திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060630_Issue

அரசியலும் சமூகமும்

திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை

என் எஸ் நடேசன் இந்திய டெனிஸ் வீராங்கனை சோனியா மிர்சாவின் குட்டையான டெனிஸ் கேட் பல இந்திய முல்லாகளின் கவனத்தை கவர்ந்துள்ளது. மிகவும் மனம் வருந்துகிறார்கள் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்…

பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!

சி. ஜெயபாரதன், கனடா கண்ணகிக்குச் சென்னைக் கடற்கரையில் சிலை வைக்க வேண்டுமா அல்லது கூடாதா என்று 21 ஆம் நூற்றாண்டில் அறிவாளிகளாகிய நாம் வாதாடிக் கொண்டிருக்கிறோம்! முன்பு அழகாக நடப்பட்டிருந்த கண்ணகிச் சிலையின் கை…

சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்

ஜடாயு தஞ்சை மாவட்டம் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, ஏழை சமையல்கார சாம்பு மாமா (படித்தது 10ம் வகுப்பு வரை தான்) மகள் நந்தினி. சென்னையில் வசிக்கும், நகரின்…

தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!

எம்.கே.குமார். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது. இப்படி அது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏறி இறங்கிய இரண்டு மூன்று கடைகளிலும் அன்றைய செய்தித்தாள் கிடைக்காமல்…

மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்

புதுவை ஞானம் -------------------------------- ஜிம்பாப்வேயின் சிதைவுகளில் இருந்து அடித்தளத்தின் ஆழத்தில் இருந்து வெளி வருகிறது மூதாதையரின் பல்லாங்குழி -கல்லாங்குழி . பழங்கால மூத்தோரால் விளையாடப் பெற்றது தந்தை அப்ராமின் பண்டைய எதிரிகளாம் ஷீபா நாட்டவரால்…

அருந்ததி ராய்

செல்வன்அருந்ததி ராய் ஒரு செக்யூலர் எழுத்தாளர்.பல விஷயங்களில் இடதுசாரி நிலையை எடுப்பவர்.இந்தியா அணுகுண்டு வெடித்ததை கண்டித்து எழுதிய கட்டுரைகளின் . மூலம் மேற்கத்திய நாடுகளில் நல்ல புகழை அடைந்தார்.அந்த கட்டுரை மகா அபத்தமாக இருந்தது…

அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன

கற்பக விநாயகம் 'உமய்யணன் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டு மாண்டான் என்பது அவனது புகழுக்கு இழுக்காகாதா' என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். 'கல்வெட்டில் ஒருவன் பெயர் வந்து விட்டாலே அவன் ஈடு இணையற்ற வீரன் தான்' என…

இட ஒதுக்கீடு

மதிமாறன் ஒருவருக்குத் தெரியாத மொழியில் அவர் எதிரில் பேசுவது, அவரை அவமானப்படுத்துவது மாதிரி. இப்படி ஒரு முதல்வரை அவமானப்படுத்த நினைத்து, மூக்குடைபட்ட ஆதிக்க சாதியினரின் கதை இது. மதுரையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருத…

மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை

தமிழில்: அசுரன் மருத்துவ முதுகலை படித்த அலெக்சாண்டிரியா சி. லிஞ்ச் எழுதியுள்ள அனார்ச்சாவின் கதை என்ற இந்த ஆக்கமானது 'நவீன மகப்பேற்றியல் மருத்துவத்தின் தந்தை, நிறுவனர்' என்று புகழப்படும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர்…

அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்

தமிழில்: அசுரன் முன்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்த கசகஸ்தானில் உள்ள தொழில்மய நகரமான கரகண்டாவில் பிறந்த கைசா அட்கனோவா ஒரு உயிரியல் பட்டதாரி. அத்துறையில் முழுநேர ஆய்வில் ஈடுபட்ட அவர் நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய தவளை…

அறிவிப்புகள்

மயக்கம் தெளியவில்லை

ஹமீது ஜா·பர் "ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர்" இந்த வார்த்தையை வஹாபி என்றென்றும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டால் தெளிவு பிறந்துவிடும். ஆனால் இல்லையே! முதல் பத்தியில் இதை…

காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது

அறிவிப்பு காலம் சஞ்சிகை 26வது இதழில் (ய+ன்-2006), முனைவர் எம். சஞ்சயன், வெங்கட்சாமிநாதன், திலகபாமா, அ.முத்துலிங்கம், சுமதி ரூபன், செல்வா கனகநாயகம், என்.கே. மகாலிங்கம், மணி வேலுப்பிள்ளை, டானியல் ஜீவா போன்ற பலர் எழுதியுள்ளனர்.…

கடிதம்

அருணகிரிஇந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொருவர் பெயரையும் சேர்த்து…

கபாவில் சமாதியா

சூபிமுகமது சமாதிவழிபாடு என்னும் கபருசியாரத்தை அவமதிக்கும் வகாபியின் கடிதம் கண்டேன். தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா.. மஸ்ஜிதுக்கும் தர்காவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின! ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில்…

அபத்தம் அறியும் நுண்கலை – 2

கார்ல் சாகன் அமெரிக்கப் புரட்சியாளர் TOM PAINE தனது AGE OF REASON என்ற நூலில் குறிப்பிட்டதைப் போல நம்பிக்கையின்மை (நாத்திகம் - இறைமறுப்பு) ஒழுக்க ரீதியான முழுமையான விளைவுகளைக் கொண்டுள்ளது. இறை மறுப்பு…

இலக்கிய கட்டுரைகள்

நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)

பா.சத்தியமோகன் பொதுவாக எந்த ஒரு இலக்கியக்கூட்டத்திற்கும் சென்று,அதுவும் ஏழுமணிநேரக் கூட்டம் எனில், நிச்சயம் தலை பாரமாகி விடும்.அது, இலக்கியம் சம்பந்தப்பட்ட கருத்துகளால் ஏற்பட்டவையாக இல்லாமல், சொந்த விஷயம் சார்ந்த காழ்ப்பாக அமைந்துவிடுவதே இதன் காரணம்.…

யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)

கவிஞர் புகாரிஜூன் 24, 2006: தமிழ் இலக்கியத் தோட்டம் பூக்களால் நிரம்பி வழிந்தது. இன்றெல்லாம் டொராண்டோ என்றாலே தமிழர் விழாக்களின் கூடாரம் என்றாகிவிட்டது. அதிலும் வேனிற்காலமென்றால் சொல்லவே வேண்டாம். முண்டியடித்துக்கொண்டு பெருகும் விழாக்களின் மத்தியில்…

கல்மரம் ஆசிரியர் – திலகவதி

ஜெயந்தி சங்கர் தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச் சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை. அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான் தாஜ்மஹாலை…

கடித இலக்கியம் -11

வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி, 2-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதம் வந்தது. வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்றும், துன்பங்களை வெல்வது எப்படி என்றும், சஞ்சலங்கள் அற்றுத் தெளிந்து நிற்பது எப்படி என்றும்…

கதைகள்

முறிவு

கவனசர்மாஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த சுஜாதா, காற்றில் நெற்றி மீது வந்து விழுந்த கேசத்தைப் பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டாள். மனதில் சூழ்ந்து கொண்டிருக்கும் எண்ணங்களை துரத்த முயற்சி செய்தாலும் மறுபடியும் மறுபடியும் அதைப் பற்றித்தான்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7)

சி. ஜெயபாரதன், கனடா"கிளிபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்!" டாலமி XIII ஓ! உன்னத வாழ்வே! விலை மதிப்பிலா ஒளிக்கற்கள், வேண்டாம் எனக்கு!…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27

ஜோதிர்லதா கிரிஜா .. .. .. கணவரின் உயிர் பிரிந்த சில நாள்களுக்குள்ளேயே காவேரியின் உயிரும் பிரிந்துவிட்ட அதிசயம் பற்றி அந்த ஊர் வாய் ஓயாது பேசத் தொடங்கியது. நொறுங்கிய உள்ளத்துடன் துர்க்கா கணவனோடு…

