பரு
வேதா மஹாலக்ஷ்மி

காயும், காயும் என்றெதிர்பார்த்து
முற்றிப் போய்
பழுக்கவும் அனுமதித்து,
தழும்பாகிடாது
சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து,
வலுவில வலியை மறந்திருந்தாலும்…..
எதேச்சையாய் விசிறியடிக்கும்
நீரலையில் நினைவலையில்,
முனை கொஞ்சம் அசைந்து
வேர் வரை வலிக்கிறது….
பருவைப் போல , உன் பேச்சும்!!!
veda
piraati@hotmail.com