திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070927_Issue

அரசியலும் சமூகமும்

கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்

மலர் மன்னன் தென் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் நீரிணைப்பை ஆழப்படுத்தி தோணிகள் விடப் போகும் (இக்கால பிரமாண்ட சரக்குக் கப்பல்களை விடுவது சாத்தியமல்ல) ஸேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை சூயஸ் கால்வாய்க்கும்…

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா ரோயல் மெல்பேன்வைத்தியசாலையில் இருந்து இந்து ஆலயம் ஒன்றிற்கு அங்கு கடமையாற்றும் தாதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த வைத்தியசாலையில் இந்துமதத்தை சேர்ந்த முதியவர் இறக்கும்தறுவாயில் இருக்கிறார்.…

வன்முறையே வழிகாட்டி நெறியா?

K.ரவி ஸ்ரீநிவாஸ்ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்கள் வன்முறைக்கு இட்டுச் சென்றிருப்பது கண்டிக்க வேண்டியது. பெங்களூரில் கருணாநிதியின் மகள் வீட்டில் நடந்த தாக்குதல், பேருந்து எரிக்கப்பட்டு இருவர் மரணமடைந்தது - இவற்றை செய்தவர்களை சட்டப்படித் தண்டிப்பதே…

ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை

நாகூர் ரூமி கவிஞரும் சுயமாக சிந்திக்கின்ற திறன் கொண்டவருமான ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது. "இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் -- மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்" என்ற தலைப்பில் ‘உயிர்மை’யில் ஒரு கட்டுரை எழுதியதால்…

கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் இசுலாத்தைப் பின்பற்றுகிற முற்போக்கு சிந்தனையுள்ள மனிதநேயக் கவிஞர். உயிர்மை பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை மிகுந்தசர்ச்சையை அவர் சார்ந்துள்ள சமயத்தார் மத்தியிலும் ஆழ்ந்த வாசிப்பை பிற சமயத்தார் மத்தியிலும்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம்

வாஸந்தி வெள்ளையனை மூட்டைக்கட்டி அவனது நாட்டுக்கு அனுப்பிய கையுடன் நமது மண் பாரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறது.தனித்தனியாக மனத்தில் சுமக்கப் புறப்பட்ட பாரங்கள் மண்ணை அழுத்தும் விநோதம் அது. சுதந்திரம் கிடைக்கும் வரை நமது ஒரே…

மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!

அக்னிப்புத்திரன் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் மாபெரும் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தைக் குறுகியகால அரசியல் இலாபத்திற்காக முடக்கிப்போட நினைக்கிறார்கள். இத்திட்டத்தின்படி தமிழகத்தின் தென்பகுதியில் வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய்…

அறிவிப்புகள்

மேலும் சில விடை தெரியாத கேள்விகள்

பத்ரிநாத் திருகே ஆர் மணி அவர்கள் நீண்ட கேள்வி பதில் பகுதியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும். 1) ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்டதா இல்லை என்ற…

சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை

பரகாலன்அன்பார்ந்த ஐயா வணக்கம் பல, நமது தொல்லியல் துறை தொல்லை தரும் துறையாகத்தான் இருக்கிறது, ஏதாவது பழம் பெரும் நினைவுச் சின்னங்கள் இயற்கை மரணமடைய வேண்டுமானால் நமது தொல்லியல் துறையிடம் கொடுத்து விடலாம். ஜெயா…

கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)

பாப்பாடு வணக்கம். ராமர் சேது பற்றி பல கருத்துக்களும், கடிதங்களும் படித்தேன். பெரும்பாலும், மதசார்புடையோரே எழுதியிருந்தனர். நான் மதசார்பற்றவன் என்ற முறையில் எனது கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். ராமர் சேதுவையும், கண்ணகி சிலையையும் கொஞ்சம்…

கடிதம்

ஸ்ரீனிஅன்புடன் ஆசிரியருக்கு, முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த…

மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…

அறிவிப்புமாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்... அறிவியல்.தொழில்நுட்பம் வளர்ந்து ஊடகவளர்ச்சி கைக்கு எட்டியுள்ள வேளையில் ஒற்றைக் கதாநாயகனைத் தேடித் திரைப்பட அரங்கிற்கு ஏன் செல்லவேண்டும்? என்னும் வினா எழுந்துள்ள சூழலில் புதுச்சேரி மாநிலக் கலைஇலக்கியப் பெருமன்றமும்,வல்லினம் காலாண்டிதழும்…

பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா

மலர் மன்னன் நான் மிகுந்த கவனத்துடன் வாசிக்கும் கட்டுரைகளை எழுதுபவர்களுள் பி எஸ் நரேந்திரன் முக்கியமானவர். செப்டம்பர் 20, 2007 இதழ் திண்ணையில் ஒரு சுனாமியின் பின்னே என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றே என்று கூறினார், ஆக்கமேதை ஐன்ஸ்டைன் ! சக்தி அழியாதது ! பிண்டம் நிலையானது ! சக்தி நிலை மாறுவது ! பிண்டமும்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் 11 அத்தியாயம் பதினொன்று விசுவரூப தரிசன யோகம் விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூபத்தைத் தரிசிக்கிறான். பிறகு அர்ஜுனனே அதை…

“படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்

விஜயன்செப்டம்பர் 15 2007 அண்ணா பிறந்த நாள், விநாயகர் சதூர்த்தி, கலைஞர் டிவி உதயமான நாள், காலை செய்தியில்.. பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு…

‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்

தேவமைந்தன் செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர்…

எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60

சுப்ரபாரதிமணியன் கொங்கு நாட்டு எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாண்டு அறுபது வயதாகிறது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் இருந்த காலத்தில் கவிதைகளுடன் அவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் 12…

