நெஞ்சினிலே….

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

வேதா


நான் உனதாகும் திருநாள் ஒருநாள் வருமே
என் மண் உனைச் சேர்ந்து இளமை செழுமை பெறுமே
மனசைக் கெடுத்த மாயமெல்லாம்
அன்று மழையாய் நிஜமாய் வருமே, சுகமாய் சுகங்கள் தருமே

உன் சொந்தம் கொண்ட கழுத்து கன்னிச் சிறையை உடைக்கும்
அதில் தந்தம் காட்டும் பூக்கள் சிரித்துச் சிரித்து மயக்கும்
திறந்து கொண்ட மனதை நீயும் திறக்க முயன்று தோற்பாய்
தீராநதியில் நனைந்து நானும் திருடச் செய்து பார்ப்பேன்
என் விரலில் பதியும் ரேகை உன் நாக்கு நுனியின் நரம்பாய்
மெல்ல உடலில் ஓடும் ரேகை, ஒரு காதல் காதல் எறும்பாய்
விழித்திரையில் உண்மை அறிய நீயும் ஏதோ செய்வாய் குறும்பாய்

கடலும் வானும் போல இந்தக் கன்னிச் சுனையில் கலப்பாய்
நிலவும் குளிரும் போல நீங்காமல் தான் இருப்பாய்
அலையாய் அலையும் மனதை அன்பால் அணைத்துக் கிடப்பாய்
அர்த்தம் தந்த இரவும் தீர அறியாமல் நாம் இருப்போம்
நம் தனிமை இனிமை பார்த்து நிலவும் நின்று போகும்
உன் விழியின் சிவப்பில் குளித்து என் பெண்மை உதயம் ஆகும்
காதல் கவிதை என்னில் எழுதி நீயும் கணவன் ஆவாய் கரும்பாய்

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா