திருப்பிக்கொடு
விஜய் ஆனந்த் சி

உன்னை முதலில் பார்த்ததும் என்னை மறந்தேன்
என்னை மறந்த வேளை என் இதயம் திருடினாய்
வேல் விழி ஆயுதம் காட்டி சிறை செய்தாய்
காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை!
குயில் பேசியதும் நாட்டியம் நடந்ததும்
சுடர் விழிப்பார்வையால் பாறையைப் பனியாக்கியதும்
உன்னில் நான் கண்ட உலக அதிசயங்கள்!
சொல்ல நினைத்த நேரம் வார்த்தைகள் போயின தூரம்
சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லியது கண்களின் ஈரம்
மாயமாய் மறைந்துவிட்டாய் என் மனதை மயானமாக்கி!
என் இன்னல் தீர்க்க இதயத்தை திருப்பிக்கொடு
துக்கம் களைய தூக்கத்தை திருப்பிக்கொடு!
vijayanandc@hotmail.com