திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100627_Issue

அரசியலும் சமூகமும்

ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி

ராஜேஷ்எழுத்தாளர் ஞாநி அவரது அமெரிக்கப் பயணத்தின் பகுதியாக நியூயார்க் / நியூஜெர்ஸி பகுதிக்கு வர இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 2 ஆம் தேதி மாலை 7 மணிக்கு எடிசன், நியூஜெர்ஸியில் வாசகர்களுடன் ஒரு…

சாதியும், கணக்கெடுப்பும் –

காயில் ஆம்வெட் - தமிழில் மணிCaste And The Census By Gail Omvedt ”சாதிகள் பெருங்குற்றம், பாவச்செயல், அதைப்பார்க்காதே, கேட்காதே, பேசாதே” படித்த இந்திய மேட்டுக்குடி வர்க்கத்திற்கு சாதி என்கிற சொல்லே காந்தியின்…

முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி

ஹெச்.ஜி.ரசூல் இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கொரு முறை நடத்தப்படுகிறது. சமூகபொருளாதாரஅம்சங்களானவாழிடம்,வயது,இனம்,கல்வி,மதம்,மொழி,சாதி(எஸ்ஸி.எஸ்டி)அடிப்படைவிவரங்கள் திரட்டப் படுகின்றன.மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டமிடுதலுக்கு இவை மிகவும் அடிப்படையாக தேவைப்படுகின்றன.2011 பிப்ரவரி 9 - 28 காலகட்டத்தில் மக்கள்தொகை…

நினைவுகளின் சுவட்டில் – (50)

வெங்கட் சாமிநாதன்ஓன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் மாமா, "இனிமே நீ கோல்மூரி போகவேண்டம். சீனு வேலை செய்யற ஆ·பீஸிலே ஒரு டைபிஸ்ட் தேவையாம். உனக்குத் தான் இப்போ டைப் பண்ண வந்துடுத்தே. சீனு…

நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்

B. R. ஹரன். சனிக்கிழமை ஜூன் 19-ஆம் தேதியன்று தினசரிகளில், “ஆந்திர அமைச்சரவை கடப்பா மாவட்டத்தை ‘ஒய்.எஸ்.ஆர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது” என ஒரு செய்தி வெளியானது. (http://www.deccanchronicle.com/hyderabad/kadapa-now-ysr-district-501 ) இதற்கான…

அறிவிப்புகள்

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை

உமா ஷக்திதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும்…

ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்

மணி.Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் எழுதிய “ ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith” பற்றி ரொம்ப நாளைக்கு பிறகு திண்ணையில்…

ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…

மலர்மன்னன் 1. பெரும்பாலும் நான் சொல்லச் சொல்லப் பிறர்தான் கணினியில் அடித்து உதவுகிறார்கள். சிலசமயம் அதைச் சரிபார்க்க முடியாமல் போய்விடுகிறது. கந்தமால் என்பது காண்டஹார் என மாறிவிடக் காரணம் ஒரே சமயத்தில் ஆப்கானிஸ்தான் பற்றியும்…

கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்

ஜெய் கிரிஜா ராகவன் அவர்கள், வேண்டுமென்றால் மிசொரமுக்கு சென்று சாதி பார்க்காத ஹிந்துவாக வாழ்ந்து எல்லா அங்குள்ள பழங்குடியினரையும் ஹிந்துவாக மாற்றி 'கிறிஸ்தவர்களா? அப்படியென்றால் யார்?' என்று கேட்கும்படி செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.…

பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை

பாரதி தமிழ்ச் சங்கம் பாரதி தமிழ்ச் சங்கம் கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் இயங்கி வரும் வரி விலக்குப் பெற்ற தமிழ் கலாச்சாரம அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 1.30 முதல்…

நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்

அன்பின் நண்பர்களே புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ” - ஜமாலன் என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் வரும் 30.06.2010 அன்று மாலை 6:00 மணிக்கு தேவநேயப் பாவாணர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?

