மதமாற்றம் பற்றி காந்தி

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

தொகுப்பு: ஸ்வாமி அட்சரானந்தா


நான் ஏன் என்னை ஒரு சனாதனி இந்து எனக்கூறிக்கொள்கிறேன்

நான் என்னை ஒரு சனாதனி இந்து என்று கூறிக்கொள்கிறேன். ஏனெனில், நான் வேதங்களையும், உபநி ‘தங்களையும், புராணங்களையும், இந்து மத புத்தகங்கள் என்று கூறப்படுபவைகளையும் நம்புகிறேன். அவதாரங்களையும், மறுபிறப்பையும் நம்புகிறேன். இன்றைய கொச்சையான உருவத்தில் அல்லாமல், வேதங்களில் கூறப்பட்டது போன்ற வர்ணாசிரம தர்மத்தையும் நம்புகிறேன். பசுக்களைக் காப்பாற்றுவதை நம்புகிறேன். நான் விக்கிர ஆராதனையை நம்பாமலில்லை. (Young India: June 10, 1921)

நான் ஏன் மதம் மாறவில்லை ?

நான் அறிந்தவரை இந்துமதம் என்னுடைய ஆன்மீகத்தேவைகளை முழுமையாக திருப்தி செய்கிறது. இது என் முழு மனத்தையும் நிரப்புகிறது. சந்தேகங்கள் என்னை பயமுறுத்தும்போதும், ஏமாற்றங்கள் என் முகத்தின் முன் நிற்கும்போதும், தொலைவானத்தில் கூட ஒரு நம்பிக்கைக் கீற்றை பார்க்க முடியாமல் இருக்கும்போதும், நான் பகவத்கீதையிடம் செல்கிறேன். அங்கு என்னை சமாதானம் செய்யும் ஒரு வரியைக் காண்கிறேன். அழுத்தும் சோகத்தின் இடையே, நான் புன்னகைக்க ஆரம்பிக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் சோகக்கதைகளால் நிரம்பியது. அவை என்மீது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, நான் பகவத்கீதையின் போதனைகளுக்கே நன்றி சொல்லவேண்டும் (Young India: June 8, 1925)

நான் மதமாற்றத்தை நம்பவில்லை

ஒருவர் இன்னொருவரை மதமாற்றுவதை நான் நம்புவதில்லை. என்னுடைய முயற்சிகள் இன்னொருவரது நம்பிக்கைகளை வேரறுப்பதற்கு இருக்கக்கூடாது. எல்லா மதங்களும் உண்மையே என்பதிலும், அவைகள் அனைத்தையும் மதிக்கவேண்டும் என்பதும் இதில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த நம்பிக்கை. இதுவே உண்மையான தன்னடக்கம் (Young India: April 23, 1931)

மதமாற்றம்: சமாதானத்துக்கு ஊறு

ந்தியாவிலும் உலகத்திலும் நடக்கும் விதத்தை பார்க்கும்போது, மதமாற்றம் என்ற ஒன்றை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உலகத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாகவும் சமாதானத்துக்கு எதிரியாகவும் இருக்கும் பெறும் தவறு இது. ஏன் ஒரு கிரிஸ்தவர் ஒரு இந்துவை கிரிஸ்தவ மதத்துக்கு மாற்ற விரும்பவேண்டும் ? அவர் ஏன் ஒரு இந்து நல்லவராகவும், கடவுள் நம்பிக்கையோடும் இருப்பதைப் பார்த்து திருப்தி அடையக்கூடாது ? (Harijan: January 30, 1937)

மதமாற்றம் என்று ஒன்றும் இல்லை

மதமாற்றம் என்ற இந்த வார்த்தையைப் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு மத நம்பிக்கைக்கு மாற்றம் என்று ஒன்றுமே இல்லை என்று நம்புகிறேன். இது ஒரு தனிமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் மிகவும் தனிப்பட்ட வி ‘யம். என் பக்கத்துவீட்டுக்காரரின் மத நம்பிக்கை மீது எனக்கு எந்தவிதத் திட்டமும் இருக்கக்கூடாது என்றும், என்னுடைய மத நம்பிக்கையை நான் மரியாதை செய்வது போலவே அவரது மதநம்பிக்கையையும் மரியாதை செய்யவேண்டும். உலகத்தில் இருக்கும் மதப்புத்தகங்களை மிகுந்த மரியாதையுடன் நான் படித்ததனால், நான் எந்த ஒரு கிரிஸ்தவரையோ, முஸ்லீமையோ, பார்…ியையோ, யூதரையோ, அவரது மதத்தை மாற்றக்கோரும் எந்த விதமான எண்ணமும் இல்லாதது போல, என்னுடைய மதத்தையும் மாற்றிக்கொள்ளும் எண்ணமும் இல்லை (Harijan: September 9, 1935)

