This entry is in the series 20030904_Issue

கார்திக் வேலு


எனக்கும் என் அறைக்குமான ஜன்னல்
சேர்ந்தே திறக்கிறது
சுவற்றில் தொங்கும் கிழிக்கப்படாத தினக் காலண்டர்
நான் ஏதோ சொன்னதாகவும் –
புரிந்ததாகவும்
மெல்லத் தலை ஆட்டுகிறது.

என் உள்ளங்கால்களின் கதகதப்பை உணர்கின்றன
சுருண்டு கிடக்கும் மாடிப்படிகள்.
நகம் வெட்டி முகம் கழுவியபின் விரும்பத்தக்கதான
புத்துணர்சி திரும்புகிறது

அதிகாலை நேரத்துக் காட்சிகள்
அருமையான தெளிவும் பாராட்டத்தக்க அமைதியும்
உடையதாயிருக்கிறது

இவை கடந்து
புத்தகங்களின் படித்து முடித்த
பக்கங்களின் பாரம் உணர்கையிலே ….
வீசத் தொடங்குகிறது ….
என் தேனீர்க் கோப்பையிலான புயல்.

கார்திக் வேலு
karthikvelu@yahoo.com

Series Navigation