டாக்டர்.B.செல்வராஜ் Ph.D., குழந்தைகள் சில குணங்களை பிறப்பிலேயே மரபுத்தன்மைகளின் காரணமாக பெற்றிருக்கும். வளர வளர அக்குணங்கள் ஆளுமைப் பண்புகளாக உருவெடுக்கும். பிறப்பில் அமைந்த குணங்களை தவிர்த்து பிற நடத்தைகள் அனைத்தையும் குழந்தைகள் வளர வளர…

சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? [கட்டுரை: 1]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரியக் கரு வடுக்கள் சூட்டு உட்புறம் காட்டும் கண்ணாடி ! கதிரவன் சினம் பொங்கி கனல் நாக்குகள் மில்லியன் மைல் நீளும் ! நெற்றிக் கண்…

இலக்கிய கட்டுரைகள்

கனவும் நனவும்

எஸ் ஜெயலட்சுமி கண்கள் மூடியபடியேயிருக்க காட்சிகள் தெரிவதையே கனவு என்கிறோம். அடி மனதின் எண்ணங்களே கனவாக வெளிப்படுகின்றன என்றும் சொல் கிறார்கள். கனவிலே கனவு காண்பவரே பங்கேற்பதும் உண்டு. திரைப்படங்களில் கனவுக் காட்சிகளில் வெள்ளையாடை…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20

சீதாலட்சுமி ஜெய ஜெய சங்கர இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த…

கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!

வ.ந.கிரிதரன் [ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த…

சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பண்டைத் தமிழகத்தில் பாணர் என்போர் வாழ்ந்து வந்தனர். பாண் (யாழ்) வாசிக்கும் தொழில் காரணமாக இவர்களைப் பாணர்…

எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்

கெளசல்யா அந்தோனிப்பிள்ளை - கலையும் இலக்கியமும் என் இனத்தின் கண்கள் என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்திச் செயற்பட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது பத்தாவது எழுத்தாளர் விழாவை மிகவும் சிறப்பாக அண்மையில்…

சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை

சுப்ரபாரதிமணியன்பண்ணத்திர: ”சாயத்திரை” கன்னட மொழிபெயர்ப்பு ========================================== தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000…

நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்

முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தம்நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள் முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தம் நெல்லை மாவட்டத்தில் 11.12.1882-ல் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். பதிமூன்று வயதில்…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இதைக் குறித்து வை : மனித இனத்தை அழிக்கும் வேட்கைகள் காரணமோடு எத்துணை நேர்மையாகத் தெரிந்தாலும் அவை…

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு

இரா.முருகன்1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை மூணு பக்கமும் கரும்புத் தோட்டமும் கிராமமும் சின்னப் பட்டணமுமாக மனுஷ நடமாட்டம் மிகுந்த தரை. கிழக்கிலே எல்லையே இல்லாத சமுத்திரம். இங்கே…

முள்பாதை 35

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணன் கிளம்பிப் போன நான்காவது நாள் ராஜேஸ்வரியின் திருமண அழைப்பிதழ் வந்தது. அதைப் பார்த்ததும் அப்பாவின் இதழ்களில் முறுவல் தவழ்ந்தது. அந்த…

கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே

ம. காமுத்துரை “எனக்கு ஒப்பல...” - மகேஸ்வரன் ரெண்டாவதாகவும் சொன்னான். “அதத்தே நானுஞ் சொன்னே... இந்த லூசுப் பயக தான் இங்க பிடிச்சு வந்துட்டாங்கெ...” நண்பர்கள் ரவியையும் சக்தியையும் கண்டித்துச் சொன்னான் செல்வம். வீரப்பய்யனார்…

பழைய வாத்தியார்

பாரதிதேவராஜ் “என்னாங்க. உங்க பழையவாத்தியாராம். ஹால்லே உட்காரவச்சிருக்கேன் அவரோட பையனுக்கு இங்க கிண்டிலே வேலை கிடைச்சிருக்காம். உங்களப்பாத்துட்டு போலாமேன்னு வந்தேங்கிறார். சும்மாவா பாக்க வந்திருப்பார். ஆயிரத்தே கொடு, ரெண்டா யிரத்தக் கொடுன்னு பணங்கேக்கத்தான் வந்திருப்பார்ன்னு…

ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3

சூர்யா லட்சுமிநாராயணன் 18.06.2010 வெ ள்ளிக் கிழமை நேற்று சினிமாவுக்கு கூட்டிச் சென்றுவிட்டு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காமல், பாப்கார்ன், இரண்டு கேக், ஒரு முட்டை போண்டா, ஒரு புல் பெப்சி, ஒரு சமோசா சென்னா…

எனக்கான ‘வெளி’

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை) என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள்…

போதி மரம்

எம்.ரிஷான் ஷெரீப், கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அமாவாசை இரவில் இருட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1

ராமச்சந்திர கோபால்சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். தற்போதைக்கு சமஸ்கிருதத்தை தேவநாகரி…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ இறைவன் உன்னோடு உள்ளான் ++++++++++++++++++++++++++++++ என் இனிய காதலி ! இந்த மர்மத்தை விளக்கும் எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல் இப்போது…

ஊமையர்களின் கதையாடல்

சு.மு.அகமது. ஒரு கவிதையின் பகிர்ந்தளிப்பைப் போலும் அவர்களது கதையாடல் செவிசாய்த்து உன்னிப்பாய் கிரகிக்கும் பாவனை தேர்ந்த சொல்லாடலின் சுவராஸ்யத்தை உட் செலுத்தும் புத்துயிர்ப்பி கடநது சென்ற பள்ளிக்க்கூடம் பேருந்துப்பார்வையில் புள்ளியான பின்பும் கண்களில் விரிந்திருந்தது…

ஒவ்வொரு விடியலும்….

ப.மதியழகன், குழாயடிச் சத்தம் மீன் விற்பவனின் கூச்சல் சைக்கிளை தள்ளிக் கொண்டு வரும் கீரை விற்பவனின் சைக்கிள் க்ரீச் சிடும் சத்தம் காலையில் காபிபானம் அருந்திட பால்காரனை எதிர்பார்த்து காத்திருக்கும் வீட்டிலுள்ள மாந்தர்கள் சுடச்சுட…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++++++ ஊழ்விதி +++++++++++++++++++++++++++++++++ "உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத…

ஒலியும் மொழியும்

சீராளன் ஜெயந்தன்..... விடியற்காலை இரைந்து எழுந்தது குக்கர் விசிலுடன். படுக்கையில் கிடந்த செல்போன் கூவிக்கொண்டிருந்தது படிக்காத குறுஞ்செய்திக்காக. "நல் காலய் வன்க்ம்" பதில் சொல்லும் முன் அலறியது குழந்தை ஒலி யார் மாற்றியது ரிங்டோன்…

தவித்துழல்தல்

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை) முள்ளிடுக்கில் மலர்ந்தெழுந்து மணம்பரப்பும் ரோஜாவை இமைக்காது பார்த்திருந்தேன். உள்ளிருக்கும் ரணம் புதைத்து உயிர்த்திருத்தலின் வலியை உணர்ந்திருக்கக்கூடும்-நீ. வண்ணத்துப் பூச்சியிதன் செவ்வர்ணம் இயற்கையில்லை-மனக் காயத்தில் கசிந்த ரத்தம் சிறகுகளை அலங்கரிக்கும்!…

வேத வனம் விருட்சம் 92

எஸ்ஸார்சி தீமை தீயோனுக்கு ஆகுக பழிச்சொல் சொல்பவனைச்சேர்க தீமை எதிரணிக்கு ஏகுக யாம் எப்போதும் மாசற்றவர்கள் தேர்ச்செய்வோன் அதன் பாகங்கள் அறிவபோலே தீமைச்செய்தோனை தீமையே அறியும் இச்செடிகள் இவண் அவுடதங்கள் பிதிர்க்கடன் கழிக்கும் காலை…