் கால்வைத்த முதல் நாள் மழை பெய்தது என்றும் துவைத்து உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்துவைப்பதற்காக என்னை தலைமை ஆசிரியர் ரத்தினத்தின் மேஜைக்கு அருகிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு ஓடி வந்ததாகவும் அத்தை…

“படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்

விஜயன் “200 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரை பந்தயத்தை நிறுத்துவதென்று 18.8.1974 தேதியில் தமிழக அரசு அறிவித்ததின் நினைவுச் சின்னம்” சென்னை ஜெமினி மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) கீழே, நீங்கள் பயனித்திருந்தீர்களேயானால் ஒரு குதிரையின்…

மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்

தேவமைந்தன் இராமகாதையை வடமொழியில் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறும் கம்பன், மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றியிருப்பதாகக் கூறுவான். மலையாளத்தில் உள்ள ராம சரிதம்தான், அம் மூவரானவர் -…

ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்

முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இலக்கியவரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதமுடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில்கொண்டு எழுதவேண்டிய அளவில் தமிழ்கூறும் நல்லுலகின் பரப்பு அகன்றுள்ளது.உலகம்பரவிய தமிழர்கள் படைப்பு இலக்கியங்களையும்,பாடநூல்களையும்,…

பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்

கரு.திருவரசு அலைகடல் என்பதையும் அலைக்கடல் என்பதையும் ஒன்றுபோலக் கருதி எழுதுகிறார்கள். அது சரியா? அலை + கடல் = அலைகடல். கடல் என்பதன் பொருள் தெரிந்ததுதான். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்து முந்நீர்…

கதைகள்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24

வே.சபாநாயகம் கீழ மந்தையிலிருந்து கிளம்பி நடுத்தெருவை நோக்கி நடந்தார்கள். சிதம்பரம் வாழ்ந்த வீடு அந்தத் தெருவில்தான் நடுப் பகுதியில் இருந்தது. தெருமுனையில் இருந்த முதல் வீட்டைப் பார்த்ததும் சிதம்பரத்துக்கு அந்த வீட்டின் மணியப் பிள்ளை…

மாலை நேரத்து விடியல்

மொழிபெயர்ப்பு கௌரிகிருபானந்தன் வெள்ளை நிற மேகத்துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலந்து போவதை, வானம் காயப்பட்ட இதயம் போல் மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎவருடைய நடத்தை தெருப் பேச்சுக்கு வருகிறதோ அவரே முதலில் அண்டை அயலவரைச் சண்டைக்கு இழுப்பார் (நாடகம்: வஞ்சகன்) பணமே தீய செயல் புரிவதற்கு மூல காரணம் ! கிறித்துவத் தர்மம்…

மாத்தா ஹரி – அத்தியாயம் 28

நாகரத்தினம் கிருஷ்ணா உரையாடலுக்கிடையில் ஹரிணியின் கைத் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் மதாம் க்ரோ. - போன்ழூர் மதாம். எப்படி இருக்கீங்க? சொல்லுங்க. - ... - என்னை அவசரமா பார்க்கணுமா? என்ன விஷயம்? -…

கலைகள்

இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி

பாரதி மகேந்திரன்கடலைப் பருப்பு போளி தேவை கடலைப் பருப்பு - 500 கிராம் வெல்லம் - 500 கிராம் ஏலப்பொடி - ஒன்றரை தே.க. தேங்காய்த் துருவல் - 1 பெரிய தேங்காயின் ஒரு…

கவிதைகள்

காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் முகமூடிக்குள் ஊடுருவிப் பின்புலத்தை நோக்க உனக்கு ஆற்றல் உள்ளதால், உன் இனிய வசீகரத்தால் காண்பாய் நீ என் ஆத்மாவின் நிஜ முகத்தை ! வாழ்வுப் பந்தயத்தில் மங்கித்…

சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!

மட்டுவில் ஞானக்குமாரன் தூக்குத் தண்டனைக் கைதிக்கு தீர்த்து வைக்கப்படும் இறுதி விருப்பங்கள் போலவே இங்குள்ள எல்லாமே. விரிசல் விழுந்த சுவரை மூடி மெழுகிய சாந்து போலவே வாக்குறுதிகள். கடினமான ஒவ்வொரு எத்தனிப்புக்கும் பலன் புச்சியம்…

மேற்கு உலகம்!

