தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

பரிமளம்


(தமிழ்ச் சினிமாவில் காரண காரியங்களையெல்லாம் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்தக்கட்டுரையைப் படிக்க வேண்டாம்)

கதாபாத்திரங்கள் வீட்டின் சமையலறை, படுக்கையறை, ஒரு சில படங்களில் பூசையறைகளில் கூட காலணிகளுடனேயே நடமாடுகின்றன.

தமிழர்களின் திருமணங்கள் பெரும்பாலும் அதிகாலை வேளைகளில்தான் நடைபெறும். னால் திரைப்படங்களில் திருமணங்கள் நண்பகல் நேரங்களிலேயே நடைபெறுகின்றன.

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் அண்ணன் தங்கை உறவுமுறையாக வேண்டிய நாகேஷ், சச்சு இருவரும் திருமணம் புரிந்துகொள்கின்றனர். ‘காட்டுரோஜா’ என்ற ஒரு படத்தில் மாமன் மைத்துனன் உறவுமுறை கொண்ட எம்.ர்.ராதாவும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் அக்காள் தங்கைகளை மணமுடிக்கின்றனர். இதுபோலவே ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்திலும் அண்ணன் தங்கை உறவாகக் கூடிய எஸ்.எஸ்.ராஜேந்திரனும், எம்.என்.ராஜமும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

கிராமத்திலிருந்து நகரத்துக்குப் பட்டப் படிப்பு படிக்கப் போகும் கல்லூரி மாணவர்கள் படிப்பு முடியும்வரை கிராமத்துக்கே திரும்புவதில்லை. (அவர்களுக்கு விடுமுறைகளே இல்லையா ?) வெளிநாடுகளுக்குப் போனால் சொல்லவே வேண்டியதில்லை. கைக்குழந்தையாக இருக்கும்போது போனவர்கள் குமரப்பருவத்தில்தான் திரும்புகிறார்கள். எனவே அவர்களது கிராமத்தைப் பற்றி அவர்களுக்கே ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்ல வேண்டும்.

பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை மற்றவர் கண்களுக்குத் தெரியும்படி வெளியில் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

நம் சினிமாக் குடிசைகள் வெளிப்புறத்தில் மட்டுமே குடிசைகள் போலக் காட்சியளிக்கின்றன. னால் உள்ளே வசதியான கட்டிடங்களைப் போல இருக்கின்றன. ‘உண்மையான ஒரு குடிசையில் வசித்த அல்லது குடிசையைப் பார்த்த ஒருத்தர் கூடவா திரைப்படத் தயாரிப்புக் குழுவில் இல்லை ?’ என்ற ஐயம் சினிமாக் குடிசைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏற்படும்.

பணக்காரர்களின் மாளிகைகள் மைல் கணக்கில் நீண்டிருக்கின்றன.

நடிகர்கள் தமக்கு எதிரில் உள்ளவரைப் பார்த்துப் பேசாமல் பார்வையாளர்களையே (கேமராவையே) பார்த்துப் பேசுகிறார்கள். ஒரு பெரிய கூட்டத்துக்கு அறிவுரை கூறுவதாக இருந்தால்கூட அந்தக் கூட்டத்துக்கு முதுகையும் நமக்கு முகத்தையும் காட்டியே பேசுகின்றனர்.

நம் வீட்டிலிருந்து நாம் பாடும் பாடல் மூன்றாம் வீட்டில் வசிப்பவர்களின் காதில் விழுவதே அரிது. இப்படியிருக்க, கோயிலின் உள்ளே இருந்து ஒருவர் பாடும் பாடல் ஒலிபெருக்கி இல்லாமல் ஊர் மக்கள் அனைவரின் காதிலும் விழுகிற மாயம் என்னவென்று தெரியவில்லை. காதலனோ காதலியோ பாடும் பாடல் காடு, மலையெல்லாம் தாண்டி அப்பால் இருப்பவரின் காதில் விழுகிற மாயமும் அவ்வாறே.

டிக்கொண்டே பாட்டுப்பாடினாலும் நடிகர்களுக்கு மூச்சு வாங்குவதில்லை.பாடற்காட்சிகளில் நீலப்படங்களுக்குரிய அம்சங்களைத் திறமையாக இணைக்கும் இயக்குநர்கள் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்கள். நீலப்படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால் (தணிக்கை கூடாது என்பது என் கொள்கை) நீலப்படம், நீலமல்லாதபடம் என்ற பிரிவுகள் ஏற்பட்டு ஒருவேளை நல்ல தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படலாம்.

மேடைக்காட்சிகள் தனியாகவும் பார்வையாளர்கள் தனியாகவும் படம் பிடிக்கப்பட்டு இணைக்கப்படுகின்றன. கதைக்குத் தேவை என்றால் மட்டுமே மேடையும் பார்வையாளர்களும் ஒரே ‘ஷாட்டில்’ காண்பிக்கப்படுவர். பார்வையாளர்களின் உற்சாகம் எப்போதும் செயற்கையாகவே இருக்கிறது. மேடைக்காட்சிகளில் நொடிக்கு நொடி டைகளை மாற்றுவது எப்படிச் சாத்தியம் என்பது தெரியவில்லை. மேடைநிகழ்ச்சிகள் சினிமா போலவும் சினிமாக்காட்சிகள் நாடகம் போலவும் இருக்கின்றன.

ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது இடத்துக்கு எப்போதும் தாமதமாக வருவதும் மற்றவர்களைத் தங்களுக்காகக் காக்கவைப்பதும் கதாநாயகர்களின் உயர்ந்த குணங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. பொய்சொல்வதும் ஏமாற்றுவதும் ள்மாறாட்டம் செய்வதும்கூட நல்ல குணங்களே.

