நான் மட்டும்
மலர்வனம்

உன்
புன்னகைப் பூரிப்புக்குள்
புதையலாய் நான் மட்டும்…….
உன்
சிறுத்துளிக் கண்ணீருக்குள்
சிதறியத் துளிகளாய் நான் மட்டும்…..
உன்
வருத்தத்தில் மறைந்த
வார்த்தையாய் நான் மட்டும்…..
உன்
பார்வையின்
கருவிழிக்குள் நான் மட்டும்……
உன்
இதயத்தில் ஓலிக்கும்
துடிப்புக்குள் நான் மட்டும்……
உன்
ஒவ்வொரு உணர்ச்சிக்குள்
உள் உணர்வாய் நான் மட்டும்……
உன்
கனவில்
கலையா உருவாய் நான் மட்டும்…..
நீ நானாக மாறும் வரை
நான் நானாகத் தான்…….
malar_vanam@sify.com