மதமாற்றும் திட்டத்தை என் மீது கொண்டுவராதீர்கள்

எனக்கு உங்களை கிரிஸ்தவ மதத்திலிருந்து பிரித்தெடுத்து இந்துவாக ஆக்கும் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அதே போல, உங்களுக்கு என்னை கிரிஸ்தவனாக ஆக்க விரும்பும் திட்டம் இருக்கும் பட்சத்தில், உங்களது திட்டத்தையும் நான் விரும்பவில்லை. கிரிஸ்தவ மதமே உண்மையான மதம் என்று நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. (Harijan: June 3, 1937)

மதமாற்றம்

மதமாற்றம் என்பது தேசவிரோதமாக இருக்கக்கூடாது. மதமாற்றம் என்பது பழைய தீமைகளை விட்டுவிட்டு, புதிய நல்லவைகளை எடுத்துக்கொள்வதும், புதிதாக எடுத்துக்கொண்டதில் தீமைகளை தீவிரமாகத் தவிர்ப்பதும் இருக்க வேண்டும். ஆகவே, மதமாற்றம் என்பது, தன் தேசத்துக்கு தீவிரமான பக்தியோடு இருப்பதும், கடவுளிடம் இன்னும் அதிகமான பக்தியோடும், இன்னும் அதிகமான சுயபரிசுத்தத்தோடும் இருக்கவேண்டும் (Young India: August 20, 1925)

ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் காப்பி அடிப்பது

இந்தியாவின் முழுமையும் நான் அலைந்து திரிந்தபோது, நான் பல கிரிஸ்தவ இந்தியர்கள் தங்கள் பிறப்பைப் பற்றியும், தங்களது முந்தைய மதத்தைப் பற்றியும், முந்தைய உடைகளைப் பற்றியும் வெட்கத்தோடும் அவமானத்தோடும் இருப்பதைக் கண்டேன். ஆங்கிலோ இந்தியர்கள் ஐரோப்பியர்களைப் பார்த்து காப்பி அடிப்பது என்பது தவறானது என்றால், இந்திய மதமாறிகள் ஐரோப்பியர்களைப் பார்த்து காப்பி அடிப்பது என்பது தங்களது தேசத்தும், தாங்கள் புதிதாக கொண்ட மதத்துக்கும் எதிரான வன்முறை.(Young India: August 8, 1925)

நான் ஏன் என் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ?

மனிதாபிமான வேலையின் போர்வையில் மதமாற்றம் செய்வது ஆரோக்கியமற்றது என்று சொல்கிறேன். இது இங்கே பல மக்களை வருத்தப்படவைக்கிறது. மதம் என்பது மிகவும் ஆழமான தனிப்பட்ட வி ‘யம். இது இதயத்தைத் தொடுகிறது. என்னை குணப்படுத்திய மருத்துவர் கிரிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பதற்காக நான் ஏன் என் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ? அல்லது நான் அவரது பாதுகாப்பில் இருக்கும்போது அவர் ஏன் நான் மதம் மாற வேண்டும் என எதிர்பார்க்கவேண்டும் ? (Young India: April 23, 1931)

மிஷனரிகளின் குறிக்கோள்: இந்துமதத்தை வேரோடு பிடுங்குவது.

இந்து மதம் பொய்யான மதம் என்று கிரிஸ்தவ நண்பர்கள் சொல்வதில்லை என்றாலும், ஒப்புக்கொள்வதில்லை என்றாலும், அவர்களது இதயத்தில் இந்துமதம் ஒரு தவறு என்றும் கிரிஸ்தவ மதமே உண்மையானது என்றுமே அவர்கள் நம்புகிறார்கள். இன்றைய கிரிஸ்தவ முயற்சிகளைப் பார்த்தால், இந்துமதத்தை வேறொரு அதன் அடித்தளத்திலிருந்து பிடுங்கி அங்கு இன்னொரு மத நம்பிக்கையை வைப்பதுதான் என்று புரிந்துகொள்ளும்படி இருக்கிறது.(Harijan: March 13, 1937)

