திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சொர்க்கம்

This entry is in the series 20040624_Issue

சு.தேவன் மலர், சிங்கப்பூர்


விடைதேடும் வாழ்க்கையில்

உறவுகளை மறந்து

பொருள்தேடிப் பறந்ததால்

சொந்த பந்த பாசங்கள்

நெஞ்சின் ஓரத்தில்

நினைவுகளாய்…

காலங்கள் கரைந்தோட

தேடிவந்த தேவைகளில்

சிற்சில பூர்த்தியாக

அலைபாய்ந்த மனது

நிலை கொண்டு

நிழலாடும் நினைவுகளைப்

புரட்டிப் பார்க்க…

பூட்டிவைத்த பெட்டிக்குள்

மூடிவைத்த காகிதத்தில்

உறவுகளின் இடம் தேடி

ஒவ்வொன்றாய் கண்டுபிடித்து

தொலைபேசி வழியழைக்க

உண்மையோ, பொய்யோ

அன்பாய் சில வார்த்தைகள்

வந்து விழுந்த வேகத்தில்

ஒலிவாங்கியின் இருமுனையும்

சில நிமிடம் மெளனமாய்..

மகிழ்ச்சியில் திளைத்தமனம்

உரக்கச் சொன்னது

சொந்தங்கள் என்றும்

‘சொர்க்கம் ‘ தான் என்று!


chennai1980@yahoo.com

Series Navigation

About சு.தேவன் மலர், சிங்கப்பூர்

சு.தேவன் மலர், சிங்கப்பூர்

View all 1 articles →

சொர்க்கம்

This entry is in the series 20030904_Issue

பவளமணி பிரகாசம்


பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் பக்கத்து இருக்கைக்காரரை
பரவாயில்லை பயணம் சிறிது தூரந்தான்;
பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் அடுத்த வீட்டுக்காரரை
பரவாயில்லை பெரிய இழப்பில்லைதான்;
பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் ஆட்சி செய்பவரை
பரவாயில்லை தேர்தல் வந்துவிடும்தான்;
பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் செய்யும் தொழில்
பரவாயில்லை மாற்றிக் கொள்ளலாம் பணியை;
கைபிடித்த துணையை பிடிக்காமல் போகாமல்
புரிதலுடன், காதலுடன் வாழப் பழகிட்டால்
அதுதான் பூலோக சொர்க்கம்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

About பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

View all 124 articles →