This entry is in the series 20030619_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


ஒரு புத்தகந்தான்
எததனை விதமாய் உதவுகிறது

வரவேற்பறையில் பார்வைக்கு வைக்க

கெளரவமாய் கையோடு கொண்டு செல்ல

தூறலில் குழந்தை நனையாமல் தடுக்க

பவுடர் பல்பொடி மடிக்க
அடுப்பு பற்ற வைக்க
அப்பப்போ கிழிக்க

முக்கியமான காகிதங்களைப் பத்திரப்படுத்த
..
..
ஆமாம், படிக்க வாங்கி வந்தவன் … ?

தலைக்கு வைத்து
படுத்துக்கொண்டிருக்கிறான்.

gk_aazhi@rediffmail.com
thigopalakrishnan@ambalam.com

Series Navigation