மக்களது நம்பிக்கையை உடைப்பது

உங்களது மிஷனரி வேலைகளுக்கும் என்னுடைய மிஷனரிவேலைக்கும் இருக்கும் அடிப்படையான வித்தியாசத்தை சொல்லவேண்டுமெனில், நான் மக்களது நம்பிக்கைகளை உறுதிப்படுத்துகிறேன்; நீங்கள் உடைக்கிறீர்கள். (Young India: November 8, 1927)

மருத்துவரே உங்களை நீங்கள் முதலில் குணப்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்று மதமாற்றம் என்பது மற்ற வி ‘யங்களைப் போல ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. இந்தியா (இந்துக்கள்) மதமாற்றத்தின் தேவையில் இருக்கிறார்கள் என்று சொல்வது ஒரு வியாபாரம். இன்றைய தேவையான மாற்றம், சுய பரிசுத்தமும், சுய உணர்தலுமே. ஆனால், மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இந்தியாவை (இந்துக்களை) மதம்மாற்றவேண்டும் என்று சொல்பவர்களிடம், ‘மருத்துவரே உங்களை நீங்கள் முதலில் குணப்படுத்திக்கொள்ளுங்கள். ‘ என்றே சொல்லும்படி இருக்கிறது.(Young India: April 23, 1931)

மிஷனரிகள்: கடவுளை விற்பவர்கள்

இன்னொரு மதத்தின் மிஷனரி மக்களிடம் செல்லும்போது, பொருட்களை விற்பவர் போலச் செல்கிறார். இவர் போகும் மக்களிடமிருந்து இவரை தனித்து காட்டும்படிக்கு எந்தவிதமான ஆன்மீகப் பெருமையும் இவரிடம் இருப்பதில்லை. ஆனால், இவரிடம் ஏராளமான உலகாதய சமாச்சாரங்கள் இருக்கின்றன. தன்னுடைய மதத்துக்கு வந்தால் இந்தப் பொருள்களைத் தருவதாக வாக்களிக்கிறார்.(Harijan: April 3, 1937)

எனக்குச் சட்டம் இயற்றும் சக்தி இருந்தால்

எனக்கு சட்டம் இயற்றும் சக்தி இருந்தால், நான் மதமாற்றத்தை தடை செய்வேன். ஒரு மிஷனரி இந்துக்குடும்பத்துக்குள் வருவதன் பொருள், அந்தக்குடும்பத்தின் உடை, பழக்கவழக்கம், மொழி, உணவு, அருந்துதல் ஆகியவை எல்லாம் மாறி சிதைகிற ஒரு நிலை தான். (November 5, 1935)

கடவுளின் ஒரே மகன் ?

நான் ஏசுநாதரை மனித குலத்தின் மிகச்சிறந்த ஆசிரியராகக் கருதுகிறேன். ஆனால், அவரை கடவுளின் ஒரே மகன் என்று கருதுவதில்லை. அதன் நேரடியான பொருளை நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது.(Metaphorically) குறியீட்டு முறையில் இதன் பொருள் கொள்ள வேண்டும் என்றால் நாம் எல்லோருமே கடவுளின் மக்கள்தான். ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு நபர்கள் கடவுளின் மகனாக ஒரு சிறப்பான உணர்வில் தோன்றக்கூடும். ஆகவே, எனக்கு சைதன்யா கடவுளின் மகனாக இருக்கலாம். கடவுள் இப்படி மற்றவரை ஒதுக்கி ஒருவருக்கு மட்டும் தந்தையாகவோ, அல்லது ஏசுவிற்கு மட்டுமே புனிதம் இருக்கின்றது என்பதையோ ஒப்புக்கொள்ள முடியாது.(Harijan: June 3, 1937)

மேற்கத்திய கிருஸ்தவ மதம் இன்று:

ஐரோப்பாவும், அமெரிக்காவும் கடவுளையோ, கிரிஸ்தவ மதத்தையோ பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றும், அது சாத்தானின் ஆவியையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதும் என் உறுதியான எண்ணம். கடவுளின் பெயரை தன் உதடுகளில் உச்சரித்துக்கொண்டே சாத்தான் அடையும் வெற்றிகள்தான் மிகப்பெரிய வெற்றிகள். (Young India: September 8, 1920)

மேற்கத்திய கிரிஸ்தவ மதம் இன்று- தொடர்ச்சி.

மேற்கத்திய கிரிஸ்தவ மதம் இன்று கிரிஸ்துவின் கிரிஸ்தவ மதத்துக்கு எதிராகவே நடைமுறையில் வேலை செய்து வருகிறது என்று கருதுகிறேன். ஜீஸஸ் இன்று உயிருடன் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்துவந்தால், அவர் இன்றைய நவீன கிரிஸ்தவ நிறுவனங்களை அங்கீகரிப்பார் என்றோ, பொதுக்கூட்ட வழிப்பாட்டையும், பிரச்சாரத்தையும் அங்கீகரிப்பார் என்றோ நான் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை(Young India: September 22, 1921)

கிரிஸ்தவ மதமும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புச் சுரண்டலும்

கடந்த 150 வருட பிரிட்டிஷ் ஆட்சியோடு பிரிக்க முடியாதமுறையில் கிரிஸ்தவ மதம் இந்தியாவில் இணைந்துள்ளது. இது லெளகீக (materialistic) சமுதாயத்தோடும், வலிமையான வெள்ளை இனம் தனது சாம்ராஜ்ய சுரண்டலை வலிமையற்ற இனங்கள் மீது செலுத்தும் வகையில்தான் காணப்படுகிறது. ஆகவே இந்தியாவுக்கான இதன் பங்கு எதிர்மறையானதுதான். (Young India: March 21, 1929)

அவர்களுக்கு இஇடமில்லை.

இவர்கள் பணி புரியும் விதத்தில் இவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இவர்கள் தம்மையறியாமலே மற்றவர்களும் தமக்கும் தீங்கு புரிகிறார்கள். தமக்குத் தீங்கு புரிகிறார்கள் என்று சொல்வது சற்று அதிகப்படியாய் இருக்கலம், ஆனால் மற்றவர்களுக்கு, அதாவது நமக்கு , அவர்கள் யாரிடையே செயல்படுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இவர்கள் தீங்கு புரிகிறார்கள். இந்தியா முழுமைக்குமான தீங்கு இது. அவர்கள் நடவடிக்கைகளை அறிந்து கொள்கிற போது மிக வருத்தமுறுகிறேன். . மனிதகுலத்திற்கு இது போல் நிகழ்வது ஒரு பெரும் அவலம் (ஹரிஜன் , டிசம்பர் 12, 1936)

மோசமானது!

சென்ற நாள் ஒரு மிஷனரி ஒரு பஞ்சத்தில் அடிபட்ட இடத்திற்கு பணத்தை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வந்து அங்கிருந்த பஞ்சத்தில் அடிப்பட்ட மக்களை தன்னுடைய மதத்துக்கு மாற்றி, அங்கிருந்த கோவிலை ஆக்கிரமித்து அதனை இடித்துவிட்டார். இது மோசமானது (Harijan: November 5, 1937)

இந்து ஒரு நல்ல இந்துவாக இருக்கட்டும்.

வெகு நாட்கள் முன்பே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். . எல்லா மதங்களும் உண்மையானவையே. எல்லா மதங்களிலும் சில தவறுகளும் உண்டு. என் மதத்தை எவ்வளவு நான் நேசிக்கிறேனோ அதே அளவு மற்ற மதங்களையும் நான் நேசிக்கிறேன். நம்முடைய பிரார்த்தனை இதுவாகத் தான் இருக்க வேண்டும் : ஒரு இந்து நல்ல இந்துவாக ஆகவும், ஒரு முஸ்லீம் ஒரு சிறந்த முஸ்லீம் ஆகவும், ஒரு கிருஸ்தவர் சிறந்த கிருஸ்தவர் ஆகவும் நாம் உளமாரப் பிரார்த்திப்போம்.

மீண்டும் வரவேற்க வேண்டும்

அச்சத்தினாலோ, அழுத்தத்தினாலோ, பட்டினியாலோ , வேறு பொருளாசையினாலோ ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதத்திற்கு ஒருவர் சொல்ல நேரிட்டால் அதை மதமாற்றம் என்று சொல்வது தவறு. இப்படிப்பட்ட மதமாற்றங்கள் செல்லாக் காசுக்குச் சமானம். இவர்களை மறுபடி இஇஇந்து மதத்திற்குள் அனுமதிக்க எனக்குத் தயக்கமில்லை. தான் விட்டுச் சென்ற வீட்டிற்குத் திரும்புகிறவர்களை வரவேற்க வேண்டும். (தொகுப்பு : எண் 66 பக் 163-164)

நன்றி : தொகுப்பாளர் : அட்சரானந்தா,

http://www.caribbeanhindu.com/Gandhi_Conversion.htm

Series Navigation

தொகுப்பு: ஸ்வாமி அட்சரானந்தா

தொகுப்பு: ஸ்வாமி அட்சரானந்தா