திசைகள் – உலகம் தழுவிய மின் இதழ்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மாலன்


யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ்

ஒரு மகிழ்ச்சியான செய்தி. திசைகள் என்றொரு உலகு தழுவிய மின் இதழ் சற்று முன்பு இணையத்தில்

மலர்ந்திருக்கிறது. www.thisaigal.com என்ற முகவரியில் அதை வாசிக்கலாம். அதை வாசிக்க எந்த

எழுத்துருவையும் (fonts) இறக்கிக் கொள்ளத் தேவையில்லை. திசைகள் இணைய தளத்திற்கு நேரடியாகச்

சென்று நேரடியாக வாசிக்கலாம்..திசைகள் ஒரு திங்கள் இதழ்.

திசைகள் ஒர் உலகு தழுவிய மின்னிதழ். உலகம் முழுதும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,

படைப்பாளிகள் பங்கேற்கும் இதழ், திசைகள். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத் தலைவர்,

கல்வியாளர், டாக்டர். மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களது வாழ்த்துடன் துவங்கும் திசைகள் முதல் இதழில்,

வை. திருநாவுக்கரசு (முன்னாள் ஆசிரியர் தமிழ் முரசு-சிங்கப்பூர்) சுஜாதா

(முன்னாள் ஆசிரியர் குமுதம்) மாலன் (ஆசிரியர் சன் நியூஸ்). டாக்டர். காஞ்சனா தாமோதரன்

(அமெரிக்கா) டாக்டர். சண்முக சிவா (மலேசியா) டாக்டர்.நா. கண்ணன் (ஜெர்மனி) முத்து நெடுமாறன்

(மலேசியா) எஸ்.வைதீஸ்வரன், கமல்ஹாசன், கனிமொழி, (அனைவரும் இந்தியாவிலிருந்து) லதா(சிங்கப்பூர்)

அருண் வெற்றிவேல் (பஹ்ரைன்) சீதா முருகேசன் (அமெரிக்கா) ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். உலகின்

எல்லாத் திசைகளிலிருந்தும் பல படைப்பாளிகள் தொடர்ந்து திசைகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.

பாரதியின் இலக்கிய நெறிகளை, மொழி மீதான அணுகுமுறையை, சமூகப் பார்வையைக் கொண்ட திசைகள்

இதழ் அதன் எல்லாப் பகுதிகளுக்கும் அவரது வார்த்தைகளையே தலைப்பாகச் சூடியிருக்கிறது.

தொழில் நுட்ப ரீதியிலும் முற்போக்கானது திசைகள். யூனிகோட் முறையில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ்

திசைகள்.

திரு. மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு எண்பதுகளில் வெளியான திசைகள், பலருக்கு ஒரு

துவக்கமாகவும் திருப்பு முனையாகவும் அமைந்தது. இந்த திசைகள் மின்னிதழுக்கும், கெளரவ ஆசிரியராக

மாலன் வழிகாட்ட முன் வந்துள்ளார்.

இந்த செய்தியை உங்கள் இதழில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அது தமிழ்ப்படைப்பாளிகள்

தங்கள் படைப்பை உலக அரங்கில் முன்வைக்க அவர்களுக்கு உதவும்.

நன்றி

http://www.thisaigal.com

Series Navigation

மாலன்

மாலன்