நகர் வெண்பா இரண்டு
மத்தளராயன்

நகர் நீங்கு படலம்
——————–
(நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது)
பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில்
ஆடிடும் காற்றில் அகல்வழி – ஓடியே
நகர்ந்து பிடியென்று ஒளிந்தேதான் சீண்டும்
நகரில் வராத நிலா.
துக்க தினம்
————
இறந்த தலைவன் நினைவில் கொடிகள்
பறக்கப் பகுதி தழைத்து – இறக்கிக்
கயிலி இறுக்கிக் கரத்தில் எடுத்து
வெயிலில் புகையும் சுருட்டு.
மத்தளராயன்