ஒரு பரந்த திடலில் அல்லது வயலருகில் அல்லது அரங்கின் ஒரு ஓரத்தில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருப்பதை கேமரா அசையாமல் படம் பிடித்துக் கொண்டிருக்கும். அப்போது ஒரு மூன்றாவது நபர் தூரத்தில் அவர்களை நோக்கி வருவது (அவர் இவர்களோடு சண்டை போட வந்தால்கூட) அவர்களது கண்களுக்குத் தெரியாது. அந்த நபர் கேமராவின் ‘பிரேமுக்குள்’ தோன்றும் போதுதான் இவர்களது கண்களுக்குத் தென்படுவார். இதுபோலவே தன்னுடைய ட்கள் நூறுபேர் சூழ்ந்திருக்க வில்லன் ஒரு அப்பாவியைக் கத்தியால் குத்த முயல்வான். காட்சியில் இப்போது கத்தி அந்த அப்பாவியின் உடலைப் பதம்பார்க்கப் போவது மட்டுமே காட்டப்படும். அடுத்த நொடியிலேயே கதாநாயகனின் கை கத்தியைத் தடுத்துவிடும்! நாயகன் அருகில் வருவது, வில்லனின் ட்களை விடுவோம், வில்லனுக்குக் கூடவா தெரியாது ? தன் கை தடுக்கப்படும்போதுதான் நாயகன் வந்திருப்பது வில்லனுக்குத் தெரிகிறது.

கதை நிகழும் இடத்துக்கேற்ப கதை அமைவதில்லை. கதைக்கேற்ப இடம் மாறிக்கொள்கிறது. அதாவது கதைக்குத் தேவையென்றால் ஒரே கிராமத்தில் று, மலை, அருவி, காடு, கடல், வயல், ஏரி, பெரிய மருத்துவமனை, பெரிய பள்ளிக்கூடம் எல்லாம் இருக்கும்.

வட்டார நடைமுறைகள் பின்பற்றப்படுவதே இல்லை.

கிராமத்துப் பாத்திரமேற்று நடிக்கின்ற நடிகைகளாக இருந்தால்கூட கருமை நிற நாயகியர்களைக் காண இயலாது. குமரிப்பெண்கள் சிவப்பாக, வெள்ளையாக இருக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. வடநாட்டுப் பெண்களுக்கு அடுத்தபடியாக வெள்ளைக்காரப் பெண்களைக் கிராமத்துப் பெண்களாக நடிக்க வைத்தாலும் ச்சரியப்பட ஒன்றுமில்லை. (இந்த யோசனைக்கான உரிமை முற்றிலும் இலவசம்) ங்கிலப்படங்களில் அந்நாட்டுக் கருப்பர்களைப் பார்க்கலாம்; கருமை நிறத்தவர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டுப் படங்களிலோ தொலைக்காட்சியிலோ கருநிறத்தினரைக் காண முடியாது.

கருப்பு நடிகர்கள் கருமையை மறைக்க முகத்தில் சாயம் பூசியிருப்பார்கள். சாயம் இல்லையென்றால் கெட்டவர்களாக இருப்பார்கள்.

காட்சிகளை வெட்டி இணைக்கும் வசதி இருப்பதால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத வகைகளில் எல்லாம் காட்சிகள் இணைக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்தபடியே அமெரிக்காவில் நடப்பதைப் பார்ப்பதுபோல அமைக்காததுதான் குறை. மற்றபடி ஒரு கோயிலின் உள்ளே இருக்கும் ஒரு நபருக்குக் கோயிலின் வெளியே நடந்துவரும் பெண்ணின் முகம் தெளிவாகத்தெரிவதுபோல் காட்சிகள் இருப்பதெல்லாம் மிகச்சாதாரணம். நடிகர்கள் பெரிஸ்கோப் கண்களை உடையவர்களோ என்னவோ.

தன் பெண்ணின் எதிர்காலம் குறித்த கவலையால், ‘வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் பையனைக் காதலிக்க வேண்டாம்’ என்று தடுக்கும் அப்பா தீயவர். தானே அடுத்தவேளை சோற்றுக்குச் சிங்கியடிக்கும்போது வசதியாக வாழும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவன் நல்லவன்.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். தெளிவான எடுத்துக்காட்டுகளோடு விளக்கங்கள் அமையவில்லை என்பதை வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட படத்தைப்பற்றிப் பேசினால் இக்குறை ஏற்படாது என்றும் கருதுகிறேன்.

இறுதியாக, இலக்கிய உலகில் பழகிப்புளித்துப்போன ஒன்றை இந்தச்சினிமா உலகில் செய்துபார்க்கிறேன்.

குறைந்த சினிமாத்தனங்களையும் தமிழர்களின் வாழ்வோடு அதிக நெருக்கத்தையும் கொண்ட படங்கள் மட்டுமே தமிழ்ப் படங்கள் (மற்றவை தமிழில் வந்துள்ள படங்கள்) என்ற எனது நோக்கின் அடிப்படையில் இதுவரை வெளிவந்துள்ள தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை கைவிரல்களுக்குள் அடங்கிவிடும். (கலைப்படைப்பு என்னும் அளவுகோலை இப்போதைக்குக் கவனத்தில் கொள்ளவில்லை) அவற்றுள் எனக்குப் பிடித்த (எனக்கு என்பதை அழுத்தி வாசிக்கவும்) சிறந்த ஐந்து படங்களின் தரவரிசைப்படியான பட்டியல். (தயவு செய்து யாரும் என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம்)

1. அழகி

2. குட்டி

3. சொல்ல மறந்த கதை

4. கருத்தம்மா

5. அக்ரஹாரத்தில் கழுதை

***

baalakumar@hotmail.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்