மேற்கு உலகம்!
மட்டுவில் ஞானக்குமாரன்
மனித நேயத்தைப்
புறக்கணிப்பதற்கு வசதியாக
இதயத்தைக் கழற்றி எடுத்து விட்டு
அங்கே இரும்பை
பொருத்திக் கொள்வார்கள்.
சட்டப் புத்தகமே
சட்டைப் பை எனும் பாவனை
அந்தச் சட்டங்களை
தமக்கேற்ப அடிக்கடி மாற்றுவார்
இருபதைக் கொடுத்து
அறுபதாக
பிடுங்கும் வித்தை அறிந்தவர்கள்!
இங்கே
முதியோர் இல்லத்திற்கு
அனுப்புவது பற்றிய பயிற்சியை
குழந்தை பராமரிப்பு நிலையத்திலே
கொடுப்பார்கள்!
பெத்த பிள்ளைகளை
சத்திரத்தில விட்டுவிட்டு
நாய்களையும்
பூனைகளையும் தத்தெடுப்பார்கள்.
போர்களை நிறுத்துவதாக
கூறியே போர் தொடுப்பார்கள்
மனிதரை வேரோடு
கிள்ளவும்
உலகைப் பிழந்து தள்ளவும்
ஆப்பு
வைத்தப்படியே
அமைதிப் பற்றியே பேசுவார்கள்!
maduvilan@hotmail.com