This entry is in the series 20030323_Issue

மோகனா


கற்பூரமாக சில மூளைகளும்
ஈர விறகுகளாக சில மூளைகளும்
இருக்க தான் செய்கின்றன.

தெளிந்த நீரோடையாக
சிலருக்கும்
குழம்பிய குட்டையாக
பலருக்கும்
எண்ணங்கள்
அமைந்து தான் போகிறது.

அழகிய பூ கோலமாக
சிலரின் வாழ்வும்
குழந்தையின் கிறுக்கல்களாக
சிலரின் வாழ்வும்
சிதறி தான் போகிறது.

தொட்டாச்சினுங்கியாக
சில உள்ளங்களும்
இரும்பு கோட்டையாக
சில உள்ளங்களும்
உலவி கொண்டு
தான் இருக்கின்றன.

சிறந்தது மட்டுமே
வீற்றிருக்க
பூமி ஒன்றும்
சிம்மாசனம் அல்லவே.
நீயும், நானும்
சிறந்ததும், தாழ்ந்ததும்
சேர்ந்து வாழும்
தேன் கூடு.

விளை நிலம் ஒன்றாகிலும்
விளைச்சலில் வேறுபாடுகள்
என்றும் வாடிக்கை.

ஏற்றமும், தாழ்வும்
இயற்க்கை அன்னையின்
இரட்டைக் குழந்தைகள்.

முரன்பாடுகள்
உன் வாழ்க்கை
கூட்டை பிரித்து
வீசாமல் இருப்பதும்
இல்லாததும் உன் கையில் !

***
MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation