உன்னை நினைத்து………
மலர்வனம்

உன் கவிதை வரிகளில் மூழ்கிய – நான்
இன்னும் விழுந்த குழியில்
புதைந்துக் கிடைக்கின்றேன்.
உன் கனிவு பார்வையில்
மூழ்கிய நான்- உன்னுள்
முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வளர்பிறை போல் உன் நினைவுகள்
என்னுள் பெளர்ணமி நிலவாய்
ஜொலித்துக் கொண்டுத்தான் இருக்கின்றன.
உன்னை உறவென்று நான் நினைத்து
உறவாடி தனிமையில்
தள்ளாடி நின்றேன்
நீ இல்லாததால்……..
உன்னை நினைத்து கனவுகளில்
வண்ண ஒவியங்களாய் – என்
இதயத்தில் வரைந்து சிற்பங்களாய்
வடித்து வைத்திருக்கிறேன்…
உன்னை எண்ணி மெழுகுவர்த்தியாய்
உருகிக் கொண்டிருக்கிறேன் நீ என்னுள்
ஒளு வீசுவதற்காக….
உன் விரல் நகங்களைப் போல்
என்னை வெட்டி விட நினைக்கிறாய்
வெட்டிய நகங்களை சேர்த்து வைத்திருக்கிறேன்
அதையாவது என்னுள் ஒட்டிக் கொள்வதற்காக….
ஐயோ…… சீக்கீரம் வந்து விடுவாயா
என் மன வலிக்கு மருந்தாய்………
malar_vanam@sify.com