தொட்டிச் செடிகள்
Published September 20, 2007 • By
ரஜித்
ரஜித்
தொட்டிச் செடிகளுடன் ஒரு
குட்டி உரையாடல்
தோழமைச் செடிகளுடன் நேற்று
தொட்டிக்குள் செடியாய் இன்று
பிறந்த மண்ணைப் பிரிதல்
துயரம்தானே
இல்லை
இந்த மண்ணும் எங்கள்
பிறந்த மண்தான்
எங்களுக் கென்றுமில்லை
மண்களில் பாகுபாடு
வணடுகள் சிட்டுக்கள்
வண்ணத்துப் பூச்சிகள் நேற்று
காட்சியாய் கவிதையாய்
கூடத்தில் மாடத்தில் இன்று
முரணான வாழ்க்கை
உடன்பாடுதானா
உடன்பாடுதான்
அவர்களுக்காக வாழ்ந்தோம் அங்கே
இவர்களுக்காக வாழ்கிறோம் இங்கே
எங்களுக்காக நாங்கள்
என்றுமே வாழ்ந்ததில்லை
இறைவனிடம் பேசினால்
இருக்கும் இடத்திலேயே
எல்லாச் சுகங்களையும்
இறக்கித் தருகிறாய்
கோடி ஜென்மம் போதாதய்யா
கொண்ட கடன் தீர்க்க
மனிதனுக்கு நீங்கள்
சொல்ல விழைவது
எங்களைப் போல் வாழுங்கள்
எல்லாம் இன்ப மயம்
rajid_ahamed@yahoo.com.sg