This entry is in the series 20030209_Issue

பத்மாசினி


நிஜத்தில் தொலைத்ததைக்
கனவிலும்
கனவில் தொலைத்ததை
நிஜத்திலும்
தேடித் தேடி..
அலுத்துவிட்டது உள்ளம்
தொலைத்தது எது என்று புரியாமல்
திகைப்பில் மூழ்கும்
பரிதவித்துப் போகும் மனம்
அது ஒரு பொருளுமல்ல
அது ஒரு உறவுமல்ல
அது ஒரு உணர்வுமல்ல
தொலைந்தது நிஜம்
அதைத் தேடித் தேடி
நிஜத்தில் அலைந்து
கனவில் பறந்து
பின்னும் திகைத்த போது
வாழ்க்கை
தொலைந்திருந்தது.

***

padmasini2003@yahoo.com

Series Navigation