அலேர்ஜியும் ஆஸ்மாவும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா அஸ்த்மாவும் அலர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு. அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்த்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும்.…

பாரதி காலப் பெண்ணியம்

முனைவர் மு. பழனியப்பன் இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்களை ஆளும்…

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)

முனைவர் மு.இளங்கோவன் தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும்,காரைக்கால் அம்மையார் காலத்திலும்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும்,சேக்கிழார் காலத்திலும்,தமிழிசை மூவர்கள்…

ஜெயமோகனின் ஏழாம் உலகம்

பொ கருணாகர மூர்த்தி ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி அதில் அவர் விலாவாரியாகப்பேசியுள்ளார். பெற்றவர்கள் யாரென…

கதைகள்

காட்டில் விழுந்த மரம்

எஸ். ஷங்கரநாராயணன் சிநேகிதிகள் என்னைப் புதிய நபர்களிடம் அறிமுகப் படுத்துவதை நான் வரவேற்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்கள் நடந்து விடுகின்றன. ''இது சாண்டி. காதுகேளாதவள்...'' ஆனால் பெருமையாகவும் மரியாதையுடனும் என்னைப் பற்றி அவர்கள் சொன்னார்கள். (சரி.…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25

வே.சபாநாயகம் நாராயணசாமி பிள்ளையின் வீடு சிதம்பரம் வீட்டுக்கு எதிர்ச் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்தது. அவரது சகோதரர்கள் இருவருடன் பாகப்பிரிவினை நடந்த போது பூர்வீக கல்வீடு அவரது அண்ணனுக்கும் தம்பிக்கும் சமபாதியாக ஒதுக்கப்பட்டு,…

மாத்தா ஹரி – அத்தியாயம் 29

நாகரத்தினம் கிருஷ்ணா - மாத்தா ஹரியோட மண்டையோடு? - பாரீஸ¤ல ஒரு மியூஸியத்துல பாதுகாப்பா வைத்திருந்த அவளுடைய மண்டையோடு காணாமப் போயிருக்கிறது. அதை ஒருவேளை மாத்தாஹரிங்கிற பேருல இயங்குற சமயக்குழு திருடியிருக்கலாமென்று ஒரு வதந்தி…

நீயாவது அப்படிச் சொல்லாதே

கௌரிகிருபானந்தன் பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே நெய்யில் முந்திரிபருப்பு வறுபடும் வாசனை ஊரைக் கூட்டியது. புத்தகப்பையை ஒரு பக்கம் வீசிவிட்டு சமையல் அறைக்குள் ஓடினேன். "டேய் சுவாமீ! வாசலில் பூக்காரி வந்தால் கூப்பிடு. அக்காவை…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபிறப்பி லிருந்தே பூமியில் எம்மை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல கடவுள் நம்மை வெவ்வேறு வினைகளுக்கென உருவாக்கி வைத்துளது ! ஒவ்வொரு மனமும் ஒன்று சேர்வதில்லை ! எவ்விதக் கருப்பொருளில்…

கவிதைகள்

ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்

புதியமாதவி, மும்பை என் கவிதைகள் சாகவேண்டும் சாகாவரம் பெற்ற கவிதைகளுக்காக தவமிருக்கும் எழுத்துலகில் வேண்டாம் வரம். சாகவேண்டும் என் கவிதைகள் சாகவேண்டும். ஹேராம் .. என் கவிதைகளை வாழவைப்பதற்காய் நீ அரசியல்வாதிகளின் அரண்மனையில் அடிக்கடி…

சுயநலம் !

சி. ஜெயபாரதன், கனடாசுயநலம் நமது பிறப்புரிமை ! குருதியில் கலந்தது ! கூடப் பிறந்தது ! மனித ஆணிவேர் ஆவது ! சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை ! பறி போவது ! பற்றியும் பற்றாமல்…

இரவு நட்சத்திரங்கள்

தீபச்செல்வன்இந்த இரவு நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை தூக்கி அருந்தமுடிகிறதில்லை நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன் எங்களால் எப்படி இந்த செயற்கை மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிட முடிகிறது. ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது நாம் பேசுகிறோம்…

சிலைப்பதிவு

சாமிசுரேஸ், சுவிஸ் கைப்பிடியில்லாச் சுவடுகளின் கரையில் இறுகப்பதியாது ஈரங்களாய் காய்ந்தபடி நகர்கின்றன விழுதுகள.; ஏணிகளின் மீதேறி உச்சியில் நின்று உதறித்தள்ளிய கால்கள் சருகுத் தூசிகளால்மறையும.; எனைப் பயங்கொன்று போகாது. ஒருமுறைதுடிக்கும் மரணத்தின் காற்று என்மேல்…

மாலை பொழுதுகள்

கே.பாலமுருகன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கடந்த எத்தனையோ மாலை பொழுதுகள்! எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான் பக்கத்து வீட்டு அம்மாயி அக்கா தவறிப் போனாள்! எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான் வீட்டு நாய்க்குட்டி எங்கேயோ…

காதல் நாற்பது – 40 எனக்காகக் காத்திருந்தாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநாமறிந்த உலகெங்கணும் காதலிக்கிறார் ! உறுதியான காதலைப் புறக்கணிப்ப தில்லை நான் ! இளவயதிலேயே காதலைத் தெரிந்து கொண்டேன் அப்போதிருந்தே பூக்களைச் சேமித்தேன், சமீபக் காலம் வரை !…

நகைச்சுவை

பங்க்ச்சுவாலிட்டி

அப்துல் கையூம் உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான். “எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று…