மட்டுவில் ஞானக்குமாரன்மனித நேயத்தைப் புறக்கணிப்பதற்கு வசதியாக இதயத்தைக் கழற்றி எடுத்து விட்டு அங்கே இரும்பை பொருத்திக் கொள்வார்கள். சட்டப் புத்தகமே சட்டைப் பை எனும் பாவனை அந்தச் சட்டங்களை தமக்கேற்ப அடிக்கடி மாற்றுவார் இருபதைக்…

வீடு

வைகைச் செல்வி மூலை முடுக்கெல்லாம் சிலந்தி வலை பின்ன காலை விரித்தபடி நண்டோடும் வலைக்குள். மண்ணுக்குள் புழுக்கள் மரப் பொந்தில் ஆந்தை. விண்ணில் சிறகடிக்கும் பறவைக்குச் சிறுகூடு. காட்டுக்குள் உப்புக் கடலுக்குள் பல்லுயிர்கள். நாட்டு…

அக்கினியின் ஊற்று……

ருத்ரா கவிதை என்ற எழுத்துக்கு மூச்சு தந்தவன் நீ. வெறும் வித்வான்களின் சொத்தாகி இருந்த தமிழை உலகின் சிறந்த சொத்தாக்கியவன் நீ. வடமொழியால் வர்ணம் பூசப்பட்டுக்கிடந்த தமிழின் நிறம் காட்டியவன் நீ. தமிழின் திறம்…

காதலே ஓடிவிடு

குரும்பையூர் பொன் சிவராசா காதலியே உனைக் கைபிடிக்க என் கையை நீட்டியபடியே உனை நோக்கி நான் வந்தேன் ஆனால் உன் கைகளோ இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது அன்று செயலிழந்த என் கைகள் இன்னும்…

தொட்டிச் செடிகள்

ரஜித்தொட்டிச் செடிகளுடன் ஒரு குட்டி உரையாடல் தோழமைச் செடிகளுடன் நேற்று தொட்டிக்குள் செடியாய் இன்று பிறந்த மண்ணைப் பிரிதல் துயரம்தானே இல்லை இந்த மண்ணும் எங்கள் பிறந்த மண்தான் எங்களுக் கென்றுமில்லை மண்களில் பாகுபாடு…

“பெயரில்லாத நண்பனின் கடிதம்”

கே.பாலமுருகன், மலேசியாஇன்றும் அன்று போல நண்பனின் கடிதம் வீடு தேடி வந்திருந்தது! பெயர் குறிப்பிடாத ஒரு நண்பனின் கடிதம்! நலத்தை விசாரிக்கிறான் இலக்கியங்கள் பற்றி அருமையாகப் பேசி சளிப்படைந்து கொள்கிறான்! வேடிக்கையாக எழுதுகிறான் சில…

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

தீபச்செல்வன் 01 ஒருவேளை எனது குழந்தை அமெரிக்காவில் ஒரு மாளிகையில் பிறந்திருந்தால் எதை உணர்ந்திருக்கும் குழந்தைகளுக்கான சிறிய சவப்பெட்டிகள் நிறம்பிக் காணப்படும் எதுவுமற்ற நமது நகரத்தில் அல்லவா பிறந்திருக்கிறது 02 குழந்தைகளின் புன்னகைகளை நிலங்களின்…

பிடுங்கிகள்

மதியழகன் சுப்பையா ஊர்ந்து செல்லும் நிலையிலும் ஓயவில்லை தாய்வழிப் பாட்டி சுடுதண்ணீக்கு சுள்ளி பொறுக்குகிறாள் குறைகூலி என்றாலும்; வெளியிலும் வேலை செய்கிறாள் அப்பாத்தா சமைத்தலும் துவைத்தலும் முடித்து தையல் பணிக்கு இடையில் முறுக்கும் விற்கிறாள்…

நகைச்சுவை

சீரியல் தோட்டம்

கோமதி நடராஜன்சீரியல் தோட்டத்துக்கு உரிமையாளரான கல்லுப்பட்டி கந்தனைப் பற்றி ஊரெல்லாம் பேச ஆரம்பித்து,மாவட்டம்,மாநிலம் என்று பரவி நாடே பேச ஆரம்பித்து விட ,பத்திரிகைகள் அனைத்தும் அவர் ஊர் நோக்கி படை எடுக்கத் தொடங்கினர்.அதில் முதலாவதாக…

மீசை

அப்துல் கையூம் (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்) சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப…