விக்ரமாதித்யன் நம்பி ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் பேசுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்த்துவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டம் போடுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் படிப்பார்கள்…
பிரியா ஆர்.சி. அழியும் உயிர்கள் உயிரோடு அழியும் நேற்றைய கனவுகளும் இன்றைய நம்பிக்கைகளும் குற்றம் ஏதும் செய்யாமலே தண்டிக்கப்படும் பல கோடி உயிர்கள் குடிமக்களாய் பிறந்த ஒரே குற்றத்திர்க்காக அனுமதியின்றி அபகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆனந்தங்கள்…
பவளமணி பிரகாசம் மனதில் புகுந்த காதலே, மணம் நிறைந்த மலரே, புன்னை மர நிழலே, முன்னைப் பிறவி பலனே, கடலின் குறு மணலே, கனவின் மறு உருவே, பூவில் ஊறும் மதுவே, நாவில் இனிக்கும்…
அனந்த் எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய் .... இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே! மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே .... வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே! நினக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே .... நெடுநாள்நிலை…
தா.பாலகணேசன் என் பிரியமானவளே கொழுந்துகள் அடங்கிய துயர் நெருப்பின் பின்னணியோடு ஊதா நிற வயல்களில் இருந்து என்னிடத்தில் கோடையின் வாசனையைக் காவி வருகின்றாய் ! அந்தி சாய்ந்த பொழுதின் வர்ணக் குழைவிலிருந்து நீயோ எனக்கு…
கரு. திருவரசு தென்றலாய் வருவான் ஒருவன் - நான் தெரிந்துகொண்டேன் அவன் முருகன்! நன்றெல்லாம் எனக்கென ஒருவன் - அவன் நானல்லன் முருகா மனிதன்! - தென்றலாய் அழகுக்குத் தலைவன் ஒருவன் - அவன்…
கோமதி நடராஜன் குனிந்து கொண்டே போக நீ தயார் என்றால்,உன்னைக் குட்டிக் கொண்டே இருப்பவனைக் குறை கூறாதே. ஏமாந்து கொண்டே இருப்பதற்கு, நீ தயார் என்றால் எப்பொழுதும், ஏமாற்றிக் கொண்டே இருப்பவனை ஏசாதே. பணிந்து…
செந்தில் 'உலகின் விளிம்புகள் தீப்பற்றி எரியும் வேளையில் அன்பு தழைக்குமா! அன்பு தழைக்குமா! என ஏங்குவார் எவரும் இங்கு உண்டா ? ', என எழுத்தாளர் கோணங்கி ஒரு முறை சொல்லக்கேட்டிருக்கிறேன். கோணங்கியை நான்…
கரவிபயணி இன்றுவரை ஏன் தொடரவில்லை நினைத்துப் பார்க்க நெஞ்சு விம்முகின்றது வால்த்தும்பி பிடித்து நூல்கட்டி பட்டம் பறக்கவிட்ட நாட்கள் வீட்டிற்குவரும் வீதி நாய்களை கல்லெறிந்து காலுடைத்த நாட்கள் யாருமறியாது அடுத்தவீட்டு கிணற்றினுள் மீன்பிடித்து மகிழ்ந்த…
பத்மாசினி முகமூடிகளைக் கழட்டியும், மாட்டியும் பின் மாற்றியும், மாட்டியும் இருந்ததில்...முகம் மறந்து போனது. முகத்தை மீட்டெடுக்க கழட்டிய முகமூடியைப் போடாமல் முகத்தைத் தேடிய போதுதான் தெரிந்தது...முகம் தொலைந்திருந்தது. padmasini2003@yahoo.com