இரவு.
அருண்பிரசாத்.

ஓருயிரணுவாய் பரவுகிறேன்.
சூலுற்ற இரவினின்று
வெடித்துக் கிளம்பி.
திசைக்கொன்றாய் சிதறி
மறையும் உன் நினைவுப் பொறிகளினூடே
ஒரு மின்னலாய் பயணிக்கிறேன்.
ஊழியின் வெளிநிறை
அதிர்வு மையத்தில்
ஒரு மெளனமாய் உறைகிறேன்
அதிகாலையில்.
அருண்பிரசாத்.
everminnal@yahoo.com