நான்கு கவிதைகள்
விக்ரமாதித்யன்

ஏன்
எண்ணென்றால்
கணக்கு
எழுத்தெனில்
கவிதை
எண்ணுக்குப் பிறகுதான்
எழுத்தை வைத்திருக்கின்றார்.
**
நிச்சயமற்ற
இருப்பு
நிச்சயமற்ற
வாழ்வு
நிச்சயமற்ற
எழுத்து
நிச்சயிக்கப்பெற்ற
மரணத்துள்.
**
படிக்காது
கெட்டவர்கள் யாருமில்லை
படித்து
கெட்டவர்கள்தாம் பாவம்.
**
நிறுத்த
தெரியாது
தொடங்கத்தான்
முடியும்
**