சின்னச் சின்னதாய்…

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

மீ.வசந்த்,தாய்லாந்து



1) தவறுகள்

பூக்களைப் பறிக்காமல்
வேர்களைப் பிடுங்கி,
மரணத்தின் கணக்கெழுதும்
மனமில்லா கடவுள்கள்.


2) சுயநலத்தில் பொதுநலம்

குளத்தில்
கல்லெறியும் போது,
காயப்படுபவை
கரைகளும் தான்.


3) உறுத்தல்

முல்லைக்குத் தேரீந்த பாரி!! ?,
மயிலுக்குப் போர்வை தந்த பேகன்!! ?,
..!!.. ? ?..!!.. ? ?,
ம்..வஞ்சப்புகழ்ச்சியணி.


MSV001@MAERSKCREW.COM

Series Navigation

சின்னச் சின்னதாய்…

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

ஆ. மணவழகன்


ஆம்!
நீயேதான்,
காட்டிக்கொடுத்தது
உன் கொலுசு!

*

விடியலே ..
சற்றே பொறு,
கனவில் என்னவள்!

*

தினமும் நீ தொட்டதால்
சிவந்து போனது,
குளியல் அறையில்
ஒற்றை மஞ்சள்!

*

கொஞ்சம் ஈரம்,
கொஞ்சம் காதல்,
உன் ஓரப்பார்வை;

கொஞ்சம் தென்றல்,
கொஞ்சம் புயல்,
என் சிறு இதயம்;

*

தென்றலே மெல்ல ! மெல்ல!
என்னவள் கூந்தலில்
ஒற்றை ரோஜா

*

ஒதுங்கிப் போனாய் நீ
உள்ளே வந்து போனது
உன் நிழல்!

*

a_manavazhahan@hotmail.com

Series Navigation