விசுவரூப தரிசனம்.
பாரதிராமன்.

குழந்தை சிரிப்பது அழகு
அது அழுவதும் அழகு
ராமர் வேடம் அழகு
ராட்சத வேடமும் அழகு
அருவி அழகு
வெள்ளமும் அழகு
தென்றல் அழகு
புயலும் அழகு
பசும் வயல்கள் அழகு
பாலைவனமும் அழகு
மலை அழகு
அதைத் தகர்க்கும் நிலநடுக்கம் அழகு
மேடுகள் அழகு
பள்ளங்களும் அழகு
புல் தின்னும் பசு அழகு
பசுவைத் தின்னும் புலியும் அழகு
அடங்குவது அழகு
அடக்குவதும் அழகு
மன்னிப்பது அழகு
தண்டிப்பதும் அழகு
மண ஊர்வலம் அழகு
பிண ஊர்வலமும் அழகு
கற்பகாம்பாள் அழகு
காளிகாம்பாளூம் அழகு
சமனான பார்வையில்
சகலமும் அழகு.
bharathiraman@vsnl.com