This entry is in the series 20030302_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
இலக்கியம் பேசுவார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
இலக்கிய சந்திப்பு நிகழ்த்துவார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
இலக்கியக்கூட்டம் போடுவார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
இலக்கியம் படிப்பார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
இலக்கிய கூத்து நடத்துவார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
வேறுமனுஷனாகவே ஆகிவிடுவார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமையை
எதிர்பார்த்தே வாழ்கிறார்கள்
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

ஞாயிற்றுக்கிழமைதான் வராமல் போகுமா
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்தாம் சும்மா இருப்பார்களா
ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகளை நம்பித்தானே நவீன இலக்கியமும்

Series Navigation