கவிதைகள்

பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2641 தென்னவனாகிய பாண்டியனின் மனைவியாரும் அழகிய மணிகளையுடைய சிவிகையில் அமர்ந்து பின்னால் வர - அமைச்சரான குலச்சிறையார் தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல -- பொன் அணிகளையுடைய மாடவீதி வழியாய் எழுந்தருளிச்…

உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு

டீன்கபூர்உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு உடலுக்குள்ளே முகில் கூட்டம். மழைக்கால ஆகாயம் போல தினம், தினம் என … எந்தக் குளத்து சுருப்புக்குள் சூரியன் விரல்விட்டு குடைந்ததோ தெரியா. என்று வைத்தியர் முழிசினார். உடலுக்குள்ளே முகில்…

பறவையின் தூரங்கள்

ஹெச்.ஜி.ரசூல் ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள் மழைச்சாரலின் ரசனையில் ஏதோ ஒன்றின் வருகை குறித்த நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள் மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன. சிறகுகளை பொருத்தி தாவிக்…

தாஜ் கவிதைகள் .. 1

தாஜ் (இலக்கிய இதழில் வெளியான எனது முதல் இரண்டு கவிதைகள். மீட்சி /இதழ் 27/ஆசிரியர்: பிரம்மராஜன்/அக்டேபர் & டிசம்பர் ..1987 ) ஆசை. ------- புத்தனை அறிய வந்த வயதில் இருந்து மனக் கிடங்குப்…

கா எனும் குரல்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி தாழிட்டுக்கொண்டு தனிமையில் நான் மட்டும். கத்தும் சத்தம் கதவு தாண்டி கால் வைக்க காக்கைகள் வான்வெளியில் மேடை போட்டு வாய்விட்டுச் சொல்வதென்ன? கா எனும் சொல்கொண்டு காகம் பேசும் மொழியென்ன? தம்…

கேள்விகளும் பதில்களும்

ராமசந்திரன் உஷா கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் பதில்களும் வந்துக் கொண்டே இருக்கின்றன கேள்விக்கான பதில் இது இல்லையே என்கிறார்கள் கேள்வி எழுப்பினாய் பதில் சொல்லிவிட்டோம் சரியில்லை என்றால் எங்கள் பதிலுக்கான கேள்வியை கேள்…

கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பிறப்பில் நேராக நின்னைச் சந்திக்கும் கட்டம் எனக்கில்லை என்றாகி விட்டால், உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன் என்பதை உணர வேண்டும் நான்! கணப் பொழுதேனும் நானதை நினைக்கத் தவறேன்!…

சுரதா

கரு.திருவரசு விருத்தப்பா விடைபெற்றுச் சென்ற தென்னும் வேல்பாய்ந்தாற் போற்செய்தி வந்த தென்ன? பொருத்தமான உவமைகளைப் புதுமையாகப் பொழிந்தமழை ஓய்ந்ததுதான் உண்மையாமோ! வருத்தப்பட் டாவதென்ன? வந்த தென்றல் வந்ததுபோல் திரும்புவது புதிதா என்ன? வருத்தப்பா இதுவன்று!…

நகைச்சுவை

சுவரில் ஒரு சி(ரி)த்திரம்;;

கோவிந்த் (எ) கோச்சா--------------------------- 'சிரி' ஞானசம்பந்தரை வாழ்த்த.... சித்திரமிருக்க சொல் எதற்கு.... பார்க்க ரசிக்க... மதுரை தெற்குவாசல் அருகே ஒரு சுவரில்..... -----

கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்

செல்வன் கேப்டனை பார்க்க பான்டேஜ் பாண்டியன் போனபோது அவர் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்."வாய்யா பாண்டியா.பெரிய கட்சிகளை கண்டுகிட்டு எங்களை எல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்" என அட்டகாசமாக சிரித்தபடி வரவேற்றார். "முதல் முதலா சட்டசபைக்கு போயிருக்கீங்க.எப்படி…

கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா பேப்பரோ ! தண்ணீரோ ! கண்ணீர் விட வேண்டாம் ! கழிப்பிடக் கவலைகளையும், பயத்தைப் பற்றியும் நடுங்கிக் கொண்டே எப்படி எழுதுவது என்று தயக்கத்துடன் சிந்திக்கலானேன். இதைப் பற்றி திடீரென்று எனக்கு…