This entry is in the series 20030209_Issue


தேவையான பொருட்கள்

1 கோழி ( 900 கிராம்)

1 மேஜைக்கரண்டி கசகசா (பாப்பி விதைகள்)

1 முழு பூண்டு (பற்களாகப்பிரித்துக்கொண்டது)

1 கோப்பை சின்ன வெங்காயம் துண்டாக நறுக்கியது

1 தேக்கரண்டி கறி பவுடர்

2 -3 தேக்கரண்டி உப்பு

2 பச்சை மிளகாய்

1/2 மூடி தேங்காய்

5செமீ துண்டு இஞ்சி

4 மேஜைக்கரண்டி நெய்

5 கிராம்பு

5 செமீ பட்டைத்துண்டு

10 முந்திரி

10 பாதாம்

450 கிராம் பாஸ்மதி அரிசி

செய்முறை

கோழியை 6 அல்லது 8 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

நெய்யை சூடாக்கி கிராம்பு, பட்டை சின்ன வெங்காயம் ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இத்துடன் கோழித்துண்டங்களைப் போட்டு 1 தேக்கரண்டி உப்பு, அரைத்த கலவை, கறி பவுடர் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.

கலவையை கலக்கி 10 நிமிடங்கள் வேகவைக்கவும்

1 அல்லது 2 கோப்பை தேங்காய்ப்பாலை தேங்காயிலிருந்து எடுத்து உப்பு சேர்த்து கழுவிய அரிசியோடு சேர்த்து வேக வைக்கவும்

பாலெல்லாம் அரிசியால் உறிஞ்சப்பட்டதும், மையத்தில் ஒரு இடம் ஏற்படுத்தி இதினுள் வேகவைத்த கோழி கலவையை அதில் மையத்தில் ஊற்றவும்.

இதனை மூடி, அரிசி வேகும்வரைக்கும் மெதுவான தீயில் வேகவிடவும்.

Series Navigation