This entry is in the series 20030413_Issue

கிருஷ்ண ஸ்ரீநிவாஸ்


வெறும் நலம் விசாரிப்புகளிலேயே
முற்றுப்பெறுகின்றன நம் உரையாடல்கள்
கரைந்துபோன நேற்றுகளின்
மங்கலான நினைவுகள்
என் நா கடக்கமுடியாமல்
தொண்டைக்குள்ளேயே சிதைந்து போகின்றன
வேறெதும் பேசாமல்
திரும்பி நடக்கையில்
நினைத்துக்கொள்வேன்
நாளையாவது கேட்டுவிடவேண்டும்
அவள் இன்னும் என்னை விரும்புகிறாளா என்று

krish_srinivas@sify.com

Series Navigation